48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு மிகப்பெரிய திரையை வழங்குகின்றது. Y7a ஆனது, Huawei யின் முன்னணி நிலையிலுள சலுகைகளுடன் சந்தையில் நுழைந்த இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்று என்பதால், அது பணத்திற்கேற்ற பெறுமதி கொண்டதாக காணப்படுகின்றது. அதன் Quad AI அமைப்பானது, 5,000mAh பாரிய மின்கலம், 4GB RAM + 128GB நினைவகம் ஆகிய ஆகிய குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்ட சக்திவாய்ந்த கையடக்கத் தொலைபேசியாகவும், மிகவும் மலிவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

புதிதாக வெளியிடப்பட்ட இந்த Huawei Y7 a தொடர்பில், இலங்கையின் Huawei சாதனங்களின் தலைவரான பீட்டர் லியு, கருத்துத் தெரிவிக்கையில், “Huawei Y தொடர் இலங்கையர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. முக்கியமாக Y தொடரானது குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் பிரிவின் அடிப்படையில் கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு அடுத்தடுத்த ஸ்மார்ட்போனுக்கும் புதுமையான அம்சங்களுடன் இன்றைய நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். இதற்கு மேலதிகமாக Huawei Y7a ஒரு படி மேலே சென்று, குறைந்த விலையில், பெரிய, அதிக சக்திவாய்ந்த முதன்மையான தொலைபேசி அம்சங்களை கொண்ட நடுத்தர வகை தொலைபேசியை சந்தைக்கு கொண்டு வருகிறது. Y7a ஆனது, இடைநிலை கேமிங் ஆர்வலர்களுக்கு முதன்மை கேமிங் அம்சத்தை கொண்டுவருகிறது. Y7a பணத்திற்கேற்ற பெறுமதியை மாத்திரமல்லாமல், Huawei இன் முதன்மையான தொலைபேசி வகைகளில் ஒன்றை நடுத்தர வகை விலையில் வழங்குகிறது.” என்றார்.

6.67 அங்குல Full HD பெரிய திரையுடன், 90.3% திரைக்கு உடல் விகிதத்துடன் Y7a ஆனது, ஒரு அதிசயமான, பார்வைச்சிதறல் இல்லாத அனுபவத்தைக் கொண்டுவருகிறது. அதன் வளைந்த விளிம்புகளானது, அது ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும்போது அதை வசதியாக கையாள உதவுவதோடு, தங்கு தடையின்றி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் உதவுகிறது. Y7a ஆனது, பச்சை (Crush green), தங்க நிறம் (Blush gold), கறுப்பு (Midnight black) ஆகிய மூன்று உறுதியான வண்ணங்களில் வருவதோடு, முதல் பார்வையில் எவரையும் ஆசை கொள்ள வைக்கிறது.

Huawei Y7a அதன் கெமராவின் அடிப்படையில் ‘பல் அம்சங்களை’ கொண்டுள்ளது, இது உண்மையில், Quad camera போன்ற சந்தையில் உள்ள நடுத்தர வகை சாதனங்களில் காணப்படாத அம்சத்தை கொண்டதாக காணப்படுகின்றது. Huawei Y7a Quad camera ஆனது, 48MP (f/1.8 குவியம்), 8MP (அல்ட்ரா-வைட் ஆங்கிள் வில்லை, f/2.4 குவியம்), 2MP (ஆழத்திற்கான வில்லை, f/2.4 குவியம்) மற்றும் 2MP உருப் பெருக்கி வில்லை, f/2.4 குவியம்) ஆகியவற்றை கொண்டுள்ளதோடு, இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு கொண்டதாகும். 48MP, உயர் துல்லியத்தன்மை கொண்ட பிரதான கெமராவானது, பல்வகை வண்ண தெளிவான புகைப்படங்களை எடுக்க தனியாக நின்று உதவுவதோடு, ஏனைய 3 வில்லைகளும் பயனர்களுக்கு ultra-wide angled, macro angled,  depth effect புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. குறைந்த வெளிச்சம் அல்லது இரவு மின்விளக்கு வெளிச்ச நிலைகளில் கூட, அக்கணத்தில் காட்சிப்படுத்தப்படும் அழகை ‘super night’ கெமரா பயன்முறையால் எளிதில் கைப்பற்றுகிறது. திரையில் சிறு துளை கொண்டு பதிக்கப்பட்ட, 8MP (f/2.0 குவியம்) செல்பி கெமராவானது, பகலிலும் குறைந்த அல்லது மங்கலான ஒளி நிலைகளின் போதும் எவ்வித வேறுபாடுகளுமினறி ஒரே விதமாக சிறப்பாக செயல்படுகிறது.

Huawei Y7a ஆனது பல Y தொடர் தொலைபேசிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் Kirin 710A புரசொசரைக் கொண்டுள்ளது. 4GB RAM மூலம் இயக்கப்படும் Y7a ஆனது, கேமிங் இற்கான செயற்படும் தன்மை, ஒரே நேரத்தில் பல அம்சங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏனைய  அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தன்மை தொடர்பில், ஏனைய நடுத்தர வகை சாதனங்களுடன் ஒப்பிடும்போது, Y7a ஆனதை அவற்றையெல்லாம் விஞ்சும் தன்மையை கொண்டுள்ளது.

ஒரு பெரிய 5,000mAh இனால் இயக்கப்படும் Huawei Y7a ஆனது, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மின்சக்தி இன்றி செயலிழந்து போகாமல் தொடர்ந்து பயன்படுத்த வழிவகுக்கிறது. அதன் புத்திசாலித்தனமான AI மின்சகத்தி சேமிப்புத் திறன் மூலம் 38.2 மணி நேர 4G அழைப்பு, 16.6 மணி நேர ஒன்லைன் வீடியோ பார்வையிடல், 12 மணி நேர 4G இணையத்தள உலாவல், தொடர்ச்சியான விளையாட்டுகளை விளையாடும் திறன். சார்ஜ் செய்த 10 நிமிடங்களில், பயனர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம் வீடியோக்களை பார்வையிடும் வசதி கிடைக்கிறது. இது இன்றைய வேகமான வாழ்க்கை முறைகளில் வெளிப்படையான நன்மையாகும். Huawei Y7a ஆனது, 22.5W Huawei Super Charge இற்கும் ஒத்திசைகிறது. இது பயனர்களை நம்பமுடியாத வேகத்தில் மின்கலத்தை சார்ஜ் செய்ய உதவுகிறது.

Y7a இன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை உணரியானது, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை உணரியுடனான கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது. இது, பயனர்கள் தொலைபேசியை உள்ளங்கையில் வைத்திருக்கும் போது, பெருவிரலால் எளிதாக திறக்க வசதியளிக்கிறது.

புதிய Huawei Y7a ஆனது, ரூ. 35,999 எனும் விலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிங்கர் மெகா மற்றும் சிங்கர் பிளஸ் காட்சியறைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் Daraz.lk வழியாக கொள்வனவு செய்து அதை தங்கள் வீட்டுக்கே வரவழைக்கலாம்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *