
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தவிசாளர்
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், அண்மையில் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஜனசக்தி பைனான்ஸ், 2025 ஜுன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் ரூ. 60 மில்லியனை வரிக்கு பிந்திய தேறிய இலாபமாக (NPAT) பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேறிய செயற்பாட்டு வருமானம் ரூ. 672 மில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35% வளர்ச்சியாகும். வட்டி வருமான அதிகரிப்பின் அடிப்படையில் இந்த வினைத்திறன் செயலாற்றியிருந்ததுடன், விரிவாக்கப்பட்ட கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் பிரிவு கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 16.61 பில்லியனிலிருந்து ரூ. 23.81 பில்லியனாக உயர்ந்திருந்தது.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “ஒழுக்கமான நிறைவேற்றம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நோக்கு ஆகியவற்றின் விளைவாக இந்த சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்ய முடிந்தது. நாம் மேற்கொண்டுள்ள படிமுறைகளை மீளுறுதி செய்வதாக முதல் காலாண்டு பெறுபேறுகள் அமைந்துள்ளன. நாம் அவதானிக்கும் இலாபம் மற்றும் வைப்பு வளர்ச்சி என்பன, எமது முன்கள செயற்பாடுகள் முதல் பின் அலுவலக செயற்பாடுகள் வரையிலான அணிகளிடையே மூலோபாய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் பெறுபேறாக அமைந்துள்ளன. தெளிவான நோக்குடன், பெருமளவு சந்தைப் பங்கை பெற்றுக் கொள்வதற்காக எமது வர்த்தக நாம நிலைமாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, சிறந்த வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் நிலைபேறான நிதிசார் வினைத்திறன்களை முன்னெடுப்பதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த காலாண்டு நிதிப் பெறுபேறுகள் என்பது வெறும் இலக்கங்களுக்கு அப்பாலானது. எமது பங்காளர்களுடன் நாம் எவ்வாறு ஈடுபாட்டை பேணுகிறோம் என்பதில் அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது. எமது புதுப்பிக்கப்பட்ட வர்த்தக நாம அடையாளம் என்பது, ஒழுக்கமான வளர்ச்சி மூலோபாயம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்திய செயற்பாடுகளுக்கான ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. எமது முயற்சிகளினூடாக தொடர்ச்சியான வினைத்திறன் முன்னெடுக்கப்பட்டு, அதிகரித்துச் செல்லும் நிதிச் சேவைகள் கட்டமைப்பில் தங்கியிருக்கக்கூடிய பங்காளராக திகழச் செய்வதில் பங்காற்றும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் உறுதி செய்யும் வகையில், காலாண்டு அடிப்படையிலான வைப்புகள் வளர்ச்சி 6% ஆக பதிவாகி ரூ. 16.90 பில்லியனை எய்தியிருந்தது. நிறுவனத்தின் உறுதியான நிதிசார் நிலைப்பாட்டை சீரான வளர்ச்சி வெளிப்படுத்தியுள்ளதுடன், சிறந்த பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி புதிய வர்த்தக நாமத்தின் கீழ் தொடர்ந்தும் வியாபிக்கும் நிலையில், உறுதியான ஆளுகை மற்றும் தூர நோக்குடைய தலைமைத்துவ அணியினரின் வழிநடத்தலில், நிதிசார் உள்ளடக்கம், டிஜிட்டல் அணுகலை மேம்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப புத்தாக்கமான அம்சங்களை வழங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
முடிவடைகிறது.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)
ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித் தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவதும் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகும். LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.