இணைய வர்த்தகநாம பிரிவில் சிறந்து விளங்கியமைக்காக SLIM Brand Excellence 2025 இல் கௌரவிக்கப்பட்ட dsityreshop.com

DSI Tyres நிறுவனத்தின் சக்தியால் ஆதரிக்கப்படும் dsityreshop.com இணையத்தளமானது, SLIM Brand Excellence 2025 விருது விழாவில், ஒன்லைன் வர்த்தகநாமத்திற்கான (Online Brand) வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி டயர் விற்பனை இணைய வர்த்தகத் தளம் எனும் அதன் பயணத்தில், இந்த சாதனையானது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த அங்கீகாரமானது, டிஜிட்டல் வர்த்தகத்தில் இவ்வர்த்தக நாமத்தின் வளர்ச்சி, சந்தையில் அதன் நம்பகமான இருப்பு மற்றும் இலங்கையர்கள் இணையத்தில் டயர்களை கொள்வனவு செய்யும் முறை குறித்து மீள்பரிசீலனை செய்யச் செய்வதில் முன்னெடுக்கும் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியன வலுப்படுத்தப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தின் பின்னாலுள்ள கூட்டு முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த கௌரவத்திற்கான தனது பாராட்டுகளை வெளியிட்ட, DSI Tyres நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் காவிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில், “SLIM Brand Excellence 2025 விருது விழாவில் கௌரவம் அளிக்கப்பட்டதில் நாம் பெருமை கொள்கிறோம். அத்துடன், எம் மீது தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்திருக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த விருதானது, டயர் கொள்வனவை அனைவருக்கும் இணையத்தில் எளிதாகவும், பாதுகாப்பாகவும், மேலும் சிறப்பாக அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. dsityreshop.com தளமானது, இலங்கையில் டயர்களுக்கான மிகவும் நம்பகமான இணைய புள்ளியாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொடர்ச்சியாக நாம் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முதலீடு செய்து, எமது சேவைகளை விரிவுபடுத்த எதிர்பார்கிறோம்.” என்றார்.

கடந்த ஒரு வருட காலமாக, dsityreshop.com ஆனது, ஒரு சீரான, நம்பகமான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதன் மூலம் இப்பிரிவில் தலைவராக வலுவடைந்து வருகிறது. ‘முகவரிடம் வந்து பெற்றுச் செல்லும் சேவை’ (Pick Up from Dealer service), நாடு முழுவதும் விநியோகம், பாதுகாப்பான கட்டண தெரிவுகள் மற்றும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் இணையத்தளத்தின் பயனர் பயன்பாட்டு பகுதி (user interface) ஆகியன, அதன் புத்தாக்க அம்சங்களில் உள்ளடங்குகின்றன. இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை மேம்படுத்துவதிலும், இணையச் சந்தையில் வலுவான செயற்பாட்டை முன்னெடுப்பதிலும் ஒருங்கிணைந்தவையாக இருந்துள்ளன.

இலங்கையின் மிகவும் மரியாதைக்குரிய விருதுகளில் ஒன்றான SLIM Brand Excellence நிகழ்விலிருந்து பெறப்பட்ட இந்த கௌரவம், இத்தொழில்துறையில் இவ்வர்த்தக நாமத்தின் தாக்கம் மற்றும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர் கேள்விகளைப் பூர்த்தி செய்யும் அதன் திறன் தொடர்பான உண்மை நிலையின் பிரதிபலிப்பாகும். இது dsityreshop.com இன் டிஜிட்டல் மூலோபாயம், வாடிக்கையாளர் திருப்தி, இணைய சில்லறை விற்பனை நடவடிக்கைகளில் நீடித்த மேம்பாடுகளின் செயல்திறனுக்கு ஒரு சான்றாகவும் விளங்குகின்றது.

இந்தச் சாதனை மூலம், இணையத்தில் டயர் கொள்வனவு செய்வதில் வாடிக்கையாளர் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், வாகனத் துறையில் டிஜிட்டல் வணிகத்தின் எதிர்காலத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் dsityreshop.com உறுதியுடன் உள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *