ஷாங்க்ரி-லாஹோட்டலில்நடைபெற்றMAXXIS “வெற்றிபெறஉறுதி” விருதுகள்இரவு

“Maxxis Committed to Conquer” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற Maxxis வருடாந்த விருது விழா, மணிக்கு Shangri-La ஹோட்டலில் உள்ள மண்டபத்தில் வெகு விமரிசையாக அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதான விருந்தினராக Maxxis Taiwan International நிறுவனத்தின் உபதலைவர் Lenny H. K. Lee பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக Maxxis International Taiwan நிறுவனத்தின் சர்வதேச விற்பனை முகாமையாளர் Jack Lee, பிரிவு முகாமையாளர் Kenny, விற்பனை பிரதிநிதி Eddy ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழா, பாரம்பரிய குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதான விருந்தினர், கௌரவ விருந்தினர்களுடன், Tyre House Group நிறுவனத்தின் தலைவர் லெஸ்லி பொன்சேகா, முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பொன்சேகா, குழும பணிப்பாளர் கயான் பொன்சேகா, பணிப்பாளர் காந்தி தலகல மற்றும் செயற்பாட்டு பணிப்பாளர் ரொஹான் பீரிஸ் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கை ஏற்றினர்.

இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் 200 Maxxis முகவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 Maxxis முகவர்கள் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக மதிப்பீடு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டின் சிறந்த முகவர் விருது U & H Wheels (Pvt) Ltd., Colombo 02 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வசந்த பெரேரா இவ்விருதை, Maxxis Taiwan International உபதலைவர் Lenny H. K. Lee மற்றும் Tyre House Group தலைவர் லெஸ்லி பொன்சேகா, முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பொன்சேகா ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இரண்டாம் இடத்திற்கான விருது Wijaya Motors & Tyre House (Pvt) Ltd., Colombo 14 நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சஜித் சங்கலன பெற்றுக் கொண்டார். மூன்றாம் இடத்திற்கான விருது Ravindra Lanka Auto Service (Pvt) Ltd., Dehiwala நிறுவனத்தின் பணிப்பாளர் H.A.K. லக்‌ஷ்மனுக்கு வழங்கப்பட்டது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *