GWMமற்றும்டேவிட்பீரிஸ்ஆட்டோமொபைல்ஸ்இடையேயானமூலோபாயகூட்டாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து ‘Hello, to More’ஐவரவேற்கும் இலங்கை

  • DPA ஆனது இலங்கையில் GWMக்கு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக நியமிக்கப்படுகிறது
  • ஹைப்ரிட் மற்றும் புதிய மின்சார வாகனத் தொகுப்பை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் மோட்டார் வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகன நிறுவனமான GWMஇன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தராக இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கூட்டாண்மை, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம், அதிக தெரிவு, நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் புதிய மின்சார வாகனங்களை (NEVs) அறிமுகப்படுத்துகிறது.

இந்த அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வரிசையில் HAVAL H6 ஹைப்ரிட் (HEV) மற்றும் Haval GT Plug-in Hybrid – PHEV ஆகியன அடங்கும். இவை இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தில் ஓட்டும் சந்தர்ப்பத்தையும், நீண்ட தூரப் பயணங்களுக்கு பெட்ரோலைப் பயன்படுத்துவதன் மூலமும் தனது பயணத்தைத் தொடர்வதற்கான உறுதியையும் வழங்குகின்றன. இந்த மாதிரிகள், எரிபொருள் சிக்கனம் மற்றும் பயணத் தயார்நிலை ஆகிய இரட்டைத் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. இதன் மூலம் அன்றாட எரிபொருள் சேமிப்பை வழங்குவதுடன், நகரைத் தாண்டிய பயணங்களுக்கும் நம்பிக்கையான தூரத்தை (range confidence) உறுதி செய்கின்றன. இவற்றுடன், DPA நிறுவனம் TANK 300 Hybrid, TANK 500 Hybrid மற்றும் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA வகை வாகனங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது உள்ளூர் ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் தேர்வுகளை மேலும் விரிவாக்குகிறது.

இந்த அறிமுகமானது, GWM பிரத்யேக தூரநோக்கு சிந்தனையான “Hello, to More”ஐ பிரகடனம் செய்கிறது. இது சுதந்திரம், நம்பிக்கை மற்றும் மதிப்பு போன்ற மனித நலன்களை வலியுறுத்தும் ஒரு வரவேற்கத்தக்க வாக்குறுதியாகும். அத்துடன், இலங்கைச் சந்தையில் அறிமுகம் பெருகும்போது, உலகளாவிய வர்த்தக நாமத்தின் தூரநோக்கு சிந்தனையான “Go With More” இற்கான வழியை இது வகுக்கிறது.

GWM நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாடுகளுடன் வலுவான உலகளாவிய தடத்தை நிறுவியுள்ளது. அதன் HAVAL H6 வாகனம் ஆஸ்திரேலியாவில் முதல் தர SUV ஆகும். இது நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் மதிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டு, உலகளாவிய போட்டி நிறைந்த வாகனச் சந்தையில் GWMஇன் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. DPAஇன் நாடு தழுவிய இருப்பு மற்றும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தின் மூலம், இலங்கையின் மிகவும் விரிவான வாகனப் போக்குவரத்து வலையமைப்பின் விற்பனைக்குப் பிந்தைய நம்பிக்கை, சேவை மற்றும் விநியோகத்தின் ஆதரவுடன், இலங்கை வாடிக்கையாளர்கள் இனி GWMஇன் உலகளாவிய நிபுணத்துவத்தைப் பெறுவார்கள்.

DPA மூலம் இப்போது கிடைக்கும் இந்த வாகன வரிசையானது, நோக்கத்துடன் கூடிய தேர்வை வழங்குவதன் மூலம் இலங்கையில் வாகனப் போக்குவரத்தை (mobility) மறுவரையறை செய்கிறது. வாடிக்கையாளர்கள் இனி திறன் (efficiency), செயல்திறன் (performance) அல்லது தயார்நிலை (readiness) ஆகியவற்றுக்கிடையே சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. GWMஇன் ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனத் தொகுப்பு முழுமையான நன்மைகளை வழங்குகிறது: நகரத்திற்குள் மின்சாரத்தில் இயங்கும் நெகிழ்வுத்தன்மை, அதைத் தாண்டிச் செல்ல பெட்ரோலின் வீச்சு (range flexibility), அன்றாடப் பயணங்களை செலவு குறைந்ததாக மாற்றும் சிக்கனம் (economy), மற்றும் தேவைப்படும்போது பெட்ரோல் சக்தியுடன் இணைந்த உடனடி மின்-முறுக்குவிசையின் (instant e-torque) செயல்திறன் ஆகியவை இதில் அடங்கும்.

குறிப்பாக, இது நாடு தழுவிய சேவை அணுகல் மற்றும் DPAஇன் 40+ ஆண்டுகால பாரம்பரியத்தின் நம்பகத்தன்மையால் வலுவூட்டப்படுகிறது. இவை அனைத்தும் இணைந்து, இலங்கையர்கள் போக்குவரத்து எதிர்காலத்தை இன்றே தழுவிக்கொள்ளும் சுதந்திரம், நெகிழ்வுத் தன்மை (resilience) மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஒரு மூலோபாய நகர்வுத் தீர்வை (strategic mobility solution) வழங்குகின்றன.

இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு வாகன மாதிரியும் இந்த வாக்குறுதியைத் தனித்துவமான வழியில் பிரதிபலிக்கிறது. Haval H6 வாகனமானது குடும்பத்திற்கு ஏற்ற வசதிகள், தொழில்நுட்பத்தை விரும்பும் நகர்ப்புற நிபுணர்களுக்கு ஏற்றவாறு, வாழ்க்கை முறை நேர்த்தியை (lifestyle sophistication) வழங்குகிறது. Haval GT ஆனது உறுதியைக் குறிக்கிறது; வடிவம் மற்றும் சக்தி இரண்டையும் சம அளவில் விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. Tank 300 சாகசத்தை வழங்குகிறது; நகரின் எல்லைகளுக்கு அப்பால் சுதந்திரத்தை விரும்பும் ஓட்டுநர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், Tank 500 சாலையில் ஆதிக்கம் செலுத்துகிறது; இடவசதி, ஆடம்பரம் மற்றும் அதிகாரத்தை வழங்குகிறது. இந்தத் தனித்துவமான வடிவங்கள் மூலம், GWM மற்றும் DPA ஆகியவை இலங்கையில் போக்குவரத்து எதிர்காலத்தை வடிவமைக்கும் அதே வேளையில், பல்வேறு ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அனுபவங்களை ஒருங்கிணைத்து வழங்குகின்றன.

மேலதிக தகவல்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0117 888 666.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *