இலங்கையில் Hikvision நிறுவனத்தின் முன்னணி மதிப்புச் சேர்க்கப்பட்ட விநியோகஸ்தரான IT Gallery Computer (Pvt) Ltd. நிறுவனம், அதன் வருடாந்த IT Gallery – Hikvision கூட்டாளர்களின் 2025 உச்சி மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத் தொழில்துறையின் விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் கூட்டாண்மையைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. நிறுவனம் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த உச்சி மாநாடானது பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிகழ்வு, நாடு முழுவதிலுமிருந்து 400 இற்கும் மேற்பட்ட கூட்டாளர்களை ஒன்றிணைகின்றது. இதில் பிராந்திய முகவர் விநியோகப் பங்காளிகள் மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட தீர்வு வழங்குநர்கள் (VASP) உள்ளிட்டோர் அடங்கின்றனர்.
இவ்வருட நிகழ்வில், 2024-2025 காலப் பகுதியில் IT Gallery – Hikvision நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் விசேடத்துவம் மற்றும் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில், சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்திய கூட்டாளர்களுக்கு சிறந்த 10 முகவர் விருதுகளும் 3 VASP விருதுகளும் வழங்கப்பட்டன. இது தவிர, உறவுகளை வலுப்படுத்தவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிரவும், புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் இணைக்கப்பட்ட சமூகங்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பைத் தூண்டவும் இந்த உச்சி மாநாடானது ஒரு தளமாகச் செயற்பட்டது. இந்த ஆண்டுக்கான வெகுமதித் திட்டத்தின் ஒரு அங்கமாக, சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்திய 30 இற்கும் மேற்பட்ட கூட்டாளர்கள் ஐரோப்பா, நியூசிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கான விசேட சுற்றுப்பயண பொதிகளும் வழங்கப்பட்டன.


கூட்டாளர்கள் வணிக நிர்வாகத்தை இலகுவாக அறிந்து கொள்ளவும், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட விரிவான டிஜிட்டல் தளமான AcuSeek மற்றும் Hik-Partner Pro ஆகியவற்றின் நேரடி செயல்விளக்கங்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறான பல்வேறு புத்தாக்கமான விடயங்கள், Hikvision வர்த்தகநாமத்தை உலகின் நம்பர் 1 கண்காணிப்பு வர்த்தகநாமம் எனும் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், வணிக வளர்ச்சியை செயற்படுத்தும் புத்திசாலித்தனமான, AI இனால் இயக்கப்படும் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இது எடுத்துக் காட்டுகின்றது.
இந்நிகழ்வில் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான, 3 சிறந்த தொழில்துறை வல்லுநர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அவர்கள் பிராந்திய Hik Tech Stars நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த பிரத்தியேகத் திட்டமானது, உலகளாவிய Hikvision வலையமைப்பில் சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்துபவர்களையும் புத்தாக்க சிந்தனையாளர்களையும் கொண்டாடுகிறது. இந்த குறிப்பிடும்படியான சாதனையானது, உள்ளூர் திறமையாளர்களின் உண்மையான வலிமையையும், இலங்கை பாதுகாப்பு தீர்வுத் துறையின் அதிகரித்து வரும் திறமைகளையும் பிரதிபலிக்கிறது.

இது குறித்து IT Gallery Computers Private Limited நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா தெரிவிக்கையில், “‘Innovating Beyond Security 2025’ (2025 பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட புத்தாக்கம்) ஊடாக, தொழில்நுட்ப முன்னேற்றத்தை மட்டுமல்லாது, எமது கூட்டாண்மையின் வலிமையையும் நாம் கொண்டாடுகிறோம். Hikvision உடன் இணைந்து, எமது இலங்கை கூட்டாளர்களில் மூவர் Hik Tech Stars ஆகத் தெரிவு செய்யப்பட்டதில் IT Gallery பெருமை கொள்கிறது. இது எமது துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திறமையாளர்கள், புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உண்மையான பிரதிபலிப்பாகும்.” என்றார்.
2011 ஆம் ஆண்டு முதல் IT விநியோகச் சந்தையின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக விளங்கும் IT Gallery, அதன் வலையமைப்புக்கு மதிப்புக்கூட்டப்பட்ட ஆதரவாக, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும் ஒரு நம்பகமான பங்காளராக ஒரு வலுவான நற்பெயரைப் பெற்றுள்ளது. கடந்த 14 வருடங்களில், போட்டிமிக்க சந்தையில் கூட்டாளர்கள் வளர்ச்சியடைய உதவும் நம்பகமான தயாரிப்புகள், திறன்பட்ட சேவை மற்றும் புத்தாக்கமான தீர்வுகளுடன் வணிக நிறுவனங்களை வலுவூட்டுவதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.
2025 IT-Gallery கூட்டாளர் உச்சி மாநாடானது, வெற்றியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல், இலங்கையில் புத்திசாதுர்யமான பாதுகாப்பின் எதிர்காலம் குறித்த ஒரு தூரநோக்காகவும் அமைந்தது. Hikvision தொடர்ச்சியாக புத்தாக்கத்துடன் பாதுகாப்புத் துறையில் முன்னணியில் திகழ்கின்றது. இன்று, Guanlan Large-Scale AI Engine இனால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை புத்திசாதுர்யமான Hikvision AcuSeek NVR இனை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். AcuSeek ஆனது, பயனர்கள் தாங்கள் தேடுவதை டைப் செய்வதன் மூலம் அல்லது பேசுவதன் மூலம் உதாரணமாக, ‘a person in a red shirt’ (சிவப்பு சட்டை அணிந்த ஒரு நபர்) அல்லது ‘a white van entering the gate’ (ஒரு வெள்ளை வேன் வாயிலுக்குள் நுழைகிறது) போன்ற அம்சங்கள் வீடியோ தேடலில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்தச் சிஸ்டமானது சில நொடிகளுக்குள் குறித்த காட்சியை உடனடியாகக் கண்டறிகிறது. இது வேகமாகவும், துல்லியமாகவும் புத்திசாதுர்யமாகவும் உள்ளது. இது பாதுகாப்பு கண்காணிப்பு வீடியோ காணொளியை நாம் பயன்படுத்தும் விதத்தை மீள்வரையறை செய்கிறது. இது, IT Gallery உடன் இணைந்து இலங்கையின் நம்பர் 1 பாதுகாப்பு வர்த்தகநாமமான Hikvision மூலம் உங்களுக்காக பெருமையுடன் கொண்டு வரப்படும் ஸ்மார்ட் கண்காணிப்பின் எதிர்காலமாகும்.