இலங்கையில் முதற்தடவையாக 11ஆவது தலைமுறை லெப்டொப்களை அறிமுகப்படுத்தும் Singer மற்றும் ASUS

Singer Sri Lanka மற்றும் ASUS நிறுவனத்துக்கு இடையிலான வலுவான பங்குடமையின் விளைவாக இலங்கையில் முதற்தடவையாக 11ஆம் தலைமுறை லெப்டொப்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளன. Singer இன் அண்மைய அறிமுகமான 11ஆவது தலைமுறை Intel புரசசர்களுடன் கூடிய ASUS லெப்டொப்கள் இரண்டு வருட உலகளாவிய உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த புதிய 11ஆவது தலைமுறை வரிசையானது, Intel TGL தளத்தில் புத்தம் புதிய அம்சங்களுடன் மெல்லிய மற்றும் இலகு நிறை கொண்ட லெப்டொப்களுக்கு சிறந்த புரசசர்களை வழங்குவதன் மூலமாக அர்த்தமுள்ள தொழில்நுட்பத்தை நனவாக்குகின்றது.

ASUS இன் அறிவார்ந்த செயல்திறன் தொழில்நுட்பமானது 40% வரையான உச்ச செயல்திறன் மேம்படுத்தலை அளிப்பதுடன், விவேகமாகவும் நிலையானதாகவும் CPU செயல்திறனை அதிகரிக்கவும், நாள் முழுவதும் மின்கலத்தின் ஆற்றலை நீடித்து வைத்திருக்கவும் உதவுகின்றது. அதேபோல், லெப்டொப்பானது நாள் முழுவதும் இரைச்சல் இன்றியும், குளிர்ச்சியாகவும் இயங்குவதை உறுதி செய்கிறது.

உலகளாவிய கணினி வன்பொருள் ஜாம்பவானான ASUS மற்றும் பிரத்தியேக பாரிய அளவிலான விற்பனையாளரான (LFR) – Singer Sri Lanka இடையிலான பங்குடமையானது நாட்டின் விற்பனை சந்தைப்படுத்தல் துறையில் ஒரு உண்மையான வெற்றிக் கதையை குறிக்கிறது. ASUS 2018 ஆம் ஆண்டில் Singer Sri Lanka  நிறுவனத்தை அதன் LFR ஆக நியமித்ததுடன் அன்றிலிருந்து இந்த பங்குடமையானது Singer Mega மற்றும் Singer Plus காட்சியறைகள் உள்ளடங்கலாக  430 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய இலங்கையின் பாரிய  விற்பனை வலையமைப்பின் ஊடாக ASUS தயாரிப்புகளுக்கு சிறந்த மற்றும் மேம்பட்ட அணுகலை வழங்கியுள்ளது.

ASUS  ஒரு பல்தேசிய கணினி வன்பொருள் நிறுவனமென்பதுடன் அதன் புத்தாக்க நோக்கமானது, உலகம் புதிய கிளவுட் கணினியல் சகாப்தத்தில் நுழையும் வேளையில் பாவனையாளர்களின் கற்பனையை மிஞ்சும் தொலைநோக்குப் பார்வையுடன் பொருந்துகின்றது. இந்த வர்த்தகநாமமானது நுகர்வோருக்கு பல வகையான ஆச்சரியமூட்டும் புத்தாக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது உலகின் முதல் தர மதர்போர்ட் மற்றும் கேமிங் லெப்டொப் வர்த்தகநாமமாகவும், உலகின் முதல் மூன்று நுகர்வோர் லெப்டொப் விற்பனையாளர்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

அண்மைய 11 ஆவது தலைமுறை லெப்டொப் தொடரின் கீழ், ASUS அண்மையில் ASUS ZenBook 14 (UX425) ஐ அறிமுகப்படுத்தியதுடன், இது ஸ்மார்ட் மற்றும் முதற்தர செயல்திறனுடன் சிறந்த பாவனையாளர் அனுபவத்தைக் கொண்டுள்ள அதன் முக்கிய, கொண்டு செல்வதற்கு இலகுவான தயாரிப்புகளில் ஒன்றாகும். ZenBook 14   மிக இலகுவான வெறும் 1.17 கிலோ எடை கொண்டதுடன் 13.9 mm மெல்லியது. இந்த மொடலின் மற்றொரு சிறப்பம்சம் 22 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் அதன் நீடித்த மின்கல ஆயுளாகும்.

IR கெமராவுடன் கூடிய hands-free உள்நுழைவு, சௌகரியமான டைப்பிங் செயற்பாட்டுக்கு Ergolift hinge மற்றும் edge-to-edge விசைப்பலகை,  சிறப்பான எண்ணியல் கீபோர்ட் தீர்வுக்காக பிரத்தியேக  number pad 2.0,  முழுமையான அனுபவத்தினை வழங்கக் கூடிய வகையில் 90 வீத screen to body ratio உடன் கூடிய NanoEdge திரை போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும்  ZenBook 14இன் USB-C Easy Charge வசதியானது அதி வேகமாக சார்ஜிங் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பை வழங்குகின்றது.

மறுபக்கத்தில், Singer Sri Lanka  அதன் இலத்திரனியல் அலைவரிசையான www.singer.lk மூலமாகவும் வலுவூட்டப்படுவதுடன், 600 க்கும் மேற்பட்ட மின்னணு பொருட்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் கொண்ட தயாரிப்பு வரிசையுடன்  விற்பனைப் பிரிவில் முன்னணியில் உள்ளது. 430 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்ட சிங்கர், சிறப்பான விற்பனைக்குப் பின்னரான சேவைகளுடன் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. இந்நிறுவனம் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இலங்கையில் முதன்மையான மக்கள் வர்த்தகநாமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய 11 ஆவது தலைமுறை வரிசையானது நாடுமுழுவதும் உள்ள Singer காட்சியறைகளிலும் கிடைக்கப் பெறுவதுடன். பரவலாக அறியப்பட்ட Singer Sri Lankaவின் சேவை மேன்மையுடன் கூடிய அதி நவீன தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அனுபவித்து மகிழும் வாய்ப்பை வழங்குவதற்காக இந்த பங்குடமையை தொடர்வதில் ASUS மகிழ்ச்சியடைகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *