உலகளாவிய மின்கல முன்னோடி CATL, இலங்கையில் நிலைபேறான போக்குவரத்திற்கான Evolution Auto நிறுவனத்தின் இலக்கிற்கு வலுவூட்டுகிறது

உலகளாவிய ரீதியில் மின்சார வாகன (EV) மின்கலங்களின் முன்னணி உற்பத்தியாளரும், புத்தாக்கவியலாளருமான Contemporary Amperex Technology Co. Limited (CATL) இன் தலைமையில், நிலைபேறான போக்குவரத்திற்கான உலகளாவிய கேள்வி தொடர்ச்சியாக துரிதப்படுத்தப்படுகிறது. உலகளாவிய ரீதியில் EV மின்கலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் 42.81% எனும் சந்தைப் பங்கை கொண்டுள்ள CATL ஆனது, Tesla, BMW, Mercedes-Benz போன்ற முன்னணி வர்த்தகநாமங்கள் உள்ளிட்ட, உலகெங்கிலும் உள்ள அனைத்து மின்சார வாகனங்களினதும் சுமார் அரைவாசிக்கு இது மின்கலங்களை வழங்குகிறது.

Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களில் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், இலங்கையின் மின்சாரப் போக்குவரத்திற்கான மாற்றத்தில் புதிய தரநிலைகளை தற்போது அமைத்து வருகிறது. இதில் Avatr 11, Geely Ridara RD6 Pickup, King Long Kingwin+ (இவை அனைத்தும் CATL மின்கலங்களால் இயங்குபவை), அத்துடன் XPENG, IM Motors, KYC Vans, King Long Electric Vans போன்ற பல்வேறு மேம்பட்ட சீன மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கான உள்ளூர் பிரதிநிதித்துவமும் உள்ளடங்குகின்றன.

உறுதிப்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் இடைவிடாத புத்தாக்கம் ஆகியன CATL இன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. சிறந்த செயல்திறன், விரைவான சார்ஜிங் மற்றும் அதிக சூழல் நிலைபேறான தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சோடியம்-அயன் மற்றும் திண்ம நிலை மின்கலங்கள் (sodium-ion and solid-state batteries) போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை கொண்டு இவை உருவாக்கப்படுவதுடன், மின்கல செயல்திறன், வலுசக்தி அடர்த்தி, பாதுகாப்பு ஆகியவற்றிலான முன்னேற்றங்களுக்கு நிறுவனம் வழி வகுத்துள்ளது.

இலங்கைக்கு, இந்த உலகளாவிய தொழில்நுட்பம் என்பது செயல்திறன், நம்பகத்தன்மையை காண்பிக்கிறது. உலகளாவிய ரீதியில் சிறந்த வாகன வர்த்தக நாமங்களால் பயன்படுத்தப்படும் அதே நம்பகமான தொழில்நுட்பமான CATL மின்கல தொகுதியுடன் கூடிய மின்சார வாகனங்களை தற்போது Evolution Auto நிறுவனத்திடமிருந்து இலங்கை நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும்.

இது குறித்து, Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா தெரிவிக்கையில், “CATL போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதானது, இலங்கை மின்சாரப் போக்குவரத்தை தழுவும் இவ்வேளையில், எமது நுகர்வோர் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது. CATL கொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட மின்கல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாம் பெருமை அடைகிறோம். இது தரத்தில் எவ்வித குறையும் இன்றி, நிலைபேறான முறையில் வாகனங்களை இலங்கையர்கள் செலுத்த உதவுகிறது.” என்றார்.

இலங்கையானது, காபன் வெளியீடு மற்றும் எரிபொருளில் தங்கியிருப்பதை குறைப்பதில் கவனம் செலுத்துவதால், Evolution Auto ஊடான CATL இன் வரவானது, இலங்கையின் பசுமை போக்குவரத்து பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. புத்திசாலித்தனமான, தூய, வலுசக்தித் திறன் அதிகம் கொண்ட போக்குவரத்திற்கான எதிர்காலத்தை உருவாக்க அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள்.

CATL இன் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு, Evolution Auto தொடர்ச்சியாக ‘பூச்சிய காபன் வெளியேற்றும் இலங்கை’ எனும் எண்ணக்கருவை ஆதரிக்கிறது. இங்கு வளர்ச்சியானது, புத்தாக்கம் மூலம் தூண்டப்படுவதுடன் ஒவ்வொரு பயணமும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறது.

END

Photo Caption

சீனாவின் முன்னணி மின்சார வாகன மின்கல உற்பத்தியாளர்களின் பங்கு (2025 செப்டம்பர்)

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *