உலகின் முன்னணி நீர்ப் பம்பி உற்பத்தியாளரான Grundfos இன் உத்தியோகபூர்வ சேவை கூட்டாளராக இணையும் Hayleys Aventura

உலகப் புகழ்பெற்ற டென்மார்க் நீர்ப் பம்பி உற்பத்தியாளரான Grundfos இன், இலங்கையின் உத்தியோகபூர்வ சேவை பங்காளியாக (SP) Hayleys Aventura இணைந்துள்ளது.

இந்த சேவை பங்காளித்துவமானது, Hayleys Aventura நிறுவனம் தனித்துவமான அதன் மென்பொருள் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு, விரிவான உதிரிப் பாகங்களின் கையிருப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப தகவல்களை அணுகுவதற்கான வசதியின் மூலம் Grundfos தயாரிப்புகளின் அனைத்து உற்பத்திகளுக்குமான, விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதற்கான தனித்துவமான வசதியை ஏற்படுத்துகிறது.

வாடிக்கையாளர் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கும், இலங்கையில் Grundfos தயாரிப்புகளுக்கான சேவைகளை வழங்குவதில் நம்பகமான நிபுணர்கள் எனும் தமது நிலையை உறுதிப்படுத்துவதற்கும் Hayleys Aventura நிறுவனத்தின் பணியாளர்கள், Grundfos நிறுவனத்தால் வழங்கப்படும் திறன்களை மேம்படுத்தும் பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் மூலம், உரிய அறிவு மற்றும் திறன்களால் வலுவூட்டப்பட்டுள்ளனர்.

2014 இல் ஆரம்பமான இந்தக் கூட்டாண்மையானது, தற்போது விற்பனைக்குப் பின்னரான சேவைகள் வலுவான வாடிக்கையாளர் மதிப்பை ஏற்படுத்துவதற்கான Hayleys Aventura நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றுகிறது.

இது பற்றி, Hayleys Aventura நிறுவனத்தின் Power Engineering தலைவர் திலிண பண்டார தெரிவிக்கையில், “Grundfos உடனான எமது உத்தியோகபூர்வ பங்காளித்துவமானது, இலங்கையில் அதன் உத்தியோகபூர்வ சேவைப் பங்காளி எனும் அந்தஸ்தை அடைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஒப்பற்ற தீர்வுகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இதன் மூலம் வலுப்படுத்தியுள்ளோம். இந்த ஒத்துழைப்பானது, எமது சேவை மற்றும் வாடிக்கையாளர் ஆதரவுக்கான திறன்களை மேம்படுத்துவதோடு, பொறியியல் விசேடத்துவத்தில் புதிய தரத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

இந்த ஒத்துழைப்பு குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய, CBS APAC நிறுவனத்தின் சிரேஷ்ட பிராந்திய விற்பனை முகாமையாளர் திருமதி மீனா யோத்ரயூப், “எப்போதும் உலகிற்கு மிகவும் உகந்த நீர் சார்ந்த தீர்வுகளை வழங்குதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இந்த கூட்டாண்மையானது, எல்லைகளைத் தாண்டிய எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்த Hayleys Aventura நிறுவனத்தின் திறன்களுக்கு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் நாம் சிறப்பாகச் செயற்படுவதைத் தொடர முடியும். அதன் அடிப்படையில், விற்பனைக்குப் பின்னரான சேவைகளை கையாள்வதன் மூலம், எமது நீர்ப் பம்பிகளை, மிக உயர்ந்த உலகளாவிய தரத்திற்கு இணையாக மிகவும் நம்பகமானதாகவும், அனைத்து வகையிலும் ஏற்றதான தன்மையுடனும் மாற்றுவதற்கான மொத்த தீர்வுகளை Hayleys Aventura வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.” என்றார்.

Hayleys Aventura, தனது பொறியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, நாட்டின் மிகப் பாரிய அரச வங்கிகளில் ஒன்றின் நிறுவல்கள் உட்பட, Grundfos தயாரிப்புகள் மூலம் நாடு முழுவதும் பல்வேறு பாரிய அளவிலான திட்டங்களை ஏற்கனவே செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்குப் பிந்தைய Grundfos பம்பி மாற்றீட்டுத் திட்டம் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நாளாந்தம் 200 (Kwh) மின் அலகுகளை சேமிக்க முடியும். இதேவேளை, மணல் வடிகட்டியை மேம்படுத்துவதற்காக பம்பிகளை நிறுவியதன் மூலம் வருடாந்தம் 215,000 (Kwh) இற்கும் அதிகமான மின் சேமிப்பு இடம்பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஆகவும்  திறனான பம்பி தொழில்நுட்பங்கள் மூலமும் மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், வருடாந்தம் 1.8 பில்லியன் கனமீற்றர் நீரை மீள் பயன்படுத்த உதவுகின்ற முயற்சிகள் மூலம் Grundfos இன் தயாரிப்புகளில், நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பு கோடிட்டுக் காட்டப்படுகின்றன. இதன் மூலம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு LEED U.S. பசுமை கட்டட சான்றிதழை அடைவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

வருடாந்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான பம்பிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகளாவிய முன்னணி நிறுவனமான Grundfos, உலகளவிய ரீதியில் சிங்கப்பூரில் ஒன்றிணைக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட ஹங்கேரி, சீனா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் செயற்பட்டு வருகிறது. மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி மூலங்களினால் செயற்படுத்துவதன் மூலம் காபன் வெளியீட்டைக் குறைத்து அதன் மூலம் மின் சக்தி நுகர்வை குறைத்தல், நீர் செயற்றிறனை மேம்படுத்துதல், சூழலின் நிலைபேறான தன்மைக்கு பங்களிக்கும் தீர்வுகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையின் பல்வேறு தொழில்துறையில் முன்னணியில் உள்ள கூட்டு நிறுவனமான Hayleys Group நிறுவனத்தின் தொழில்துறை உள்ளீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் Hayleys Aventura ஆனது, வலு பொறியியல் தீர்வுகள், தொழில்துறை இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் பகுப்பாய்வு தீர்வுகள், தொழில்துறை மூலப்பொருட்கள், மின் சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத் தக்க வலுசக்தி ஆகிய ஐந்து பல்வகைத் துறை வணிகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

புத்தாக்கம், விஞ்ஞான முன்னேற்றங்கள், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் அர்ப்பணிப்புடன் கூடிய முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குனரான Hayleys Aventura, பல்வேறு பிரிவுகளில் இலங்கைக்கு உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்தும் முன்னணியில் திகழ்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *