முதலாவது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்தும் Fairway Koswatte

Fairway நிறுவனத்தின் சமீபத்திய நிர்மாணமான Urban Homes Koswatta (UHK) கடந்த ஜூன் மாதம் தனது முதலாவது வருடாந்த பொதுக் கூட்டத்தை (AGM) பெருமையுடன் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வானது, புதிய வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளின் நிர்வாகப் பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக கையளிப்பதைக் குறிக்கிறது. அந்த வகையில், இந்த மைல்கல்லைக் கொண்டாடவும், கட்டடத்திற்குள் சுறுசுறுப்பான மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் சமூகமொன்று ஏற்படுவதற்குமான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் குடியிருப்பாளர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டிருந்தனர்.

UHK ஆனது, கட்டட நிர்மாணத்தின் ஆரம்பம் முதல் நிறைவு வரை, நிலைபேறான, நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கான தூரநோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 250 அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட Fairway Holdings நிறுவனத்தின் திட்டமானது, சிறந்த வசதி, சொகுசு, ஆடம்பரம் ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் அனைவரும் விரும்பக்கூடிய வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் காணப்படும் முக்கிய அம்சங்களில் வாழ்வதற்கு உகந்த நேர்-கோட்டு கட்டடக்கலை, உயர்ந்த பொறியியல் அம்சங்களுடனான மரத்தினாலான கதவுகள், இரு பக்கம் இணைக்கப்பட்ட உடையாத கண்ணாடி ஜன்னல்கள், சிறந்த மின்சக்தி திறன் கொண்ட மின்விளக்கு தொகுதிகள், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு நவீன தீர்வுகள் ஆகியன அடங்குகின்றன.

Urban Homes Koswatta குடியிருப்பில் வசிப்பவர்கள் ஏராளமான வசதிகளை அனுபவிக்கலாம். இதில் அதிநவீன உடற்பயிற்சி மையம், பெரிய நீச்சல் தடாகம், ஓய்வு எடுப்பதற்கான பசுமையான இடங்கள், விளையாட்டு அறை, செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அறை, ஒன்றுகூடல்களுக்கான பகுதி உள்ளிட்டவை அடங்கும்.

Fairway Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) அசேன் கர்தேலிஸ், இந்த வீடுகள் கையளிப்பு நிகழ்வின் மூலம் குடியிருப்பு கட்டுமான குழுமமெனும் வகையில் தனது 1,000 ஆவது குடியிருப்புத் தொகுதியெனும் மைல்கல்லை எட்டியதன் மூலம், நிலைபேறானதன்மை மற்றும் நீண்ட ஆயுளுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக் கூறினார். UHK இல் உள்ள ஒவ்வொரு அம்சமும், சிறந்த வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பையும், ஒப்பிட முடியாத வாழ்விடங்களை உருவாக்குவதற்கான ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்கால குடியிருப்பாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர், Urban Homes Koswatta தொடர்பான மேலதிக தகவலுக்கு, www.fairwayproperties.lk இணையத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது 0117423423 ஐ தொடர்பு கொள்ளவும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *