David Pieris Automobiles நிறுவனம் BAIC மற்றும் GWM வாகனங்களுக்கான நிதித் தீர்வுகளை மேம்படுத்த Nations Trust வங்கியுடன் கைகோர்த்தது

David Pieris Group of Companies நிறுவனத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Private) Limited (DPA) நிறுவனம், BAIC மற்றும் GWM வாகனங்களுக்கான நெகிழ்வான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வாகன நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக Nations Trust Bank PLC உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது.

இந்த ஒத்துழைப்பானது, DPA நிறுவனத்தின் பரந்த வாகனத் தெரிவுகளையும் Nations Trust வங்கியின் புத்தாக்கமான நிதிச் சேவைகளையும் இணைப்பதன் மூலம், வாகனங்களை சொந்தமாக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மற்றும் நிதி வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மையானது, இரு நிறுவனங்களின் பலத்தையும் ஒன்றிணைத்து, பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்கு தடையற்ற, திறனான மற்றும் சிக்கனமான நிதித் தெரிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம், Nations Trust வங்கியின் நுகர்வோர் மற்றும் பெருநிறுவன வங்கிப் பிரிவுகளின் ஆதரவுடன் நெறிப்படுத்தப்பட்ட நிதிச் செயன்முறையினால் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். இந்த ஒத்துழைப்பானது, வாகனக் கொள்வனவிற்கான ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தி, அதை மிகவும் வசதியானதாகவும் எளிதில் அடையக்கூடியதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

David Pieris Automobiles நிறுவனம் தற்போது இலங்கை வாடிக்கையாளர்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட BAIC மற்றும் GWM உள்ளிட்ட வாகன வர்த்தகநாமங்களை சந்தைப்படுத்தி வருகிறது. BAIC வரிசையில் BAIC X55, BJ30, BJ40 போன்ற மாதிரிகளும், GWM தயாரிப்புகளில் Tank 300 HEV, Tank 500 HEV, Haval GT PHEV, Haval H6 PHEV, Haval H6 HEV போன்ற பிரபலமான மாதிரிகளும் உள்ளடங்குகின்றன. இவை செயல்திறன், சௌகரியம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிவமைப்பு ஆகியவற்றின் கலவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

இந்த கூட்டாண்மை குறித்து, DPA செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், “David Pieris Automobiles நிறுவனமாகிய நாம், வாகனங்களுக்கு அப்பால், மதிப்பையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம். Nations Trust வங்கியுடனான இந்த கூட்டாண்மையானது, எமது வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான நிதித் தீர்வுகளை வழங்க உதவுகிறது. ஒரு வாகனத்தை சொந்தமாக்கும் வாய்ப்பை இது எளிதாக்குவதுடன், சுமூகமான மற்றும் நம்பகமான அனுபவத்தையும் உறுதி செய்கிறது.” என்றார்.

இந்த மூலோபாய கூட்டணியானது, இலங்கை வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், புத்தாக்கம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சேவை வழங்குவதில் சிறந்து விளங்குவதற்கான David Pieris Automobiles நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலதிக விபரங்களுக்கு DPA நிறுவனத்தை 0114 700678 (BAIC) அல்லது 0117 888 666 (GWM) மூலமாகவும், Nations Trust வங்கியை 0114 711 411 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Caption

David Pieris Automobiles நிறுவனத்தின் பணிப்பாளர் மஹேஷ் குணதிலக, NTB குழுவினருடன் உடன்படிக்கையை பரிமாறிக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *