David Pieris Automobiles மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியன இணைந்து GWM மற்றும் BAIC வாகனங்களுக்கு விசேட லீசிங் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளன

David Pieris Group of Companies இன் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Pvt) Ltd., கொமர்ஷல் வங்கியுடன் மூலோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இப்பங்காண்மையினூடாக, இலங்கையில் GWM மற்றும் BAIC வாகனத் தெரிவுகளுக்காக விசேடமாக கட்டமைக்கப்பட்ட லீசிங் தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் வியாபித்திருக்கும் வாகனங்கள் சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதி, அணுகல் திறன் மற்றும் வசதி ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்காக இரு நிறுவனங்களினதும்  பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த கைகோர்ப்பு மீள உறுதி செய்துள்ளது.

இப்பங்காண்மையினூடாக, David Pieris Automobiles இனால் சந்தைப்படுத்தப்படும் GWM மற்றும் BAIC வாகனங்களுக்கு நெகிழ்ச்சியான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய லீசிங் தெரிவுகள் வழங்கப்படுகின்றன. இந்த உடன்படிக்கையின் கீழ், தெரிவு செய்யப்பட்ட வாகன மாதிரிகளை கொள்வனவு செய்வதற்காக கொமர்ஷல் வங்கியினால் தனது நாடளாவிய லீசிங் வலையமைப்பினூடாக லீசிங் வசதிகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், ஆவணப்படுத்தல் கட்டணங்களில் சலுகைகள் மற்றும் முதல் வருடத்திற்கான வருடாந்த கட்டணம் விலக்கு அளிக்கப்பட்ட இலவச கிரெடிட் கார்ட் ஒன்றை பெற்றுக் கொள்ளும் வசதி போன்றன கிடைக்கும். தனிநபர்களின் வருமானத்திற்கமைய மீளச் செலுத்தல் தீர்மானிக்கப்பட்டு கட்டமைக்கப்படும். அதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது நிதிகளை பெருமளவு சுலபமாகவும், நிலைபேறாண்மையாகவும் நிர்வகித்துக் கொள்ள முடியும்.

David Pieris Automobiles சந்தைப்படுத்தும் BAIC தெரிவுகளில் BAIC X55, BAIC BJ30 மற்றும் BAIC BJ40 ஆகியனவும், GWM மாதிரிகளான Haval H6 HEV, H6 PHEV, H6 GT PHEV, TANK 300 HEV, TANK 500 HEV மற்றும் ORA electric வாகனங்களும் அடங்கியுள்ளன. நிதிவசதியளிப்புடன் இவற்றுக்கு பரந்தளவு பெறுமதி சேர் அனுகூலங்களும் வழங்கப்படும். இதில் இலவச வாகன பதிவு மற்றும் இரு ஊழியர் கட்டணமற்ற பராமரிப்பு சேவைகள் அடங்கியுள்ளதுடன், அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த உரிமையாண்மை அனுபவம் வழங்கப்படுகிறது.

ஊக்குவிக்கப்படும் மாதிரிகளில் உற்பத்தியாளரின் உத்தரவாதங்கள் இந்தப் பங்காண்மையினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. GWM hybrid மற்றும் plug-in hybrid தெரிவுகளுக்கு ஆறு வருடங்கள் அல்லது 200,000 கிலோ மீற்றர்கள் வரை உத்தரவாதம் வழங்கப்படுவதுடன், பற்றரி உத்தரவாதங்கள் எட்டு வருடங்கள் வரை அல்லது 160,000 கிலோமீற்றர்கள் வரை வழங்கப்படுகிறது. அதனூடாக நீண்ட கால நம்பிக்கை மற்றும் மனநிம்மதி பெறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள BAIC மாதிரிகளின் என்ஜின் உத்தரவாதம் மூன்று வருடங்கள் அல்லது 100,000 கிலோ மீற்றர்களாக அமைந்துள்ளன.

1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமான சந்தை மூலதனவாக்கத்தை எய்திய இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன், உலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாகவும் அமைந்துள்ளது. கொமர்ஷல் வங்கி, இலங்கையின் சகல வங்கிகளுக்கிடையில் உயர் மூலதன இருப்பை பேணுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மாபெரும் தனியார் துறை கடன் வழங்குனராக வங்கி திகழ்வதுடன், நாட்டின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவின் மாபெரும் நிதிச் சேவைகள் வழங்குனராகவும் அமைந்துள்ளது. நாட்டினுள் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னிலை வகிப்பதுடன், இலங்கையின் முதலாவது 100% காபன் நடுநிலை வங்கியாகவும் (100% carbon-neutral bank) அமைந்துள்ளது.

நாட்டின் முக்கியத்துவமான பகுதிகளில் கிளைகளை கொண்டுள்ள கொமர்ஷல் வங்கி, தன்னியக்க இயந்திர வலையமைப்பையும் நாடு முழுவதிலும் கொண்டுள்ளது. இலங்கையின் வங்கிகள் மத்தியில் பரந்தளவு சர்வதேச பிரசன்னத்தையும் கொண்டுள்ளது. அதன் சர்வதேச பிரசன்னத்தில் பங்களாதேஷில் 20 கிளைகள் காணப்படுவதுடன், மாலைதீவுகளில் முழு அளவிலான நிலை 1 வங்கிச் சேவை வழங்குனராக திகழ்கிறது. மியன்மாரில் நுண்நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக அமைந்திருப்பதுடன், துபாய் சர்வதேச நிதி நிலையத்தில் (DIFC) பிரதிநிதித்துவ அலுவலகத்தைக் கொண்டுள்ளது.  வங்கியின் முழு உரிமையாண்மையில் இயங்கும் துணை நிறுவனங்களில் CBC ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் கொமர்ஷல் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியன அடங்கியுள்ளதுடன், தனது சொந்த கிளை வலையமைப்பினூடாக பரந்தளவு நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் 2027 ஜனவரி 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வாகன உரிமையாண்மை தொடர்பில் நெகிழ்ச்சியான நிதிவசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பெறுமதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்திருக்கும். இந்தப் பங்காண்மையினூடாக, David Pieris Automobiles மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியன புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகள் மற்றும் நிதி வசதியளிப்பு தீர்வுகளை வழங்குவதில் தமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளதுடன், இலங்கையில் மோட்டார் வாகன உரிமையாண்மையை கொண்டிருக்க எதிர்பார்ப்போரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0114700678 (David Pieris Automobiles) அல்லது 0112353353 (கொமர்ஷல் வங்கி) உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

படம்

David Pieris Automobiles விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் யசந்த அபேகோன், உடன்படிக்கையை கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கியியல் உதவி பொது முகாமையாளர் கபில லியனகே உடன் பரிமாறிக் கொள்வதையும், அருகில் இரு நிறுவனங்களின் அதிகாரிகள் காணப்படுவதையும் காணலாம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *