புதிய கூட்டணி மூலம் இலங்கையின் தொழில்நுட்ப சூழலைப் புரட்சிகரமாக்கும் செயலியை வெளியிடும் Hatch மற்றும் Orion City

பெருமைக்குரிய தொழில் தொடக்க விரைவுபடுத்துனரும்/ அடைகாப்பாளருமான Hatch மற்றும் முன்னணி IT பூங்காவான Orion City ஆகியன இணைந்து, இலங்கையின் தொழில்நுட்ப சூழல்தொகுதியிலும் வணிக நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாக்கமான டிஜிட்டல் தளத்தை வெளியிட்டுள்ளன. இந்த புத்தாக்கமான செயலியானது, கொழும்பு 01 Hatch Works, கொழும்பு 09 Orion City யில் உள்ள Orion Nest, கொழும்பு 03 புதிதாக வரவுள்ள Orion City Colombo ஆகிய மூன்று முக்கிய இடங்களில் இருந்து, அத்தியாவசிய சேவைகள் மற்றும் வசதிகளுக்கான அணுகலை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டிணைவின் மூலம், இலங்கையின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழல் தொகுதியில், தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் போன்றவற்றிற்கு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சிறந்த வாய்ப்புகளையும், சிறந்த அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை, கொழும்பில் 1910 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப் பகுதிக்குரிய, புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் அமைந்துள்ள Hatch ஆனது, தொழில்முனைவோருக்கான மையமாக செயற்படுகிறது. அதன் வலையமைப்பில் 1,000 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 700 தொழில் தொடக்கங்கள் உள்ளன. கொழும்பு 09 இல் அமைந்துள்ள Orion City ஆனது, பல்வேறு சந்திப்புகள், ஓய்வு மற்றும் உணவகம் போன்ற வசதிகளை வழங்குகின்ற, 40 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற உயர் மட்ட பணியிடங்களைக் கொண்டுள்ள மையம் என புகழ் பெற்று விளங்குகின்றது. கொழும்பு 03 இல் அமையவுள்ள Orion City Colombo இன் விரிவாக்கமானது, தொழில்முனைவோருக்கான வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்தும் என்பதோடு, பரபரப்பு மிக்க வணிக மாவட்டமான கொழும்பில் புத்தாக்கங்களின் மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்தும்.

Hatch மற்றும் Orion Nest ஆகியன, தமது கட்டடங்களில் உள்ளநிறுவனங்களுக்கு ஏற்ற வகையில், தனித்துவமான தள்ளுபடிகளின் மூலம், கொழும்பிலுள்ள அதன் முக்கிய இடங்களில் சந்திப்பிற்கான இடங்களை சிரமமின்றி பெறுவதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

Orion City நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஜீவன் ஞானம் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “Hatch உடனான இந்த கூட்டாண்மையை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அதிநவீன செயலியை அறிமுகப்படுத்தியதன் மூலம், உள்ளூர் மற்றும் சர்வதேச வணிக தொடக்கங்களுக்கு உயர் மட்ட பணியிடங்களை வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது புத்தாக்கங்ளை வளர்ப்பது தொடர்பான எமது உறுதிப்பாட்டை காண்பிக்கிறது.” என்றார்.

இரு நிறுவனங்களுக்கிடையிலான இந்த ஒத்துழைப்பானது, இலங்கையின் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதோடு, இது தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *