விகாரைகளில் வேம்பு மரங்களை நடும் ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்த சுதேசி கொஹொம்ப

இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தக நாமமான சுதேசி கொஹொம்ப (Swadeshi Khomba), விகாரைகளில் வேம்பு மரங்களை நடும், அதன் கூட்டு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டமான ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது. ‘காடானது தன்னைத் தியாகம் செய்தவாறு, அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்க்கையை வழங்குவதோடு, அடைக்கலம் அளிக்கும் ஒரு இடம்’ என்று புத்த பிரான் தெரிவித்துள்ளார். இந்த ஞானத்துடன் இணைந்ததாக, சுதேசி தனது ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதலாவது திட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த போயா பௌர்ணமி தினத்தில் கிரிபத்கொடையிலுள்ள ஸ்ரீ சுதர்ஷனாராம புராண விகாரையில் இடம்பெற்ற வேம்பு மர நடுகை பிரசாரத்துடன் இது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுதேசி நிறுவனத்தின் தலைவியான திருமதி அமரி விஜேவர்தன (Amari Wijewardene), “பௌத்த மதத்திற்கும் காடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அத்துடன், இது எமது பூமியை பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு பலம் வாய்ந்த உத்வேகத்தின் மூலம் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. பௌத்த மதத்தின் சிறந்த போதனைகளிலிருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெறுவோம். அத்துடன், எதிர்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்றார்.

இயற்கையின் அற்புத மூலப்பொருளான வேம்பு (Khomba/ Margosa), அதன் பிரதான மூலிகை நலன் மற்றும் மருத்துவ குண நலன்களுக்காகவும், காற்றைச் சுத்திகரிக்கும் அதன் இயற்கையான திறனுக்காகவும் மதிக்கப்படுகிறது. இந்த மூலப்பொருளானது நிறுவனத்தின் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமான சுதேசி கொஹொம்ப ஒரிஜினல் ஹேர்பல் ஆனது, தூய வேம்பு எண்ணையை அதன் முதன்மையான மூலப்பொருளாகக் கொண்டுள்ளது.

சுதேசி கொஹொம்ப ஹேர்பல் ஆனது, 1943இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இலங்கையின் மூலிகை தனிநபர் பராமரிப்புப் பிரிவில் தொடர்ச்சியாக முன்னணியில் திகழும் தனது நிலையை பெருமையுடன் நிலைநிறுத்தி வருகின்றது. அழுத்தமாற்ற, ஆயினும் ஆழமாகச் தூய்மைப்படுத்தும் பண்புகளுக்காக புகழ் பெற்ற இது, மிருதுவான, இயற்கையான பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், இயற்கையான அழகை சேர்க்கிறது. அனைத்து சரும வகைகளுக்கும் பொருந்தும் வகையிலான, சருமத்திற்கு மிருதுவான மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற இந்த தயாரிப்பானது, சர்வதேச ரீதியில் தோல் மருத்துவ நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பெருமைமிக்க உள்ளூர் நிறுவனம் எனும் வகையில், இலங்கை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் சமூக நலனுக்காகவும் தனது அர்ப்பணிப்பை சுதேசி தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. சுதேசி கொஹொம்ப வர்த்தக நாமம் ஆனது, இயற்கை அன்னையை பாதுகாப்பாக பேணுவதில் கவனம் செலுத்துகின்ற நிலைபேறான தன்மை முயற்சிகளுக்காக தன்னை ஆழமாக அர்ப்பணித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, நிறுவனத்தின் பல்வேறு சமூக நன்மைகளை வழங்கும் திட்டங்களில் ஒன்றாகும். இதில் ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ எனும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரலாற்று ரீதியான வழிபாட்டுத் தலங்களில் வருடாந்த ‘ஆலோக பூஜா’ (ஒளியூட்டல் பூஜை) நிகழ்வுகளுக்கான அனுசரணையும் உள்ளடங்குகின்றது. அது மாத்திரமன்றி, நாட்டின் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்காகவும், பாடசாலைகள் மற்றும் விகாரைகளுக்கும் நீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்கும் ‘சுதேசி கொஹொம்ப பிரஜா சத்காரய’ மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுதேசி கொஹொம்ப குழந்தை பராமரிப்புப் பரிசுப் பொதிகளை விநியோகிக்கும் திட்டங்கள் ஆகியவையும் அதன் முக்கிய சமூக நலன் திட்டங்களில் உள்ளடங்குகின்றன.

இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி அதன் தயாரிப்பு வகைகளில் உபயோகப்படுத்தும் இயற்கை மூலப்பொருட்களின் செயற்பாட்டு நன்மைகளைப் பற்றி நுகர்வோருக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறது. நாம் சிறந்த இலங்கையின் மூலிகைகளை மாத்திரம் பயன்படுத்துகிறோம் என்பதோடு, ஒவ்வொரு மூலிகையும் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தயாரிப்பும் தரத்தில் எவ்வித குறையும் ஏற்படாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்த கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து சுதேசி தயாரிப்புகளும் 100% சைவத்தை (vegetarian) அடிப்படையாகக் கொண்டவையாகும். அத்துடன், அவை விலங்குகளில் சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குக் கொடுமைகளிலிருந்து தவிர்ந்தவை (cruelty-free) ஆகும். உயிர்கள் மற்றும் இயற்கை மீதான எமது ஆழமான மரியாதையை இது எடுத்துக் காட்டுகிறது. சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம் மற்றும் சுதேசி கொஹொம்ப பேபி உள்ளிட்ட எமது வர்த்தக நாமங்கள், எமது நெறிமுறை ரீதியான மற்றும் சூழல் நட்பு அணுகுமுறையை எடுத்துக் காட்டுவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் சைவ உணவுச் சங்கத்தின் (Vegetarian Society, UK) அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த அர்ப்பணிப்பானது, நிறுவனத்தின் முன்னோக்கு மிக்க சிந்தனை கொள்கையையும், தமது தெரிவுகளை பொறுப்பான வகையில் மேற்கொள்ள நுகர்வோரை வலுவூட்டுவதற்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு முழுமையான இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 85 வருடங்களுக்கும் மேலாக, இத்தொழில்துறையில் பல்வேறு முதலாவது அடியெடுத்து வைக்கும் செயற்பாடுகளுடன், நிலைபேறான தன்மை, புத்தாக்கம் மாத்திரமன்றி மக்கள் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பராமரித்து பேணுவதில் தொடர்ச்சியாக இத்தொழில்துறையை வழிநடத்தி வருகிறது.

இலங்கையின் மூலிகை தனிநபர் பராமரிப்புப் பிரிவில் முன்னோடியாகவும் சந்தையின் முன்னணி நிறுவனமாகவும் விளங்கும் Swadeshi Industrial Works PLC நிறுவனம், 1941 இல் நிறுவப்பட்டது. அதன் தயாரிப்பு வகைகளில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் போன்ற பிரபலமான வர்த்தக நாமங்கள் உள்ளடங்குகின்றன. இந்நிறுவனம் இலங்கையின் முதல்தர மூலிகை வர்த்தக நாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ உடன் பாரம்பரிய அழகு வர்த்தக நாமமான ராணி சந்தனத்தையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (NMRA) உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைப் பொருட்ளும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நறுமண சங்கத்தால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ISO 9001 – 2015 தர சான்றிதழ்களுக்கு இணங்க அவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

Photo caption:

சுதேசி நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் கிரிபத்கொடை, ‘ஸ்ரீ சுதர்ஷனாராம புராண விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய மொகொலா மங்கள தேரர் ஆகியோர், ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைத்தபோது…

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *