அறிமுகம் Printcare Agile இன் “Book Wonders”: புத்தாக்கமான தீர்வுடன் புத்தகங்களுக்கு உறையிடும் பெற்றோரின் கவலையை எளிதாக்குகிறது

– Printcare Digital Solutions (Pvt) Limited ஆனது, வேலைப் பளு மிக்க பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்றான, தங்களது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களுக்கு உறை இடும் ஒரு புதிய தீர்வை, Printcare Agile எனும் வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. “Book Wonders” எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தாக்கமான தயாரிப்பானது, வழக்கமாக புத்தகங்களுக்கு உறை இடும் செயன்முறையை விரைவாகவும், எளிதாகவும், திறமையாகவும் மாற்றுவதை உறுதியளிக்கிறது.

பாடசாலை புத்தகங்களுக்கு உறையிடும் செயன்முறையானது, நீண்ட காலமாக பெற்றோருக்கு நேரத்தை எடுத்துக் கொள்கின்றதும் சிக்கலானதுமான பணியாகும். உறை இடும் காகிதங்களை கொள்வனது செய்வது முதல் அளவாக வெட்டி, மாணவர்களின் பெயர் விபரங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டுதல், பாதுகாப்பிற்காக பொலித்தீன் உறை போடுதல் வரை, முழுச் செயன்முறையும் சோர்வானதாகவும் திறனற்றதாகவும் இருக்கும். அது மாத்திரமன்றி, சில பாடசாலைகள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வண்ணத்திலும் அமைய வேண்டுமென்பது கட்டாயம் என்பதோடு, பெற்றோர்கள் அவற்றை தேடுவதிலும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அத்துடன் காகிதங்களையும் வளங்களையும் தேவையில்லாமல் வீணாக்கவும் செய்கிறார்கள்.

Printcare Agile ஆனது, இந்த கவலைகளை உணர்ந்து, Book Wonders மூலம் ஒரு விரிவான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தனித்துவமான தயாரிப்பானது, பாடசாலை இலச்சினை, பாடங்களின் நிறங்கள், மாணவர் பெயர், தரம், மாணவரின் புகைப்படம் உள்ளிட்ட மாணவர்களின் அத்தியாவசியமான விபரங்களை முன்கூட்டியே அச்சிடுகிறது. இது புத்தகத்தை உறையிடும் செயன்முறையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், புத்தக அட்டையில் இடப்படும் விசேட பாதுகாப்பு கூறு காரணமாக, புத்தகங்களுக்கு மேலதிக பாதுகாப்பையும் வழங்குகிறது.

Book Wonders அறிமுக விழாவிற்கான தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி பேசிய Printcare Digital Solutions (Pvt) Limited இன் பொது முகாமையாளர் நுவன் வித்யாபதிகே, “வேலைப் பளு கொண்ட பெற்றோரின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு தீர்வாக Book Wonders ஐ அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 3 அம்சங்களை ஒரே அமைப்பில் கொண்ட செயற்பாடுடனான எமது தயாரிப்பானது, பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் புத்தகங்களை, வழக்கமாக எடுக்கும் நேரத்திலும் சிறு பகுதியிலேயே உறையிட உதவுகின்றது. இந்த புத்தகாக்க கண்டுபிடிப்பானது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

Book Wonders இன் உத்தியோகபூர்வ அறிமுகத்தைக் குறிக்கும் வகையில், அண்மையில் களனி ஸ்ரீ தர்மலோக வித்தியாலயத்தில் ஒரு நிகழ்வை Printcare Agile ஏற்பாடு செய்திருந்தது. இதில் தரம் 5 மாணவர்களுக்கு அவர்களது முழு புத்தகப் பட்டியலையும் உறையிட்டு பரிசாக வழங்கியது. கடந்த மார்ச் 12 ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வானது, புதிய தீர்விற்கான நடைமுறை மற்றும் செயற்றிறனை அதிகரித்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து சாதகமான கருத்துகளை பெற்றுள்ளது.

Printcare Agile ஆனது, Book Wonders மூலம் அன்றாட பணிகளை எளிதாக்குகின்ற மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை தொடர்கிறது. Printcare Agile வழங்கும் Book Wonders மற்றும் அதன் ஏனைய தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவலுக்கு: www.slick.lk இற்குள் நுழையுங்கள்.

Printcare: முன்னணி அச்சிடல் மற்றும் பொதியிடல் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் பற்றி
1979 இல் நிறுவப்பட்ட Printcare, தெற்காசியாவில் முன்னணி அச்சிடல், பொதியிடல் மற்றும் முன் ஊடக தீர்வுகள் வழங்குநராக உருவெடுத்துள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக புகழ் பெற்ற Printcare, ஐந்து கண்டங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

தேயிலை, தொலைத்தொடர்பாடல், ஆடை, நுகர்வோர் பொருட்கள், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகம், கல்வி, லொத்தர் போன்ற சேவைகளை வழங்கும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள Printcare, உயர் தர அச்சிடல் மற்றும் பொதியிடல் தீர்வுகளை வழங்குவதில் நம்பகமான பங்காளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் தேயிலை கைத்தொழில்துறையில் அதன் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட Printcare, பானங்கள், மருந்துகள், அச்சிடல், தொலைத்தொடர்பாடல், நிதிச் சேவைகள், புகையிலை மற்றும் லொத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவை வழங்குவதற்காக அதன் தயாரிப்புகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, கிழக்கு ஆபிரிக்காவில் செயற்படும் Printcare, அதன் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வடிவமைப்பு முதல் விநியோகம் வரை பல்வேறு தடையற்ற தீர்வுகளை வழங்குவதற்கு மூலோபாய ரீதியாக தன்னை அர்ப்பணித்துள்ளது. புத்தாக்கம், நிலைபேறான தன்மை, வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்புடன், உலகெங்கிலும் உள்ள தனது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வுகளுடன் இத்தொழில்துறையை Printcare தொடர்ச்சியாக வழிநடத்துகிறது.

Image caption:

பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான புத்தக உறையிடலை எளிமையாக்கும் ஒரு அற்புதமான தீர்வான, Printcare Agile இன் “Book Wonders” வெளியீட்டு நிகழ்வின் போது, Printcare Digital Solutions இன் பொது முகாமையாளர் நுவன் வித்யாபதிகே, பார்வையாளர்கள் முன் உரையாற்றுவதோடு, Printcare PLC நிறைவேற்றுப் பணிப்பாளர் கிருஷ்ண ரவீந்திரனால் பரிசு வழங்கப்படுகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *