பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றுப்படுத்தலை கொண்டாடும் Neptune Recyclers

பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழை பெற்றமை தொடர்பான அதன் உத்தியோகபூர்வ சான்றுப்படுத்தலை Neptune Recyclers நிறுவனம் பெருமையுடன் அறிவிபபதில் மகிழ்ச்சி அடைகின்றது. இது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் மதிப்புமிக்க பின்னூட்டலின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த சான்றிதழானது எமது நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லை அடையாளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனிநபர்களை பணியாளர்களாக மட்டும் கருதுவதையும் தாண்டி, மதிப்புமிக்க பங்களிப்பாளர்களாகவும் மரியாதை மற்றும் வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும் ஒரு பணியிடத்தை அவர்களுக்கு நிறுவுவதற்கு நாம் கொண்டுள்ள எமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.

இந்த சான்றளிப்பு செயன்முறையானது, Neptune Recyclers ஒரு பணியிடம் என்பதையும் கடந்தது என்பதற்கு சான்றாக அமைகிறது. இது ஒரு செழிப்புமிக்க சூழல், இங்கு தொழில் வல்லுநர்கள் வெறுமனே வேலை செய்வதோடு மட்டுமல்லாமல், மேம்படுத்தப்படுகின்றனர். இங்கு பணியில் திருப்தி மற்றும் பணி நோக்கத்தின் கலாசாரம் வளர்க்கப்படுகின்றது. நம்பகத்தன்மை, மரியாதை, நேர்மை, தோழமை, பெருமை ஆகிய ஐந்து முக்கிய பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்ட நுணுக்கமான மதிப்பீட்டின் அடிப்படையில், Neptune Recyclers தமது பணியிட விசேடத்துவத்தின் முழுமையான அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது.

பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழைப் பெறுவது, Neptune Recyclers நிறுவனம் வளர்த்துள்ள ஒப்பிட முடியாத தலைமைத்துவத்தையும் கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த சாதனையானது, ஒரு கூட்டு வெற்றியாகும் என்பதோடு, அர்ப்பணிப்பு, ஆர்வம், சிறந்து விளங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் வகையிலான பணியிடத்தை உருவாக்குவதில், குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கை இது கோடிட்டுக் காட்டுகிறது.

வெற்றி என்பது நிறுவனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, இது Neptune குழுவின் ஒவ்வொரு உறுப்பினருடனும் பகிரப்படும் ஒரு விடயமாகும். Neptune Recyclers ஒரு உண்மையான சிறந்த பணியிடம் என்பதை கூட்டாக இணைந்து வடிவமைத்துள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காக நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது.

Neptune Recycler ஒரு முக்கியமான மைல்கல்லை கொண்டாடும் இவ்வேளையில், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் பயணத்தை நிறுவனம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. ஒரு உறுதியான அர்ப்பணிப்புடன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, தனிநபர் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் செழித்து வளரும் பணியிட கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான உறுதிமொழியை Neptune Recyclers நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. தனது குழுவின் கூட்டு முயற்சிகளால் வலுவடைந்து மேலும் பல பாரிய வெற்றிகளை அடைய நிறுவனம் தயாராக உள்ளது.

தொழிற்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான முன்னோடி எனும் அனுபவத்துடன், இலங்கையின் மீள்சுழற்சி மற்றும் கழிவு முகாமைத்துவத் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையின் கலங்கரை விளக்கமாக Neptune Recyclers திகழ்கின்றது. Ex-pack Corrugated Cartons PLC இன் துணை நிறுவனமும், பெருமைக்குரிய Aberdeen குழுமத்தின் மதிப்பு மிக்க உறுப்பினருமான Neptune Recyclers, சிறந்து விளங்குவதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் கொண்டுள்ள அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகும். துணி மற்றும் காகித மீள்சுழற்சியில் நிபுணத்துவம் பெற்ற நாம், நிலைபேறான மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவ அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் கழிவுகளை பெறுமதியான பொருட்களாக மாற்றுவதன் மூலம் வட்டப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறோம்.

Neptune Recyclers வெற்றியை நோக்கி தொடர்ந்தும் பயணிக்கும் நிலையில், நிறுவனம் கொண்டுள்ள முக்கிய மதிப்புகளை பேணுவதில் உறுதியாக உள்ளதோடு, எதிர்கால வாய்ப்புகளுக்காகவும் காத்திருக்கிறது.

மேலதிக தகவலுக்கு: www.neptunerecyclers.com

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *