பிரபல McLarens குழுமத்திற்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான McLarens Lubricants, ExxonMobil Asia Pacific Pte Ltd. நிறுவனத்தால் நடாத்தப்பட்ட விருது விழாவில், ‘Total Excellence Award category’ பிரிவில் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் கடந்த மே 08ஆம் திகதி நடைபெற்ற கௌரவத்திற்குரிய South East Asia, Alliance and Oceania (SAO) விநியோகஸ்தர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் வணிகத் திட்டமிடல், விற்பனை மற்றும் விற்பனைக்கான வணிக செயல்திறன், வணிக வளர்ச்சியில் முதலீடு, விற்பனை விசேடத்துவம், வர்த்தகநாம வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களில் McLarens Lubricants இன் ஒப்பற்ற செயல்திறனுக்கான கௌரவமாக இந்த விருது அமைகின்றது. இந்த விருதுக்கான மதிப்பீட்டுச் செயன்முறையானது, SAO சந்தையில் காணப்படுகின்ற அனைத்து ExxonMobil விநியோகஸ்தர்களையும் உள்ளடக்கியதாகும். அந்த வகையில், இந்த தனித்துவமான வணிகத்தில் சிறந்து விளங்குபவர்களை இது முன்னிலைப்படுத்துகிறது.
ExxonMobil ஆனது, ஒயில் மற்றும் எரிவாயு தொழில்துறையில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள மற்றும் தொடர்ச்சியாக Fortune 500 பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள ஒரு நிறுவனமாகும். ExxonMobil உற்பத்திகளை அந்தந்த சந்தைகளில் வழங்குவதற்குப் பொறுப்பான, உலகெங்கிலும் உள்ள முக்கியம் வாயந்த விநியோகஸ்தர்களின் வலையமைப்பை அது கொண்டுள்ளது. McLarens Lubricants Ltd ஆனது, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நீண்டகால அங்கீகாரத்தைப் பெற்ற Mobil Lubricant விநியோகஸ்தராகும். Mobil Lubricants ஆனது, இலங்கையின் லுப்ரிகண்ட் ஒயில் சந்தையில் 25 வருடங்களுக்கும் மேலாக, மோட்டார் வாகனத்தில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் பாரிய அளவிலான தொழில்துறையாளர்களால் அவர்களது மசகு எண்ணெய் தேவைகளுக்கான வர்த்தகநாமமாக விளங்கி வருகிறது. McLarens Lubricants ஆனது, இலங்கை மசகு எண்ணெய்ச் சந்தையில் முன்னணியில் உள்ள நிறைவான லுப்ரிகண்ட் ஒயில் இறக்குமதியாளராக திகழ்கிறது.