இலங்கை முழுவதும் அனைவருக்கும் நிதி வசதிகள் கிடைக்கப்பெறுவதை விரிவுபடுத்தும் முகமாக மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் கீழ், வட மாகாணத்தில் இரண்டு புதிய கிளைகளை அது சமீபத்தில் திறந்து வைத்துள்ளது. இது நிறுவனத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ள 74வது மற்றும் 75வது கிளைகளாக அமைந்துள்ளதுடன், சமூக அடிப்படையிலான நிதிச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் அதன் அர்ப்பணிப்பை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.
அதன் 74வது கிளை 2025 ஏப்ரல் 4ம் திகதியன்று இல 151, ஏ9 வீதி, கிளிநொச்சி என்ற முகவரியிலும், 75வது கிளையானது 1ம் வட்டாரம், பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு என்ற முகவரியிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இரு நிகழ்வுகளிலும் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஜெரார்ட் ஒன்டாட்ஜி, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி திரு. லக்சந்த குணவர்தன, ஏனைய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட மதிப்பிற்குரிய விருந்தினர்கள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் தனது கிளை விரிவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கான மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தூரநோக்கு இலக்கின் ஒரு பகுதியாக இந்த விஸ்தரிப்பு முயற்சிகள் அமைந்துள்ளன. அனைத்து கலாச்சார, மத மற்றும் சமூக பின்னணிகளையும் சார்ந்த சமூகங்களுக்கு தனது நிதிச் சேவைகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதில் நிறுவனத்தின் அணுகுமுறையானது ஆழமாக வேரூன்றியுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் நிதியியல் வலுவூட்டலை வழங்குவதே அதன் இறுதி இலக்காகும்.
புதிய கிளைகள் இரண்டும் குத்தகை, தங்கக் கடன்கள், நிலையான வைப்புக்கள் மற்றும் சிறுவர் சேமிப்புக்கள் உள்ளிட்ட உயர்தர நிதிச் சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவைகளை மிகவும் பரந்துபட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு வழங்குவதன் மூலம், குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மத்தியில் நிலைபேறான அபிவிருத்தியை வளர்ப்பதை நிறுவனம் தனது நோக்காகக் கொண்டுள்ளது.
வெற்றி மற்றும் புத்தாக்கத்தின் நீண்ட சாதனைப் பதிவைப் பெருமையுடன் சுமக்கின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், நம்பகமான, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதித் தீர்வுகளை வழங்குவதற்கு தொடர்ந்து வழிவகுத்து வருகிறது. நிதிச் சேவைகளுக்கான அணுகல் என்பது சமூகங்களை மாற்றுவதற்கும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழிமுறையாகும் என்ற நிறுவனத்தின் நம்பிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது.
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் இலங்கை முழுவதும் தனது அடிச்சுவட்டை வலுப்படுத்தி வரும் நிலையில், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் வர்த்தகநாமத்தின் அத்திவாரமாகக் காணப்படும் ஒப்பற்ற அரவணைப்பு, சௌகரியம் மற்றும் நிபுணத்துவத்தை அனுபவிப்பதற்கு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.