தமது முக்கிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்குள் காலடி வைக்கும் Socomec India

Low Voltage (LV) மின்சார முகாமைத்துவத்தில் உலகளாவிய முன்னணி நிபுணரான Socomec India நிறுவனம், அதன் முக்கிய விரிவாக்கத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் பிரான்சைச் சேர்ந்த வலுசக்தி நிறுவனமான Socomec India, இலங்கை சந்தைக்குள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுழைகின்றது. ‘Greater India’ என்று அழைக்கப்படும் இந்த மூலோபாய நடவடிக்கையானது, ஒருங்கிணைந்த ஒரு தனியான வணிக நிறுவனமாக அதனை ஒருங்கிணைக்கும் வகையில், Socomec India விற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை குறிப்பதோடு, அதன் வணிக மேம்பாட்டுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்த விரிவாக்கம் தொடர்பில், Socomec India முகாமைத்துவ பணிப்பாளர் மீனு சிங்கால், கருத்து வெளியிடுகையில், ஆசிய சந்தையில் புத்தாக்கமான வலுசக்தி தீர்வுகளை வழங்கி வருவதன் மூலம் அதிகரித்து வரும் வலு சக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் அதிக அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றோம். ஐரோப்பாவில் பொறியியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இந்தியாவில் பெருமையுடன் தயாரிக்கப்படுகின்ற எமது தயாரிப்புகள், இலங்கை மற்றும் பங்களாதேஷ் சந்தைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளன. இந்த விரிவாக்கமானது, ‘Make in India’ திட்டத்திற்கான எமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதோடு, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் Socomec நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாக இந்தியா செயற்படுகிறது. எமது தயாரிப்புகளின் தரநிலைகள், உலகளாவிய தரத்திற்கு ஏற்ப பேணப்படுவதன் காரணமாக இந்தப் பயணம் எளிதாக்கப்படுகின்றது. நீண்ட காலம் நீடிக்கக் கூடிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், நிலைபேறான மற்றும் திறனான வலு சக்தி தீர்வுகள் மூலம் வணிக நிறுவனங்களை மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் இத்தொழில்துறையில் ஒரு நம்பகமான முன்னணி நிறுவனம் எனும் Socomec இன் பெயரை மேலும் வலுப்படுத்துகிறோம்.” என்றார்.

தமது உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்திய சந்தையில் Socomec Group அண்மையில் மேற்கொண்ட 5 மில்லியன் யூரோ முதலீடானது, உள்ளூர் கேள்வியை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கான ஏற்றுமதிகளை பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தடையில்லா மின்சார விநியோகம், Power Switching, கண்காணிப்புத் தீர்வுகள் உள்ளிட்ட புத்தாக்கமான மின்சக்தி தீர்வுகள் மூலம் Socomec India நாட்டை வலுப்படுத்துகிறது. தரவு மையங்கள், உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தொழில்துறைகள், சுகாதாரம், உட்கட்டமைப்பு, வணிகக் கட்டடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி ஆகியவற்றிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தயாரிப்புகள் யாவும், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது தனது இருப்பை உள்ளூரில் ஏற்படுத்துவதன் மூலம், இந்த தயாரிப்புகள் யாவும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் சந்தைகளில் தற்போது கிடைக்கவுள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம், எதிர்வரும் 3 வருடங்களுக்குள் இப்பிராந்தியத்தில் தனது வருமானத்தை இரட்டிப்பாக்க Socomec India இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த முக்கிய வளர்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், இலங்கை மற்றும் பங்களாதேஷின் வளர்ந்து வரும் சந்தைகளில், நிறுவனத்தின் திட்டங்களை வழிநடத்தும் பணியை முன்னெடுக்கின்ற பொது முகாமையாளராக, சுஹார்ட் அமித் நியமிக்கப்பட்டுள்ளதை Socomec பெருமையுடன் அறிவிக்கிறது. பல்வகைத் துறை சந்தைப் பிரிவுகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான பெருமை மிக்க தொழில் அனுபவத்தைக் கொண்டுள்ள சுஹார்ட் அமித், இந்த மாற்றமுறும் சந்தைகளில் Socomec நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான முக்கிய செயற்பாட்டாளராக செயற்படுவார். இந்த அற்புதமான விரிவாக்கப் பயணத்தை Socomec India ஆரம்பிக்கும் இவ்வேளையில், விசேடத்துவமான மற்றும் புத்தாக்கமான வலுசக்தி முகாமைத்துவத்தை வழங்குவதற்கு நிறுவனம் ஏற்கனவே அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது. நிலைபேறான தீர்வுகள் மற்றும் சிறந்த தரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியன, இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு நன்மையளிப்பதோடு மாத்திரமல்லாமல், இப்பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும். இந்த நடவடிக்கையானது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) முயற்சிக்கு பங்களிப்புச் செய்கின்றது. ‘Greater India’ திட்டத்தின் தூர நோக்கானது, எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சார்க் நாடுகளுக்குள் ஒத்துழைப்புக்கான ஊக்கியாக Socomec நிறுவனத்தை நிலைநிறுத்துகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *