வர்த்தக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான Bybit, இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர்களிடையே நிதிசார் அறிவை மேம்படுத்தவும், பொறுப்பான முறையில் சந்தையைப் புரிந்துகொள்ள உதவவும் வகையிலும் ‘Mastering the Markets’ நிறுவனத்துடன் இணைந்து முழுமையான அனுசரணையுடனான சந்தைக் கல்வித் திட்டத்தை (market literacy education initiative) ஆரம்பித்துள்ளது.
இந்த இணையவழித் திட்டமானது, நிதிச் சந்தைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்த முறையான ஒரு அடித்தளத்தை உருவாக்குவதையும், துல்லியமான மற்றும் பொறுப்பான நிதித் தகவல்தொடர்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்ணப்பம் அடிப்படையின் மூலம் தெரிவு செய்யப்படும் பங்கேற்பாளர்கள், சந்தை கட்டமைப்பு (Market Structure), தொழில்நுட்ப பகுப்பாய்வு அடிப்படைகள், இடர் விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கநெறியான முடிவெடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய 10 வார காலம் கொண்ட முறையான பாடநெறியை பயிலும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த பாடத்திட்டமானது, சந்தை நடத்தை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் முக்கிய கோட்பாடுகளான விலை நகர்வுகள் (Price Action), போக்குகள் (Trends), ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகள் (Support and Resistance) மற்றும் இடர் முகாமைத்துவம் (Risk Management) போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.இந்த திட்டமானது கல்வி சார்ந்த நோக்கத்தை மட்டுமே கொண்டதோடு, எவ்வித நிதி, முதலீடு அல்லது வர்த்தக ஆலோசனையும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பாடத்திட்டத்தில் சில உதாரணங்கள் டிஜிட்டல் சொத்து சந்தைகளை எடுத்துக் கூறிய போதிலும், இதில் கற்பிக்கப்படும் பகுப்பாய்வு முறைகள் உலகளாவிய ரீதியிலான அனைத்து நிதிச் சந்தைகளுக்கும் பொருந்தக்கூடியவை. படைப்பாளர்கள் தங்களின் பார்வையாளர்களுக்கு நிதி ரீதியான கருத்துக்களை தெளிவாகவும் பொறுப்புடனும் தொடர்புகொள்வதற்குத் தேவையான ஆழமான புரிதலை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து, ‘Mastering the Markets’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம கல்வி அதிகாரி டேவிட் பேர்ட் (David Bird) கருத்துத் தெரிவிக்கையில், “இந்த 10 வார திட்டம் படைப்பாளர்கள் தங்கள் சந்தை அறிவை வலுப்படுத்தவும், சந்தைகளுடன் பொறுப்புடனும் நீண்ட காலமாகவும் இணைந்திருப்பதற்கான அறிவையும் நம்பிக்கையையும் பெற உதவும். வலுவான அடித்தளங்கள் மற்றும் நெறிமுறையான சிந்தனையில் கவனம் செலுத்துவதன் மூலம், சந்தைகளுடன் பொறுப்புடனும் நீண்ட காலத்திலும் ஈடுபடுவதற்குத் தேவையான அறிவையும் நம்பிக்கையையும் மக்கள் வளர்க்க நாம் உதவுகிறோம்.” என்றார்.
அதேபோல், Bybit நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் நாசர் டைமோஷ்சுக் (Nazar Tymoshchuk) குறிப்பிடுகையில், ”நிதிச் சந்தைகளில் மக்கள் ஈடுபடும் விதம் குறித்த முறையான கற்றலுக்கு இந்தக் கல்வித் திட்டம் ஒரு தெளிவான அடித்தளத்தை வழங்கும். இந்த முயற்சியானது, படைப்பாளர்களுக்கு தெளிவான, பாடத்திட்ட அடிப்படையிலான அடித்தளத்தை அணுக உதவுவதன் மூலம் கட்டமைக்கப்பட்ட கற்றலை வழங்குகிறது. இதன் மூலம் அணுகக்கூடிய வகையிலான மற்றும் பொறுப்பான முறையிலான தொடர்பாடலை மேற்கொள்ள உதவியாக அமையும்.” என்றார்.
தங்களையும் தங்களைச் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் உள்ள, இலங்கையில் உள்ள முன்னனி கருத்து உருவாக்குனர்கள் (KOLs) இதில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. பாரம்பரிய நிதிச் சந்தைகள் மற்றும் டிஜிட்டல் சொத்துகள் ஆகிய இரண்டையும் பற்றிய கல்வியை வழங்குவதன் மூலம், உலகளாவிய சந்தை நடத்தை பற்றிய பரந்த அறிவைப் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள்.
பாடநெறியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சந்தை இயக்கவியல் மற்றும் முறையான சந்தைப் பகுப்பாய்வு முறைகள் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவார்கள். இலங்கையின் படைப்பாளர்கள் மத்தியில் துல்லியமான மற்றும் பொறுப்பான நிதி உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பார்கள். ஆர்வமுள்ள படைப்பாளர்கள் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவத்தின் மூலம் தங்களின் விபரங்களைச் சமர்ப்பிக்கலாம். இலங்கையின் படைப்பாளர் சமூகத்திற்குள் அதிக கல்வி, துல்லியமான மற்றும் பொறுப்பான நிதி உள்ளடக்கத்தை உருவாக்குவதை ஆதரிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூகத்தை மையமாகக் கொண்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முந்தைய முயற்சிகளைத் தொடரும் வகையில், சிறப்பாக நிறுவப்பட்ட சந்தை கல்வி வழங்குனர்களுடனான கூட்டாண்மைகள் மூலம், கல்வியை மையமாகக் கொண்ட Bybit ஈடுபாட்டுடனான தொடர்ச்சியான முதலீட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.
இது குறித்து ஆர்வமுள்ள இலங்கையின் படைப்பாளர்கள் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவத்தின் மூலம் தங்களது விபரங்களைச் சமர்ப்பிக்கலாம். தெரிவு செய்யப்படும் பங்கேற்பாளர்கள் தனித்தனியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள். இது தொடர்பான மேலதிக விபரத்தை இந்த இணைப்பின் ஊடாக பெறலாம்.
#Bybit / #TheCryptoArk / #IMakeIt