Hikvision Sri Lanka (ஹைக்விஷன் ஸ்ரீ லங்கா) நிறுவனமானது, அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்சீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற Hikvision Skill Quest (திறன் தேடல்) நிகழ்வின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஒன்பது மாகாணங்களில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில், பாதுகாப்பு தொழில்நுட்ப சேவை தொழில்துறையில் உள்ள இலங்கையின் திறமையான நிறுவுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் (installers, technicians, integrators) பங்குபற்றியிருந்தனர்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேசிய பட்டத்தை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அமில அமரசிங்க வெற்றி கொண்டார். இவர் துறைசார் நிபுணர்களால் கட்டமைக்கப்பட்ட மேம்பட்ட நிஜ உலகத் தொழில்நுட்ப சவால்களை நிறைவு செய்து, அதனை மதிப்பீடு செய்யப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த நிகழ்வின் வெற்றியாளராகவும் தெரிவானார். இந்தச் சாதனையானது, இவரது தனிப்பட்ட விசேடத்துவத்தையும், உள்நாட்டுப் பாதுகாப்பு தொழில்நுட்ப தொழில்படை சக்தியின் உயர்வடைந்து வரும் தரங்களையும் எடுத்துக் காட்டுகிறது.
தொழில்முறை ரீதியான பயிற்சிகளை வழங்குவது குறித்து வலுவான அர்ப்பணிப்புடன் உள்ள Hikvision Skill Quest ஆனது, இலங்கையின் தொழில்நுட்ப சமூகத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் பயிற்சித் திட்டங்கள், சான்றளிக்கப்பட்ட பயிற்சிப் பட்டறைகள், தயாரிப்புகளின் உள்ளமைவு குறித்த விளக்கமளிக்கும் அமர்வுகள், தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் மூலம், நிறுவுநர்களை மேம்படுத்துவதில் நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறது.
இந்நிகழ்வில், Hikvision Sri Lanka நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளரும் நாட்டுக்கான பொது முகாமையாளருமான யசந்த ஹேன்னாயக்க, Hikvision தெற்காசிய சந்தைப்படுத்தல் தலைவர் திருமதி ஜெனி சென் உள்ளிட்ட இலங்கை அலுவலகத்தின் முகாமைத்துவக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட Hikvision Sri Lanka குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்களின் பங்குபற்றுதலானது, இந்த முயற்சிக்கு நம்பிக்கையை அளித்ததுடன், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்தது. இது இன்று, திறமையாளர்களை தேடும் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப துறை நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற, நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிகழ்வில் Hik-Tech வர்த்தகநாமத் தூதுவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப செல்வாக்காளர்களும் பங்குபற்றியிருந்தமை மூலம் சமூக ஊடகங்களில் உள்ள, இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பரந்துபட்ட தொழில்நுட்ப சமூகத்துடன் அதன் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்தது.
இது குறித்து, Hikvision Sri Lanka பணிப்பாளரும் நாட்டுக்கான பொது முகாமையாளருமான யசந்த ஹேன்நாயக்க தெரிவிக்கையில், “பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இலங்கையின் எதிர்காலமானது, தொழில்நுட்ப வல்லுநர்களின் வலிமையிலேயே தங்கியிருக்கிறது என ஹைக்விஷன் ஆகிய நாம் நம்புகிறோம். தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடுவது என்பது கட்டாயமான விடயமாகவே இனி இருக்கும். குறிப்பாக இன்றைய AIoT தொழில்நுட்பத்தின் வேகமாக வளர்ந்து வரும் துறையில் இது மிக அவசியமாகும். தொழில்துறையைத் தொடர்ச்சியாக உயரச் செய்யும் அர்பணிப்பைக் கொண்ட பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பங்காளர்கள் மற்றும் எமது பயிற்சி வழங்கும் சமூகம் ஆகிய அனைவரினதும் ஆர்வத்தையும் நாம் பாராட்டுகிறோம்.” என்றார்.
பாதுகாப்பு கண்காணிப்பு உற்பத்திகளை வழங்கும் ஒரு நிறுவனம் எனும் நிலையிலிருந்து, AIoT தொழில்நுட்பம், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் நிறுவுநர்களின் வலுவூட்டல் ஆகியவற்றில் தேசிய ரீதியான முன்னணி நிறுவனம் Hikvision எனும் பரிணாம வளர்ச்சியை Hikvision Skill Quest திட்டமானது வலுப்படுத்துகிறது. மனிதர்கள் மீது முதலீடு செய்வதானது, புத்தாக்கத்தில் முதலீடு செய்வதற்கு ஒப்பான மிக முக்கியமான விடயம் எனும், நிறுவனத்தின் நம்பிக்கைக்கு இந்த போட்டி ஒரு சான்றாகும்.
இந்நிகழ்வு தொடர்பான ஆர்வம் இலங்கை முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், எதிர்வரும் ஆண்டுகளில் தமது பயிற்சித் திட்டங்களையும் திறமையாளர்களின் தேடல் தளத்தையும் மேலும் விரிவுபடுத்தவும், தொழில்துறையை மேலும் வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறமையாளர்களை வலுவூட்டுவதையும் Hikvision இலக்காக் கொண்டுள்ளது.

Image Captions –
Hikvision Skill Quest திறன் தேடல் ஏற்பாட்டுக் குழுவினர்