Evolution Auto அறிமுகம் செய்யும் Riddara RD6 Active: இலங்கையின் புதிய தலைமுறைக்கான கட்டுப்படியான விலையிலான மின்சார டபள்-கெப்

இலங்கையின் முன்னணி மின்சார வாகன வழங்குநரான Evolution Auto நிறுவனம், நாட்டில் புத்தம் புதிய மின்சார டபள்-கெப் பிக்கப் (double-cab pickup) வாகனமான Riddara RD6 Active இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற BMICH மோட்டார் வாகன கண்காட்சியில் இது வெளியிடப்பட்டது. பிக்கப் வாகனத்தின் பயன்பாட்டுத் திறனையும், SUV போன்ற வசதியையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள RD6 Active வாகனமானது, இலங்கை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் மின்சார டபள்-கெப் வாகனங்களை கட்டுப்படியான விலையிலும் எளிதில் பெறக்கூடியதாகவும் மாற்றுவதில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.

இதே பிரிவில் உள்ள மிகவும் கட்டுப்படியான விலையிலான மின்சார பிக்கப் வாகனமாகத் திகழும் Riddara RD6 Active வாகனமானது, வசதி, செயற்பாட்டுத் திறன், அன்றாடப் பயன்பாடு ஆகிய அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தியவாறு, சக்திவாய்ந்த மின்சார சக்தியுடன் இயங்குகிறது. இதன் மூலம் இலங்கை இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், குடும்பங்கள் மற்றும் சாகச விரும்பிகளின், நாளாந்தம் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற மின்சார தளத்தில் (electric platform) உருவாக்கப்பட்டுள்ள Riddara RD6 Active வாகனமானது, வழக்கமான பிக்கப் வாகனத்தை விட SUV போன்ற மிருதுவான மற்றும் தன்னம்பிக்கை தரக்கூடிய வாகனம் செலுத்தும் அனுபவத்தை வழங்கும் அதே நேரத்தில், ஒரு டபள்-கெப் வாகனத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 373 கி.மீ. வரை பயணிக்கும் வசதியைக் கொண்டுள்ளதால், அன்றாடம் வேலைக்குச் செல்வதற்கும், வார இறுதியிலான பயணங்களுக்கும் இது மிகவும் பொருத்தமானதாகும்.

Apple CarPlay வசதியுடன் கூடிய தகவல்களை வழங்குகின்ற மற்றும் பொழுதுபோக்கிற்குமான 8 அங்குல டிஜிட்டல் திரை, சாரதிக்கான டிஜிட்டல் கருவித் தொகுதி, மின்சாரத்தால் இயங்கும் சாரதி ஆசனம், லெதர் இருக்கைகள் மற்றும் 17 அங்குல அலோய் டயர்கள் என பல்வேறு நவீன வசதிகளை இவ்வாகனம் கொண்டுள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இலங்கை வீதிகளில் நிம்மதியான பயணத்தை உறுதி செய்வதுடன், துரித சார்ஜிங் வசதியானது (fast charging) வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வசதியையும் வழங்குகிறது.

எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் சூழலில், பாரம்பரிய டீசல் டபள்-கெப் வாகனங்களுக்கு ஒரு சிறந்த மாற்றீடாக RD6 Active அமைகிறது. முறுக்கத்திலோ (torque) அல்லது வீதிகளில் அதன் கம்பீரமான தோற்றத்திலோ எவ்வித விட்டுக் கொடுப்பையம் மேற்கொள்ளாமல், டீசல் வாகனங்களை விட மிகக் குறைந்த பயன்பாட்டு மற்றும் பராமரிப்புச் செலவுகளை இது கொண்டுள்ளது. அத்துடன் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் அமைதியான, மென்மையான பயணத்தை இது உறுதி செய்கிறது.

மின்சார டபள்-கெப் வாகனங்கள் சக்திவாய்ந்தவையாகவும், நடைமுறைக்கு ஏற்றவையாகவும், உள்ளூர் வீதி நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவையாகவும் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், பொதுவாக மின்சார வாகனங்கள் (EV) தொடர்பில் காணப்படும் தவறான புரிதல்களை RD6 Active மாற்றியமைக்கிறது. இலங்கையில் அதிகரித்து வரும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீடுகளிலேயே சார்ஜிங் செய்யும் வசதி போன்றவை காரணமாக, மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு மாறுவது எளிதாகி வருன்றது.

நம்பகமான உத்தரவாதம், வெளிப்படையான சேவை வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சி பெற்ற மின்சார வாகன நிபுணர்கள் ஆகியன காரணமாக, Evolution Auto தனது நீண்டகால அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் Riddara வர்த்தகநாமத்திற்கு வழங்குகிறது. பேலியகொடையில் அமைந்துள்ள விசேடத்துவம் வாய்ந்த EV  வாகன சேவை மையம் மூலம், நம்பகமான மற்றும் நீண்டகால ஆதரவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளப்படுவதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதன் அறிமுக நிகழ்வில் பேசிய Evolution Auto நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா, “Riddara RD6 Active வாகனத்தின் அறிமுகமானது இலங்கையின் மின்சார வாகன மாற்றத்திற்கான ஒரு திருப்புமுனையாகும். நடைமுறைக்கு ஏற்றதாகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும் நிலைபேறான போக்குவரத்தை மாற்றுவதே Evolution Auto நிறுவனத்தின் நோக்கமாகும். RD6 Active வாகனமானது, மின்சார பிக்கப் வாகனம் மட்டுமல்லாது, இது இலங்கையைத் தூய்மையானதாகவும் புத்திசாதுர்யமான போக்குவரத்திற்கான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றதுமான, வாழ்க்கை முறைக்கு ஏற்ற வாகனமாகும். BMICH மோட்டார் வாகன கண்காட்சியில் இதனை வெளியிட்டமையானது, எமது வாகனத்தின் மீதான நம்பிக்கையையும் சந்தையின் தயார் நிலையையும் எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.

Riddara RD6 Active அறிமுகத்தின் மூலம், இலங்கையின் அதிநவீன, நிலைபேறான போக்குவரத்திற்கான மாற்றத்தில் Evolution Auto தொடர்ச்சியாக முன்னிலையில் நின்று செயற்படுகிறது. செயல்திறன் மற்றும் வடிவமைப்புடன் இணைந்ததாக, தொழில்நுட்பம் மற்றும் சூழல் தொடர்பான பொறுப்புணர்விற்கும் முக்கியத்துவம் அளிக்கின்ற, நுகர்வோரின் மாற்றமடைந்து வரும் எதிர்பார்ப்புகளை இவ்வாகனம் பிரதிபலிக்கிறது.

தற்போது Evolution Auto மூலம் விற்பனைக்கு வந்துள்ள Riddara RD6 Active வாகனமானது, ஒரு SUV போன்ற அனுபவத்தையும் பிக்கப் வாகனத்தின் பயன்பாட்டையும் வழங்கும் மின்சார டபள்-கெப் வாகனங்களின் புதிய நோக்கத்தை அனுபவிக்க இலங்கையின் வாகன விரும்பிகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு: www.riddara.lk எனும் இணையத்தளத்தை அல்லது 0777 553 355 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *