PEPSI® ஒரு புதிய விளம்பரப் பிரச்சாரம் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஒரு புத்தம் புதிய தோற்றத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது

Pepsi®  அதன்புதிய கோடைக்காலப்  பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது; இலங்கையில் ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீரமான புதிய தோற்றம்’ என்பதை வலியுறுத்தி ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விளம்பரத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளது

பிரபலமான பானங்கள் பிராண்டான Pepsi® இலங்கையில் கோடைக் காலத்தை வரவேற்க்கத் தயாராகி வருகிறது, அதன் சமீபத்திய விளம்பரப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார் . ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீருமான புதிய தோற்றம்’ என்ற பிரச்சார நிலைப்பாட்டுடன் இந்த TVC ஆனது, பெப்சியின் புகழ்பெற்ற Cindy Crawford விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, பெப்சி பேக்கேஜிங்கின் கம்பீருமான மேக்ஓவரைக் காண்பிக்கும் ஒரு நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இந்தத் திரைப்படம் ஒரு ஒதுக்குப்புற விண்டேஜ் எரிவாயு நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் தங்கள் டேங்குகளை நிரப்புவதைக் காட்டி தொடங்குகிறது. ஒரு பைக்கில் ஒரு பெண் வேகமாக பெட்ரோல் நிலையத்திற்கு வருகிறார். அவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றியபின் அது ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பது வெளிப்படுத்துகிறது, ஸ்போர்ட்ஸ் கட்-ஆஃப் ஜீன் ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை டேங்க் டாப் அணிந்திருக்கிறார். Pepsi® கேனில் இருந்து ஜாக்குலின் ஒரு சிப் அடிப்பதை படம் காட்டுகிறது. சிறுவர்கள் திகைத்து நிற்கிறார்கள், மேலும் அவர்கள் ஜாக்குலினின் தோற்றத்தால் கவரப்படுகிறார்களா அல்லது புதுப்பிக்கப்பட்ட பெப்சி மேக்ஓவரால் கவரப்படுகிறார்களா என்று இப்படம் உங்களை யூகிக்க வைக்கும் – இறுதியில் அவர்கள் Pepsi® கண்டு வியந்ததாக படம் முடியும்.

பெப்சிகோவின் இலங்கைப் பிராந்தியத்தின் இணை இயக்குநர் அனுஜ் கோயல், இந்தஅறிமுகம் குறித்துப் பேசுகையில், இலங்கையில் பெப்சியின் சமீபத்திய கோடைகால பிரச்சாரத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதில் எங்கள் ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீருமான புதிய தோற்றம்’ பொசிஷனிங் இடம்பெற்றுள்ளது. பிரமிக்க வைக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸுடனான எங்கள் ஒத்துழைப்பு இந்தப் பிரச்சாரத்தின் சாராம்சத்தை மிகச்சரியாக உள்ளடக்கியது, ஏனெனில் அவர் பிரபலமான சிண்டி க்ராஃபோர்ட் விளம்பரத்தை மீண்டும் உருவாக்குவதற்கான எங்கள் பார்வைக்கு தடையின்றி பொருந்துகிறார். அவரது வசீகரம் மற்றும் ஆற்றலுடன், இந்த புதிய TVC, பிராண்டின் புதிய தோற்றத்தைக் கொண்டு, அலைகளை உருவாக்கி, இலங்கையில் உள்ள எங்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

இந்த விளம்பரப்படம் குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறுகையில், “நான் எப்போதும் போற்றும் பிராண்டான பெப்சியுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் காலத்தால் அழியாத சிண்டி க்ராஃபோர்ட் விளம்பரத்தை மீண்டும் உருவாக்குவது ஒரு சிறப்பான பயணமாகும். இந்த முக்கியமான  தருணத்தை மீண்டும் கொண்டு வருவதிலும், புத்துணர்ச்சியூட்டும் பெப்சியுடன் கோடையின் உணர்வைக் கொண்டாடும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரச்சாரம் வேடிக்கை, ஆற்றல் மற்றும் இன்பம் பற்றியது, மேலும் எனது இலங்கை ரசிகர்கள் இதைக்காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன். இது உற்சாகத்தை தருகிறது. பெப்சியின் புதுப்பிக்கப்பட்ட கம்பீருமான புதிய தோற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், அதன் முதன்மையான சாரத்தை ஒரு புதிய மற்றும் அற்புதமான வழியில் இது படம் பிடித்துள்ளது.

360 டிகிரி பரப்புரை மூலம் டிவி, டிஜிட்டல், வெளிப்புறம் மற்றும் சமூக ஊடகங்களில் புதிய Pepsi® TVC பிரபலமாக்கப்படும். இலங்கையில் உள்ள அனைத்து நவீன மற்றும் பாரம்பரிய சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் முன்னணி மின்-வர்த்தகத் தளங்களில் சிங்கிள் சர்வ் மற்றும் மல்டி சர்வ் பேக்குகளில் இது கிடைக்கிறது.

(Link to view the TVC- https://youtu.be/2r_kaQtvwWo

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *