வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான வசதி மற்றும் மதிப்புகளை மீள்வரையறை செய்யும் வகையிலான ஒரு முக்கிய கூட்டுறவில், இலங்கையின் மூன்றாவது பெரிய காப்புறுதித் தரகரும், டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் காப்புறுதிப் பிரிவுமான Assetline Insurance Brokers (AIBL) நிறுவனம் HUTCH ஸ்ரீ லங்காவுடன் இணைந்து, அனைத்து HUTCH ரோமிங் வாடிக்கையாளர்களுக்கும் இலவச பயணக் காப்புறுதியை வழங்குகிறது.
இந்த பிரத்தியேகப் பாதுகாப்பானது Allianz Insurance உடன் இணைந்து வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதுடன், வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு மன அமைதியையும், மன உறுதியையும் வழங்குகிறது. வலுவான கூட்டு நிறுவனப் பங்காளித்துவங்கள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் மூலம் காப்புறுதியை மேலும் அணுகக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், வாடிக்கையாளரை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான AIBL இன் உறுதிப்பாட்டை இந்த திட்டம் எடுத்துக் காட்டுகிறது.
David Pieris Group of Companies குழுமத்தின் ஒரு துணை நிறுவனமும் காப்புறுதிப் பிரிவுமான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) நிறுவனம், இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், இலங்கையின் மூன்றாவது மிகப் பெரிய காப்புறுதித் தரகராக விளங்குகின்றது. மோட்டார் வாகன காப்புறுதி, ஆயுள் காப்புறுதி, பயண காப்புறுதி முதல் கூட்டு நிறுவன இடர் முகாமைத்துவம் வரை, தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரின் பிரத்தியேக தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரிவான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
CK Hutchison Holdings (CKHH) நிறுவனத்தின் துணை நிறுவனமான HUTCH ஸ்ரீ லங்கா நிறுவனம், இலங்கைத் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக விளங்குகின்றது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட, Fortune 500 இல் பட்டியலிடப்பட்ட நிறுவனமான CKHH, தொலைத்தொடர்புகள் உள்ளிட்ட ஆறு துறைகளில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குவதுடன், 2023 இல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. தற்போது, HUTCH நிறுவனத்தின் 4G வலையமைப்பானது, இலங்கையின் மக்கள்தொகையில் 95% ஐ பூரணப்படுத்துகின்றது. அத்துடன், நாட்டின் டிஜிட்டல் தேவைகளுக்கு ஆதரவளிக்க நிறுவனம் 5G இற்கு தயாராக உள்ளது. கட்டுப்படியான, நம்பகமான வலையமைப்பு இணைப்புடன், இலங்கையின் தொலைத்தொடர்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய உந்து சக்தியாக HUTCH செயற்பட்டு வருகிறது. மிக தொலைதூரப் பகுதிகளிலும் தொடர்பாடல், வணிகத் திறன் மற்றும் பொழுதுபோக்கிற்கான அணுகலை இது விரிவுபடுத்த வழி வகுக்கிறது.
இந்தக் கூட்டணி குறித்து கருத்து வெளியிட்ட அசெட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிஹால் ஹந்துன்கே, “AIBL ஆகிய நாம், மக்களின் வாழ்க்கைக்கு உண்மையான மதிப்பைச் சேர்க்கும் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதே எமது இலக்காகும். HUTCH உடன் பங்காளித்துவம் செய்வதானது, அவர்களின் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற பாதுகாப்பை வழங்க எமக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அத்துடன் இது இரண்டு நம்பகமான சேவை வழங்குநர்களின் பலங்களை ஒருங்கிணைக்கிறது. காப்புறுதியை அனைவருக்கும் எளிமையானதாகவும், புத்திசாலித்தனமாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவது தொடர்பான எமது பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல்லாகும்.” என்றார்.
இன்றைய தொடர்பாடலுடன் எவ்வேளையும் இணைக்கப்பட்ட தலைமுறையினரின் வளர்ந்து வரும் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பயண காலத்தின் அடிப்படையில் பலதரப்பட்ட ரோமிங் பொதிகளை HUTCH வழங்குகிறது. அவற்றில் மிகவும் பிரபலமானது 10GB வாராந்த திட்டம் – இதில் தற்போது 5,000 டொலர் பெறுமதியான இலவச பயணக் காப்புறுதி இணைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு அவர்களது பயணம் முழுவதும் ஒப்பிடமுடியாத மதிப்பையும் நம்பிக்கையையும் வழங்குகிறது.
இது குறித்து, HUTCH இன் சர்வதேச வணிக தலைவரான முஷ்தாக் மன்சூர்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான காப்புறுதித் தரகர்களில் ஒருவரான அசெட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்த விரிவான பயணக் காப்புறுதியை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் ரோமிங் அனுபவத்தை நாம் ஒன்றிணைந்து மேம்படுத்துகிறோம்.” என்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்துடன், நேர்மை மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஒரு நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ள அசெட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 50 இற்கும் மேற்பட்ட இணைக்கும் புள்ளிகள் மூலம் இலங்கை முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சீரமைக்கப்பட்ட காப்புறுதித் தீர்வுகளுடன் சந்தையில் தொடர்ச்சியாக முன்னிலை வகிக்கிறது. AIBL தற்போது இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனங்களில் பலவற்றிற்கான காப்புறுதி தயாரிப்புகளை நிர்வகிப்பதுடன், வாடிக்கையாளர்களால் உணரக்கூடிய மதிப்பை கொண்டு வரும் மூலோபாய ரீதியான பங்காளித்துவங்கள் மூலம் அது தனது எல்லையை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருகிறது.
HUTCH உடனான இந்தக் கூட்டணித்துவமானது, AIBL இன் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. இது நவீன நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, புத்தாக்கம், நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் விசேடத்துவத்தை ஒருங்கிணைக்கும் அதன் திறனை எடுத்துக்காட்டுகிறது.
நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் சேவையில் விசேடத்துவத்திற்கான அர்ப்பணிப்புடன், புத்தாக்கமான மற்றும் நம்பகமான காப்புறுதித் தீர்வுகள் மூலம் இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு AIBL தொடர்ச்சியாக வலுவூட்டி வருகிறது.
Image CaptionAIBL இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதான அதிகாரியுமான நிஹால் ஹந்துன்கே மற்றும் HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இவர்களுடன் HUTCH நிறுவனத்தின் சர்வதேச வணிக முகாமையாளர் செயந்தன் திருமகன், HUTCH இன் சர்வதேச வணிகத் தலைவர் முஷ்தாக் மன்சூர்தீன், AIBL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹேஷ் டி அல்விஸ், AIBL இன் கூட்டு நிறுவன மற்றும் விசேட திட்டங்கள் தலைவர் வாசனா தர்மசேன மற்றும் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் மேனக எஸ். குணசேகர ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.