2023 நிதியாண்டின் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட Adani Power

அதிக மின்சார கேள்வி மற்றும் பாரிய நிறுவல் திறன் காரணமாக, 2023ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 11.8 BU (பில்லியன் அலகு) இல் இருந்து 82% அதிகரிப்பை காட்டியவாறு, 2024ஆம் நிதியாண்டில் 21.5 BU அலகு ஒருங்கிணைந்த மின்சார விற்பனை அதிகரிப்பு

அதானி கூட்டு நிறுவனங்களின் ஒரு பகுதியான Adani Power Ltd. (APL) ஆனது, 2023 டிசம்பர் 31 இல் முடிவடைந்த அதன் நிதியாண்டின் 3ஆவது காலாண்டிற்கான முடிவுகளை அண்மையில் அறிவித்துள்ளது.

இந்த காலாண்டு முடிவுகள் தொடர்பில் Adani Power Ltd. பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) S.B Khyalia கருத்து வெளியிடுகையில், “2023-2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் நிதிநிலை முடிவுகளின் அடிப்படையில், எப்போதும் உயர்ந்த தரத்தை எட்டுவதன் மூலம், Adani Power காணப்படுகின்ற துறைகள் முழுவதும் தனது தலைமைத்துவத்தை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது. நிறுவனத்தின் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் PPA கள் மற்றும் வணிகத் திறன்களுக்கு இடையேயான உரிய திறன் ஒதுக்கீடு, எரிபொருள் முகாமைத்துவம் மற்றும் தளவாடங்களில் (logistics) அதன் வலிமை மற்றும் மின்னுற்பத்தி நிலைய O&M இல் சிறந்து விளங்குவது ஆகியன, வளர்ந்து வரும் மின்சார தேவையை நிவர்த்தி செய்து வலுவான இலாபத்தை உருவாக்க உதவியுள்ளது. மேம்படுத்தப்பட்ட பணப் புழக்கத்திற்கு உட்படுத்தலுக்கு அமைய, இது நிறுவனத்தின் கடனைக் குறைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மஹானில் இடம்பெற்று வரும் Brownfield திறன் விரிவாக்கம் 1,600 MW மின்னுற்பத்தி திட்டமானது, தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அதே நேரத்தில், எமது தலைமைத்துவத்தை மேலும் வேகமான முறையில் மேலோங்கச் செய்வதற்காக நாம் செயற்பட்டு வருகிறோம். நிலைபேறானதன்மை இலக்குகளை எமது நிகழ்ச்சி நிரலின் முன்னணியில் நிலைநிறுத்தியவாறு, மிகத் திறனான மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து நம்பகமான மின் விநியோகத்தை வழங்குவதன் மூலம் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் அடிப்படையில், நாட்டை கட்டியெழுப்பும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

2023-2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான EBITDA இன் தொடர்ச்சியான வளர்ச்சியானது, அதன் வருமானத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலையில் குறைந்த அதிகரிப்பு செல்வாக்கு செலுத்துகின்றது. குறிப்பாக குறைந்த அளவிலான, இறக்குமதி எரிபொருள் விலைகள் மற்றும் மாற்று எரிபொருள் செலவுகள் என்பன ஒரு காரணமாக அமைகின்றது.

2022-2023 நிதியாண்டின் 3ஆம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023-2024 நிதியாண்டின் 3ஆம் காலாண்டின் வரிக்கு முந்தைய இலாபமானது மிக உயர்ந்த அதிகரிப்பை காட்டுகின்றது. முதல் ஒன்பது மாதங்களில் 2023-2024 நிதியாண்டின் 9 மாதங்களுடன் 2022-2023 நிதியாண்டின் 9 மாதங்களுடன் உடன் ஒப்பிடும்போது, PBT 154% அதிகரிப்பை காட்டுகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *