புதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது.

பல்வேறுபட்ட சேவைகளுடன், HUTCH பாவனையாளர்கள் கைமுறையாக topping up செய்வது தொடர்பில் இனியும் கவலை கொள்ளத் தேவையில்லையில்லை. ஏனெனில், இந்த செயலியானது உட்கட்டமைக்கப்பட்ட top up/recharge வசதியுடன் வருகின்றது. இந்த செயலியானது,  USSD செயல்படுத்தும் குறியீடுகளை நினைவில் கொள்ள வேண்டிய தேவையிலிருந்து பாவனையாளர்களை விடுவிப்பது மட்டுமன்றி, செயலியில் முழு சேவை பட்டியலையும் உள்ளடக்குவதன் மூலம் USSD மற்றும் SMS செயற்படுத்தல்களையும் மாற்றியமைப்பதனால் பாவனையாளர்கள் எந்தவொரு சேவையையும் தடையின்றி செயற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த செயலியின் பாவனையாளர்கள் “My Plan” அம்சத்தின் மூலம் வலுவூட்டப்படுகின்றனர். அவர்கள் தமது டேட்டா திட்டங்களை தமக்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடிவதுடன், தமது விருப்பத்திற்கேற்ப குரல் மற்றும் எஸ்.எம்.எஸ்களை மேலதிகமாக சேர்த்துக் கொள்ள முடியும்.

மிக முக்கியமாக, இந்த செயலியின் பயன்பாட்டுக்கு எந்தவொரு தரவுக் கட்டணமும் விதிக்கப்படாது. மேலும்,  பாவனையாளர்கள் நாளின் எந்த நேரத்திலும் செயலியைத் திறப்பதன் மூலம் நிகழ்நேரத்தில் அவர்களின் மீதியைக் கண்டறிய உதவுகிறது.

Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் தரவு, பெறுமதி சேர் சேவைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் உதவிப் பொது முகாமையாளரான யாதவ் மதியாபரணம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்; “மூன்று மொழிகளையும் கொண்ட செயலியாக இருப்பதால், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பாவனையாளர்களை உள்ளடக்கிய அனைத்து HUTCH சந்தாதாரர்களுக்கும் சேவையை வழங்கும் பொருட்டு HUTCH Self Care வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாங்கள் மேம்படுத்தும் போது வாடிக்கையாளர் சௌகரியமானது கருத்தில் கொள்ளப்பட்ட முக்கிய காரணியாகும். மேலும், புதிய மேம்படுத்தல்கள் அதை மென்மேலும் மெருகேற்றுகின்றது. இதன் பெயர் குறிப்பதைப் போல, HUTCH Self Care செயலியானது, வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமையைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, HUTCH சேவைகளின் மீது அதிக கட்டுப்பாட்டை  வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தச் செயலியை தரவிறக்கம் செய்து புதிய டிஜிட்டல் அனுபவத்தை அனுபவித்து மகிழ அனைத்து HUTCH  சந்தாதாரர்களையும் அழைக்கிறோம்,” என்றார்.

Google Play store, Apple App Store மற்றும் Huawei App Gallery முதலியவற்றில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளக் கூடிய HUTCH Self Care செயலியானது வாடிக்கையாளர்களின் உள்ளங்கைகளிலிருந்து நேராக HUTCH சேவைகளுக்கான உடனடி அணுகலை எளிதாக்குகிறது. இந்த  செயலியை நிறுவிய பின், முதலில் மொபைல் எண்ணை (078 அல்லது 072) உள்ளிட்டு, இரண்டாவதாக அவர்கள் உடனடியாக குறுஞ்செய்தி வழியாக பெறும் உறுதிப்படுத்தல் இலக்கத்தை சமர்ப்பிப்பதன் மூலமும் வாடிக்கையாளர்கள் இரண்டு படிமுறைகளில் எளிதாக பதிவு செய்துகொள்ளலாம்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better” சேவை வழங்க உதவியது. HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *