Hayleys Fentons தனது முதலாவது அதிவேக அனுபவ மையத்தை அறிமுகப்படுத்துகிறது

Hayleys Fentons Limited நிறுவனம், 223B, நாவல வீதி நுகேகொடையில் அதன் கன்னி அனுபவ மையத்தை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்த முன்னணி வசதியளிப்பு மையமானது, சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு (AVI), மின்னியல் மற்றும் ஒளியியல், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கம் மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் இணைப்பு மற்றும் எரிவாயு, வசதிகள் முகாமைத்துவம், தடையற்ற மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் முப்பரிமாண காட்சிப்படுத்தல், தொழில்துறை உதிரிப்பாகங்களின் விற்பனை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளில் நிறுவனத்தின் அதிநவீன தீர்வுகளை வழங்குகின்றது.

மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டமைந்துள்ள இந்த அனுபவ மையமானது, பங்குபற்றுதலுடனான தயாரிப்பு விளக்கங்கள், பார்வைக்கு மாறும் நிறுவல்கள் உள்ளிட்டவற்றுடன், பயிற்சி, ஒத்துழைப்பு போன்றவை தொடர்பான அறிவைப் பகிர்வதற்கான பிரத்தியேக பகுதிகளையும் கொண்டுள்ளது. இது Hayleys Fentons இன் புத்தாக்கமான சேவைகள் கையாளப்படும் விதத்தை அறியவும் அதில் ஈடுபடவும் வருகைதருவோருக்கு வாய்ப்பளிக்கிறது.

நிலைபேறான தன்மை முக்கிய இடத்தைப் பெறும் இந்த அனுபவ மையத்தில், Hayleys Solar இன் BIPV (Building-Integrated Photovoltaic) கூரையில் அமைக்கும் தொகுதியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் பசுமை புத்தாக்கம் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் எடுத்துக் காட்டுகிறது.

இந்த காட்சியறையின் அறிமுக நிகழ்வில் பேசிய Hayleys Fentons Limited முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக, “எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கமான, ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்காக நாம் அர்ப்பணித்துள்ளோம். Hayleys Fentons அனுபவ மையமானது ஒத்துழைப்பு, புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு மையமாகும். ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறக்க கூடிய இந்த மையத்தில் வாடிக்கையாளர்கள் தமது பிரத்தியேக தேவைகளுக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த மற்றும் தனித்துவமான வழியில், உலகின் சிறந்த வர்த்தகநாமங்களின் அதிநவீன தீர்வுகளை பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் முடிவெடுக்கும் செயன்முறை எளிதாகிறது.” என்றார்.

இந்த மாற்றமுறும் மையத்தைப் பார்வையிட Hayleys Fentons அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. இங்கு நிறுவனம் தனது அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பான விரிவான முதன் முறை பெறக் கூடிய அனுபவத்தை வழங்குகிறது.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, 0112102102 எனும் இலக்கத்துடன் Hayleys Fentons நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://www.hayleysfentons.com இணையத்தளத்தை பார்வையிடவும்.

Hayleys Fentons Limited பற்றி

1919 இல் நிறுவப்பட்ட Hayleys Fentons Limited இலங்கையின் ஆரம்ப பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கையின் நம்பர் 01 Solar EPC நிறுவனமும் MEP ஒப்பந்ததாரர் எனும் வகையிலும், நிறுவனம் 100 வருடங்களுக்கும் மேலாக தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு (AVI), மின்னியல் மற்றும் ஒளியியல், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கம் மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் இணைப்பு மற்றும் எரிவாயு, வசதிகள் முகாமைத்துவம், தடையற்ற மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் முப்பரிமாண காட்சிப்படுத்தல், தொழில்துறை உதிரிப்பாகங்களின் விற்பனை உள்ளிட்ட விடயங்கள் நிறுவனத்தின் முக்கிய துறைகளாகும். புத்தாக்கம் மற்றும் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்ற இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம், சிறந்த வாழ்க்கைக்கு நிலைபேறான மற்றும் புத்தாக்கமான பொறியியல் சேவைகளை வழங்குவதாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *