தேசிய வணிக விசேடத்துவ விருது 2024: உயர் கௌரவம் வென்ற ராஜா ஜுவலர்ஸ்

பெருமைக்குரிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வழங்கப்படும் மதிப்புமிக்க 2024 தேசிய வணிக விசேடத்துவ விருதை (National Business Excellence 2024) பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம், இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய நகையகமான ராஜா ஜுவலர்ஸ், அதன் விசேடத்துவத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரமானது, நாட்டில் அதிக விருதுகளைப் பெற்ற நகை விற்பனை வர்த்தகநாமம் எனும் ராஜா ஜுவலர்ஸின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இலங்கையின் நகைத் துறையில் விசேடத்துவம், தரம், புத்தாக்கம் ஆகியன தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு இது ஒரு அங்கீகாரமாக விளங்குகிறது.

தலைமைத்துவம், நிறுவன நிர்வாகம், திறன் மேம்பாடு, செயற்றிறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணுகல், நிதிப் பெறுபேறுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகிய விடயங்களை உள்ளடக்கிய கடுமையான அளவீடுகளின் அடிப்படையில், வணிக நிறுவனங்களை மிக ஆழமாக மதிப்பிடும் ஒரு பெருமைமிக்க அங்கீகாரமாக National Business Excellence Award விருது அமைகின்றது .

ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் அத்துல எலியபுர இது பற்றித் தெரிவிக்கையில், “2024ஆம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக விசேடத்துவ விருதை (National Business Excellence Award) பெறுவதில் நாம் மிகவும் பெருமை அடைகிறோம். இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, எமது ஒட்டுமொத்த குழுவினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நாம் தொடர்ச்சியாக பல எல்லைகளைக் கடந்து நகை உலகின் விசேடத்துவத்தை மீள்வரையறை செய்வதனால் இது எமக்கு ஊக்கமளிக்கிறது.” என்றார்.

ராஜா ஜுவலர்ஸ் இன் வெற்றி ஆனது, பல முக்கிய காரணிகளில் தங்கியுள்ளது. ஒப்பிட முடியாத கைவினைத்திறனுக்காக இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த மூலப்பொருட்களைப் பெறுதல், தலைமுறை தலைமுறையாக நகை ஆர்வலர்களின் தேவையை பிரதிபலிக்கும் நேர்த்தியான நகைகளை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்கிறது. அத்துடன், நிலைபேறான நடைமுறைகளை செயற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள ராஜா ஜுவலர்ஸ், இலங்கையின் பொருளாதாரத்திற்கு உயர்ந்த பங்களிப்பை வழங்கி, உள்நாட்டிலுள்ள திறமையாளர்களை வளர்ப்பதுடன், நாட்டின் வளமான கைவினைத்திறனை உலக அரங்கிற்கு கொண்டு செல்கிறது.

இந்த விருதானது, ராஜா ஜுவலர்ஸ் ஏற்கனவே பெற்ற தேசிய வணிக விசேடத்துவ விருதுகள் மற்றும் ஜனாதிபதி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களின் அற்புதமான வரிசையில் இணைகிறது. இது இவ்வர்த்தகநாமத்தின் அசைக்க முடியாத சிறப்பையும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

முன்னோக்கிய பாதையில், ராஜா ஜுவலர்ஸ் இலங்கையின் கலைத்திறனைக் கொண்டாடும் வகையில் புத்தாக்கம் மற்றும் தனித்துவமான நகைகளை உருவாக்குவதில் உறுதியாக இருந்து வருகின்றது.

ராஜா ஜுவலர்ஸின் விருது பெற்ற கலைப் படைப்புகளின் மாயாஜாலத்தை அனுபவிக்க உங்களையும் நாம் அழைக்கிறோம். ஆர்வத்துடனும் நிபுணத்துவத்துடனும் வடிவமைக்கப்பட்ட காலத்தால் அழியாத நகைகளை பார்வையிட, எமது காட்சியறைகளைப் பார்வையிடுங்கள் அல்லது https://www.rajajewellers.com/jewellery/ இணையத்தளத்திற்கு நுழையுங்கள்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *