உலகளாவிய வாகனத் துறையானது, மின்சார வாகனங்களை (EV) நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பகமான aftersales (விற்பனைக்குப் பின்னரான) சேவைகளுக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பின்னணியில், இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவை அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அண்மையில் ‘Mercedes-Benz Flying Doctor Service Clinic 2026’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
Mercedes-Benz AG நிறுவனத்தினால் பயிற்சி அளிக்கப்பட்ட நிபுணரான பிசியான் சிட்பஞ்சோங் (Phisian Chitbanchon) தலைமையில் நடைபெற்ற இந்த Flying Doctor Service Clinic ஊடாக, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு மற்றும் துல்லியமான பழுது கண்டறியும் வசதிகள் நேரடியாக வழங்கப்பட்டன. ஏப்ரல் 06 முதல் 10 வரை தொடர்ச்சியாக தினமும் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தொழிற்சாலை மட்டத்திலான (factory-level) நிபுணர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நேரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபருக்குமான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முழுமையான வாகனப் பரிசோதனைகள் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட சேவை அனுபவம் வழங்கப்பட்டது. இது இலங்கையில் ‘The Home for Mercedes-Benz’ எனும் DIMO நிறுவனத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில், Mercedes-Benz EQ மின்சார வாகனங்கள் மீது செலுத்தப்பட்ட விசேட கவனமாகும். இது DIMO நிறுவனத்தினால் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட, EQ கார்களுக்காகவே ஒதுக்கப்பட்ட Flying Doctor Service Clinic என அழைக்கலாம். உள்நாட்டில் அதிகரித்து வரும் மின்சார வாகனப் பயன்பாடு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலைபேறான போக்குவரத்து மீதான போக்கைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட காலத்திற்கேற்ற நடவடிக்கையாக இது அமைந்தது. மின்சார வாகனங்களில் தொழில்நுட்ப சிக்கல் தன்மை அதிகம் என்பதால், மென்பொருள் சார்ந்த பகுப்பாய்வுகள், விசேட பிரச்சினைகளை அறிதல் மற்றும் மின்கல முகாமைத்துவ அறிவு ஆகியன அவசியமாகின்றன. இந்தத் திட்டத்தின் ஊடாக, Mercedes-Benz வாகனங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் அவற்றின் நீண்ட ஆயுளைப் பாதுகாப்பதற்கான சரியான தொழில்நுட்ப ஆதரவை DIMO வழங்கியுள்ளது.
இந்நிகழ்வு குறித்து DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions (வாகனப் பொறியியல் தீர்வுகளுக்கான) பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “மின்சார வாகனங்கள் என்பது டிரைவ்ட்ரெய்ன் (drivetrain) தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம் மாத்திரமல்ல. இது வாகன வடிவமைப்பு, பராமரிப்பு மற்றும் பயன்பாட்டையே மாற்றும் ஒரு அடிப்படைப் பரிணாமமாகும். Flying Doctor Service Clinic போன்ற திட்டங்கள் ஊடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தொழில்நுட்ப ஆதரவை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.
தற்போதைய எரிபொருள் சவால்கள் மற்றும் உலகளாவிய வலுசக்திப் பிரச்சினைகள் நிலவும் வேளையில், மின்சார வாகனப் பயன்பாடு என்பது எதிர்கால தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு காலத்தின் தேவையாக மாறியுள்ளது. DIMO நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை வெற்றிகரமாக பராமரிப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் ஊடாக, Mercedes-Benz AG வர்த்தகநாமத்தின் உலகளாவிய நிபுணருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள கிடைத்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெரிதும் பாராட்டினர். பிரத்தியேகமான கவனிப்பு, தெளிவான ஆலோசனைகள் மற்றும் Flying Doctor குழுவின் தொழில்முறைச் சேவை ஆகியவற்றின் மூலம், DIMO நிறுவனத்தின் சேவைகள் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. மேலும், DIMO நிறுவனத்தின் சேவைகள் குறித்து பரிந்துரை செய்ய வாடிக்கையாளர்கள் காட்டிய ஆர்வமானது, அவர்கள் DIMO மீது கொண்டுள்ள நீண்டகால விசுவாசத்தைப் பிரதிபலித்தது.
அதேபோல், பல்வேறு EQ வாகன மாதிரிகளின் தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் உதவியது. இது வாகனத்தின் இயக்கம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவியது. இதில் மிக விசேடமான விடயம் யாதெனில், தமது வாகனங்களுக்கு உற்பத்தியாளர் மட்டத்திலான நிபுணத்துவ ஆதரவு கிடைக்கிறது எனும் பலமான நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்கள் விடைபெற்றுச் சென்றமையாகும்.
Flying Doctor Service Clinic போன்ற முயற்சிகள் மூலம் Mercedes-Benz நிறுவனம் தனது புத்தாக்க பாரம்பரியத்தை, அர்த்தமுள்ள வாடிக்கையாளர் மதிப்பாக எவ்வாறு மாற்றுகிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இலங்கையில், இந்த அர்ப்பணிப்பு DIMO நிறுவனத்தின் நம்பகமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனைக்குப் பின்னரான சேவைகள் மூலம் உயிர் பெறுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு Mercedes-Benz வாகனமும் இணையற்ற தரம் மற்றும் தொழில்நுட்ப சிறப்புடன் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வாகனத் துறை எவ்வாறு மாறினாலும், முதன்மை நோக்கம் மாறாமல் இருக்கும் என்பதோடு, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், நம்பகமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே DIMO நிறுவனத்தின் நோக்கமாகும்.