AyurEx Colombo 2024 இல் சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணை வழங்கிய யூனிலீவரின் லீவர் ஆயுஷ், பாரம்பரிய மருத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது

நாட்டின் முன்னணியில் உள்ள ஆயுர்வேத வர்த்தக நாமங்களில் ஒன்றான Lever Ayush (லீவர் ஆயுஷ்), AyurEx Colombo 2024 இல் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டது. 2023ஆம் ஆண்டில் உருவான வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் வகையில் மீண்டும் அது இவ்வாறு அனுசரணை வழங்கியுள்ளது. இந்நிகழ்வு பாரம்பரிய மருத்துவ முறைகளை கொண்டாடுவதற்கும் முன்னோக்கிக் கொண்டு செல்வவதற்கும் ஒரு முதன்மையான தளமாக அமைந்தது.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் அழகு மற்றும் சுகவாழ்வு, தனிநபர் பராமரிப்புக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமர சில்வா இது பற்றி தெரிவிக்கையில், “லீவர் ஆயுஷ் ஆகிய நாம், ஆயுர்வேதத்தின் ஞானத்தை நிலைநாட்டுவதற்கும் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். AyurEx Colombo 2024 நிகழ்வுடன் இணைந்த சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கான எமது கூட்டாண்மையானது இந்த அர்ப்பணிப்பை மேலும் பிரதிபலிக்கிறது. இந்த மதிப்புமிக்க நிகழ்வானது, ஆயுர்வேதத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதன் மூலம், ஒத்துழைப்புப்பையும் அறிவுப் பரிமாற்றத்தையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தும் தளமான AyurEx Colombo 2024 உடன் ஒரு கூட்டாளராக இருப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம். இந்த ஒத்துழைப்பின் மூலம், ஆயுர்வேதத்தின் பலன்கள் அடுத்த தலைமுறையினர் அணுகக்கூடியதாகவும் அவர்களுக்கு பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய நாம் முயற்சி செய்கிறோம்.” என்றார்.

இந்த வெற்றிகரமான ஒத்துழைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த, சுகாதார அமைச்சின் ஆயுர்வேத திணைக்களத்தின் ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன, “Lever Ayush ஆனது, AyurEx Colombo 2024 சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களது தொடர்ச்சியான ஆதரவானது, பாரம்பரிய மருத்துவத் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு கருவியாக உள்ளது. ‘மனிதர்கள், விலங்குகள், சூழல் தொகுதிகளின் நிலைபேறான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரே ஆரோக்கியம்’ என்பதில் இவ்வருடம் கவனம் செலுத்துகிறது. இலங்கை மற்றும் உலகளாவிய சமூகம் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும், சுகாதாரப் பாதுகாப்பிற்கான முழுமையான அணுகுமுறைக்கான எமது தூரநோக்குடன் இது முழுமையாக ஒத்துப்போகிறது.” என்றார்.

இவ்வருட அனுசரணையானது, இலங்கையின் வளமான ஆயுர்வேத மரபுக்கு லீவர் ஆயுஷின் ஆழமான அர்ப்பணிப்பை எடுத்துக் கூறுகிறது. சுகாதார அமைச்சின் ஆயுர்வேதத் திணைக்களத்துடன் இணைந்து களனிப் பல்கலைக்கழகத்தின் பட்ட கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், 10 இற்கும் மேற்பட்ட பிரபல பேச்சாளர்களையும் சர்வதேச நிபுணர்கள் 15 பேரின் விரிவுரைகளையும் கொண்டிருந்தது.

2023 கூட்டாண்மையின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, AyurEx Colombo 2024 இல் லீவர் ஆயுஷின் ஈடுபாடு அமைந்திருந்தது. கடந்த வருடம், அது சர்வதேச மாநாட்டிற்கான பிரதம அனுசரணையாளராகவும், கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சிக்கான முக்கிய பங்காளராகவும் செயற்பட்டது. இந்த வருட மாநாடானது, இத்துறையில் ஆராய்ச்சியிலும் அபிவிருத்தியிலும் வெற்றி அடைவதற்கான ஒரு மூலோபாய உறுதிப்பாட்டை பிரதிபலித்தது.

2018 இல் ஆரம்பிக்கப்பட்ட லீவர் ஆயுஷ், 5,000 ஆண்டுகால ஆயுர்வேத அறிவினால் ஈர்க்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும், பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த வர்த்தக நாமம், இன்றைய நுகர்வோருக்கு ஏற்ற வகையில், நவீன சுகாதாரம் மற்றும் அழகுக்கலை தீர்வுகளை உருவாக்க பாரம்பரிய அறிவை பயன்படுத்துகிறது. ஆயுர்வேத வைத்தியரின் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் லீவர் ஆயுஷ் தயாரிப்புகள், இலங்கையின் பாரம்பரியத்தை பாதுகாத்து பேணுவது தொடர்பான யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *