கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டி, நத்தார் பண்டிகைக்காக நத்தார் தாத்தாவை வரவேற்பதன் மூலம், அனைவரினதும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ‘Tropical Christmas’ (வெப்பமண்டல கிறிஸ்மஸ்) எண்ணக்கருவுடனான விடுமுறைச் செயற்பாடுகள் கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை இப்பண்டிகைக் காலத்தில் Pegasus Reef ஹோட்டல் கொண்டுவந்துள்ளது. இக்கொண்டாட்டங்கள் யாவும் முழுக் குடும்பத்தினருக்குமான தனித்துவமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியதோடு, பண்டிகைக் காலத்தின் பாரம்பரிய அரவணைப்பையும் மகிழ்ச்சியூட்டும் அதிர்வுகளையும் ஒன்றிணைத்தது. அழகாக ஒளிரும் இந்த கிறிஸ்மஸ் மரமானது அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத மாலை அனுபவத்தையும் ஒரு மகிழ்ச்சி மிக்க விடுமுறைக் காலத்திற்கான தொனியையும் அமைக்கிறது. இந்நிகழ்வில் கிறிஸ்மஸ் பரிசுகள் மற்றும் நத்தார் தாத்தாவுடன் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகள், சிறுவர்களுக்கான பங்குபற்றலுடன் கூடிய அம்சங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை விருந்தினர்கள் அனுபவித்தனர்.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, கிறிஸ்மஸின் மகிழ்ச்சியை இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் பரப்புவதற்காக, வட துருவத்தின் குளிரில் இருந்து தப்பித்து, சூடான வெப்பமண்டலத்திற்குள் நுழையும் வகையிலான நத்தார் தாத்தாவின் பிரம்மாண்டமான வருகை அமைந்திருந்தது. இது அந்த சூழலுக்கு மேலும் மெருகூட்டியதோடு, உண்மையான பண்டிகை உணர்வையும் வெளிப்படுத்தியது. கொண்டாட்டங்களுக்கு மேலும் சுவையை வழங்குவதற்காக வெப்பமண்டலத்தை மையப்படுத்திய பானங்கள் மற்றும் சுவையான உணவுகளும் பரிமாறப்பட்டன.
இந்த கொண்டாட்டங்கள் தொடர்பில் Pegasus Reef ஹோட்டலின் பொது முகாமையாளர் ரேணுக கொஸ்வத்த கருத்துத் தெரிவிக்கையில், “எமது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் எப்போதும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக அமைவதோடு, பண்டிகைக் காலத்திற்கான தொனிப் பொருளுக்கு ஏற்றதாக அமைத்துள்ளன. இந்த வருடத்தில், பண்டிகை மரபுகளுக்கு வித்தியாசமான ஒரு வெப்பமண்டல திருப்பத்தை வழங்குவதன் மூலம், எமது விருந்தினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விடுமுறைக் காலத்திற்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஆரம்பத்தை வழங்க முடிந்தது. நத்தார் தாத்தாவின் வரவேற்பு நிகழ்வு மற்றும் வெப்பமண்டல கிறிஸ்மஸ் மர ஒளியூட்டல் விழா’ உள்ளிட்ட உண்மையிலேயே மறக்க முடியாத பல்வேறு கொண்டாட்டங்களை நாம் இந்த டிசம்பரில் முன்னெடுக்கவுள்ளோம்.” என்றார்.
Pegasus Reef ஹோட்டலானது பல வருடங்களாக உற்சாகமான பண்டிகை நிகழ்வுகளை நடத்துவதில் நற்பெயரை கொண்டுள்ளது. இது அனைவருக்கும் வருடத்தின் இறுதி விருந்துகளுக்கான சிறந்த தெரிவாக அமைகிறது. இது இவ்வாறிருக்க, இந்த ஹோட்டலின் கிறிஸ்மஸ் பண்டிகைகள் யாவும் வருடம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விடயமாக அமைகின்றது. இவ்வருட ‘Tropical Christmas’ (வெப்பமண்டல கிறிஸ்மஸ்) கொண்டாட்டமானது, குடும்பங்கள், ஜோடிகள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு சூடான மற்றும் வரவேற்புமிக்க அமைப்புடனான பண்டிகையைக் கொண்டாட ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
கிறிஸ்மஸ் மர மின்விளக்குகள் மற்றும் நத்தார் தாத்தாவின் வரவேற்பு விருந்து ஆகியன வெப்பமண்டல வசீகரத்துடன் இணைந்த பாரம்பரிய விடுமுறை கொண்டாட்டங்களின் கலவையான ‘Tropical Christmas’ எனும் எண்ணக்கருவிற்கு உயிரூட்டின. எதிர்வரும் பண்டிகைக்கால கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வருமாறு Pegasus R