65 வருட நம்பிக்கையான கூட்டாண்மையை, சந்தை வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் விசேடத்துவத்துடனான சாதனையுடன் கொண்டாடுகிறது

இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக வாகன உற்பத்தியாளரும், உலகளாவிய போக்குவரத்து தீர்வு வழங்குனர்களில் முன்னணி நிறுவனமுமான Tata Motors, இன்று தனது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான DIMO நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் 10 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான அறிமுகமானது, முன்னேற்றமான போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் Tata Motors நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதோடு நாட்டில் தனது விரிவாக்கத்தையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், DIMO நிறுவனத்துடனான 65 ஆண்டுகால நம்பிக்கையான கூட்டாண்மையை நிறுவனம் கொண்டாடுகிறது. இது பரஸ்பர வளர்ச்சியையும் வாடிக்கையாளர் விசேடத்துவத்ததிற்கான தொடர்ச்சியான முயற்சியையும் அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மையாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்கள், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து தேவைகளின் பரந்துபட்ட அம்சங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உரிய நோக்கம் மற்றும் அதற்கான துல்லியத் தன்மையுடன் உருவாக்கப்பட்ட இவ்வாகனங்கள், இலங்கையின் வணிக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து துறையில் அடைய வேண்டிய மாற்றத்தை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் புத்திசாலித்தனமான, நம்பிக்கையான, செயல்திறன் மிக்க தீர்வுகளை வழங்குகின்றன. கடினமான தரைகளில் நீடித்த தன்மை தொடர்பில் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இவ்வாகனங்கள், மேம்பட்ட வசதி மற்றும் செயல்திறனை வழங்கி, ஒவ்வொரு பயணத்தையும் சிறப்புமிக்கதாக மாற்றுகின்றன.
புதிய வாகன வரிசையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் Tata Motors நிறைவேற்று பணிப்பாளர் Girish Wagh கருத்து வெளியிடுகையில், “மிக உயர்ந்த பாரம்பரியம் மற்றும் இலங்கை சந்தையைப் பற்றிய ஆழமான புரிதலுடன், நாட்டின் வளர்ந்து வரும் உட்கட்டமைப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் லொஜிஸ்டிக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்பாட்டு ரீதியான வாகனங்களை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த மேம்படுத்தப்பட்ட வாகன வகைகள், மேம்பட்ட செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றின் வலுவான சேர்க்கையை வழங்குகிறது. இது வாடிக்கையாளர்கள் அதிக திறன் மற்றும் இலாபகரமான வளர்ச்சியை அடைய உதவும். DIMO நிறுவனத்தின் 65 வருட கால நிலையான கூட்டாண்மையின் ஆதரவுடன், இந்த முன்னேற்றகரமான வாகனங்கள் இலங்கையின் போக்குவரத்து துறையில் புதிய அளவுகோல்களை உருவாக்கும் என நம்புகிறோம்.” என்றார்.
Tata Motors நிறுவனத்துடனான நீண்டகால கூட்டாண்மையைப் பற்றி, DIMO நிறுவனத் தலைவர் ரஞ்சித் பண்டிதகே கருத்து வெளியிடுகையில், “65 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் Tata Motors நிறுவனத்தை DIMO நிறுவனம் பெருமையுடன்
பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையில் புதிய அளவுகோல்களை ஏற்படுத்தும் மேம்பட்ட வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தி. இந்த புதிய வாகன வரிசையானது, உலகத் தரம் கொண்ட பொறியியலை, எமது சந்தையின் மாற்றமடையும் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட தீர்வுகளுடன் இணைக்கிறது.
DIMO நிறுவனத்தின் ஒப்பற்ற விற்பனைக்குப் பிந்தைய நிபுணத்துவத்தின் மூலம், ஒவ்வொரு வாகனமும் அதன் வாழ்நாள் முழுவதும் நீடித்த செயல்திறன் மற்றும் மதிப்பை வழங்குவதை நாம் உறுதி செய்கிறோம். Tata Motors உடன் இணைந்து, நாட்டிற்கு நிலையான வளர்ச்சியை முன்னெடுத்து, உயர் செயல்திறன் கொண்ட போக்குவரத்திற்கான சூழலை உருவாக்குவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.” என்றார்.
முக்கிய அம்சங்கள்: துறை சார்ந்த, பயன்பாடு சார்ந்த வாகனங்கள் அறிமுகம்
சரக்கு போக்குவரத்து தீர்வுகள்
- நகருக்குள்ளான லொஜிஸ்டிக் மற்றும் நீண்ட இறுதித் தூர விநியோகத்திற்கு: Ultra வரிசை லொறிகள் — T.7, T.9, T.12, T.14 மற்றும் 1918.T — இவை Tata Motors இன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் லொறி வகையில் கட்டமைக்கப்பட்டவையாகும். உயர் எரிபொருள் திறன், மேம்பட்ட செயல்திறன், எளிமையான இயக்கம் மற்றும் அதிக உற்பத்தித்திறனை வழங்குகின்றன.
- நீண்ட தூர மற்றும் கனரக போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு: Prima 5530.S மற்றும் Signa 5530.S பிரைம் மூவர் வாகனங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வருகின்றன. எரிபொருள் திறனை மேம்படுத்தி, பாதுகாப்பு தரங்களை அதிகரித்து, உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன. இதன் மூலம் லொஜிஸ்டிக் மற்றும் உட்கட்டமைப்பு பயன்பாடுகளுக்கு இவை சிறந்ததாக காணப்படுகின்றன.
பயணிகள் போக்குவரத்து தீர்வுகள்
- நீண்ட தூர, பயணிகளுக்கு சொகுசான நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு: LPO 1622 Magna பஸ். சிறந்த செயல்திறன், குறைந்த செலவு, Electronic Stability Control போன்ற மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வசதியான எயார் சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் வருகிறது. இதன் மூலம் அனைத்து வகையான பாதைகளிலும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை உறுதி செய்கிறது.
- அலுவலக ஊழியர் போக்குவரத்திற்கு: Ultra Prime LPO 8.6 மற்றும் LPO 11.6 பஸ்கள் முறையே 34 மற்றும் 40 பயணிகளுக்கான வசதியான இருக்கைகளுடன் எரிபொருள் திறன் கொண்ட செயல்திறனை வழங்குகின்றன. உயர் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புடன், நாளாந்த அலுவலக ஊழியர் போக்குவரத்திற்கு சிறந்த மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குகின்றன.
வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவைகள்:
- முக்கியமான 15 இடங்களில் அமைந்த சேவை மையங்கள்: நாடு முழுவதும் காணப்படும் DIMO நிறுவனத்தின் வலையமைப்பு அசல் உதிரிப் பாகங்களை எளிதில் பெற்றுக்கொள்வதையும், தகுந்த நேரத்தில் பராமரிப்பு ஆதரவைப் பெற்றுக்கொள்வதையும் உறுதிசெய்கின்றது.
- விரிவான உத்தரவாத பாதுகாப்பு: தெரிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது 300,000 கி.மீ. வரை நீடிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகின்றன. இது நிம்மதியையும் நீண்டகால மதிப்பையும் உறுதி செய்கிறது.
- முழுமையான வருடாந்த பராமரிப்பு ஒப்பந்தங்கள் (AMC): வாகனத்தின் செயல்திறனை அதிகரித்து செலவுத் திறனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயற்பாட்டு தேவைகளுக்கேற்ற வகையில் அமைக்கப்பட்ட பிரத்தியேகமான AMC பொதிகளில் கிடைக்கின்றன.
Tata Motors நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் உலகளாவிய ரீதியில் 40 இற்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 1 தொன் எடைக்கு கீழ் கொள்ளளவுள்ள சிறிய லொறிகள் முதல் 60 தொன் பாரம் தாங்கும் கனரக லொறிகள், 9 முதல் 71 இருக்கைகளுடன் கூடிய பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான தயாரிப்பு தொகுப்பினை நிறுவனம் கொண்டுள்ளது. வர்த்தக போக்குவரத்து துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், குறைந்த செலவில் பொறியியல் மற்றும் உலகளாவிய புத்தாக்கங்களை வழங்குவதன் மூலம் செயல்திறன், நீடித்த பயன்பாடு மற்றும் மொத்த செலவுத் திறன் ஆகியவற்றில் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது..
-ENDS-