John Keells Logistics உடன்இணைந்து GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

விரிவான மனிதவள முகாமைத்துவம் (HR), சம்பளப்பட்டியல் (Payroll) மற்றும் வணிக மென்பொருள் தீர்வுகளின் முன்னணி வழங்குநரான GalleryHR நிறுவனமானது, அனைத்தும் ஒன்றிணைந்த தமது HR சேவை தீர்வை, இலங்கையின் முன்னணி மூன்றாம் தரப்பு போக்குவரத்து சேவைகள் வழங்குநரும், தொழில்துறையில் தமது புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் விசேடத்துவத்திற்கு பெயர் பெற்ற நிறுவனமுமான John Keells Logistics (PVT) LTD (JKLL) இற்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உலகத் தரம் வாய்ந்த மனிதவளத் தீர்வுகளை வழங்குவதற்கும், பல்வேறு தொழில்துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பயனுள்ள கூட்டாண்மைகளை உருவாக்குவதற்குமான SoftGallery இன் அர்ப்பணிப்பை இந்த முக்கிய சாதனை பிரதிபலிக்கிறது.

John Keells Logistics நிறுவனமானது, பல்வேறு தொழில்துறைகளில் தடையற்ற மற்றும் துல்லியமான விநியோகச் சங்கிலி முகாமைத்துவ சேவைகளை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட திறனைக் கொண்டுள்ளதோடு, GalleryHR ஐ ஏற்கனவே செயற்படுத்தி அதன் மூலம் அடையப்படும் பலனை கண்கூடாக கண்டு வருகின்றது.

SoftGallery இன் நிபுணத்துவத்தின் மூலம் ஆதரிக்கப்படும் இத்தீர்வானது, JKLL இன் HR செயன்முறைகளை நெறிப்படுத்தியுள்ளதோடு, மேம்பட்ட செயற்பாட்டுத் திறன் மற்றும் சாதகமான வணிகப் பெறுபேறுகளை வழங்கி, எதிர்கால மேம்பாடுகளுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இது குறித்து SoftGallery இன் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த பெரேரா தெரிவிக்கையில், “John Keells Logistics உடனான இந்த வெற்றிகரமான ஒத்துழைப்பு தொடர்பில் அறிவிப்பதில் நாம் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம். பிரதம செயற்பாட்டு அதிகாரி சுசித் டி சில்வா தலைமையிலான எமது குழுவினர், இது சுமூகமான முறையில் இயங்குவதை உறுதி செய்வதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். இந்த சாதனையானது, அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், உயர்மட்ட நிறுவனங்களுடன் பணிபுரியும் எமது திறனையும் எடுத்துக்காட்டுகின்றது.” என்றார்.

சுசித் டி சில்வா தெரிவிக்கையில், “இந்த ஒத்துழைப்பானது, எமது தலைமைத்துவத்தின் பலத்தையும் திறமையான அணி எம்மை முன்னோக்கிக் கொண்டு செல்வதையும் பறைசாற்றுகிறது. இந்தத் திட்டமானது John Keells Logistics நிறுவனத்திற்கு தொடர்ச்சியான, வலுவான முடிவுகளை வழங்கும் என்று நாம் நம்புகிறோம். அத்துடன் எதிர்கால வெற்றிக் கதைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.”

John Keells Logistics நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லசித மஞ்சநாயக்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “JKLL இன், செயற்பாட்டுத் திறன் மற்றும் சேவை வழங்கல்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். GalleryHR இன் ஒருங்கிணைப்பு எமது பயணத்தில் ஒரு முக்கியமான படியாகும். அத்துடன் இதன் மூலமான பிரதிபலன்களை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். எமது மனிதவள திறன்களை வலுப்படுத்தவும், நிலைபேறான வெற்றியை அடையவும் SoftGallery இன் நிபுணத்துவத்தை மேலும் மேம்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இந்த அமுல்படுத்தலானது SoftGallery மற்றும் John Keells Logistics ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த ஒத்துழைப்பு முன்னோக்கிச் நகரும்போது, மனிதவள தொழில்நுட்பத்தில் SoftGallery தமது முன்னேற்றங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என்பதுடன், JKLL புதிய மைல்கற்களை அடையும் வகையிலான மேம்பட்ட தீர்வுகளை வழங்கும்.

SoftGallery பற்றி

SoftGallery ஆனது பரந்துபட்ட, மனிதவள முகாமைத்துவம், சம்பளப்பட்டியல் தீர்வுகள் மற்றும் நிறுவன ரீதியான மென்பொருள் தீர்வுகள் போன்றவற்றின் முன்னணி வழங்குநராகும். அத்துடன் அனைத்து மட்டத்திலான வணிகங்களையும் அதன் செயல்முறைகளையும் நெறிப்படுத்தவும், செயற்றிறனை அதிகரிக்கவும், அவற்றின் மனித வள திறன்களை அதிகரிக்கவும் உதவுகிறது. விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்புடன், அனைத்தையும் ஒன்றிணைத்த ஒரு தளத்தை SoftGallery வழங்குகின்றது. இது திறமையாளர்களை கையகப்படுத்தல் மற்றும் இணைத்தல் ஆகிய செயன்முறைகள் முதல் சம்பளப்பட்டியல் முகாமைத்துவம் மற்றும் ஊழியர் செயல்திறன் மதிப்பீடு வரை பரந்த அளவிலான மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

Image Caption: தமது புத்தாக்கமான HR சேவை தீர்வை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதைக் கொண்டாடும் GalleryHR மற்றும் John Keels Logistics குழுவினர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *