Sinopec உடன் யாழ்ப்பாணத்தில் மூலோபாய விரிவாக்கத்தை அறிவித்துள்ள Interocean Lubricants

சினோபெக் நிறுவனத்திற்கான, இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பிரத்தியேக விநியோகஸ்தரும் மசகு (lubricant) தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமுமான Interocean Lubricants (Pvt) Ltd., யாழ்ப்பாணத்தில் தனது விநியோக வலையமைப்பு விரிவாக்கத்தை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிக்கு உயர்தர மசகு எண்ணெய் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த முக்கியமான நிகழ்வு, பிரபல North Gate ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் Arthur Cheng Anxiang, Sinopec Energy Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் வர்த்தக மேற்பார்வையாளர் Scott Shi, Interocean Lubricants (Pvt) Ltd. நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜயசாந்த தொட்டஹேவகே, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன், யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பரிசோதகர் சம்லி பலிஹேன, யாழ். பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி சுரங்க பிரேமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிராந்திய மசகு எண்ணெய் விநியோக வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில், Sinopec Lubricant விநியோகஸ்தர்கள், Sinopec எரிபொருள் நிலைய உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சேவை தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிராந்திய பங்குதாரர்களின் பங்கேற்பும் இடம்பெற்றிருந்தது.

இந்த விரிவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்ட Sinopec Lubricants Sri Lanka நிறுவன பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜயசாந்த தொட்டஹேவகே, “நாம் ஏற்கனவே அனைத்து மாகாணங்களிலும் 20 விநியோகஸ்தர்களுடன் வலுவான விநியோக வலையமைப்பை நிறுவியுள்ளோம். அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டமையானது, நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அதன் மாறுபட்ட உற்பத்தி வகைகளானவை, எந்தவொரு வாகனத்தின் செயற்றிறனையும் மேம்படுத்தும் வகையில், பயணம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட வலுவையும் நீடித்த உழைப்பையும் வழங்குகின்ற ஒப்பிடமுடியாத மசகுத் தீர்வுகளை வழங்குகிறது. எமது தயாரிப்பு வகைகளில் Justar (J Series) பயணிகள் கார் மோட்டார் எண்ணெய் (PCMO), Tulux (T Series) டீசல் எஞ்சின் எண்ணெய் (DEO), X series மோட்டார் சைக்கிள் எஞ்சின் எண்ணெய் (MCO), Gear & Industrial oils, hydraulic oil, greases, tractor oil, marine oil, transformer oil ஆகியன உள்ளடங்குகின்றன.  இவை அனைத்தும் மிக உயர்ந்த சர்வதேச மட்டத்தையும் தரத்தையும் பூர்த்தி செய்கின்றன.” என்றார்.

ஜயசாந்த தொட்டாஹேவகே இங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் விநியோக வலையமைப்பின் விரிவாக்கத்தின் முக்கியத்துவமானது, நிறுவனத்தின் அர்ப்பணிப்புள்ள குழு வெளிப்படுத்திய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் வெற்றிக்கு ஒரு காரணமாகும். இந்த நடவடிக்கையானது, ஒரு மூலோபாய வணிக தீர்மானத்தைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாது, சினோபெக் தயாரிப்புகளில் பேணப்படும் சிறந்த மட்டத்தையும் தரநிலையையும் பேணுவது தொடர்பான நிறுவனத்தின் நம்பிக்கையை நிரூபிக்கிறது.

சீனாவின் 2ஆவது மிகப் பெரிய வலுசக்தி நிறுவனமான சினோபெக், Fortune Global 500 நிறுவனங்களில் 6ஆவது இடத்தில் உள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய உயர் மட்ட மசகு எண்ணெய் உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனரும் ஆகும். வருடாந்தம் 1.46 மில்லியன் தொன் மசகு உற்பத்தித் திறனைக் கொண்ட சினோபெக், உலகளாவிய ரீதியிலான இருப்பானது, சீனா முழுவதும் 5 பிராந்திய விற்பனை மையங்கள், உலகளாவிய ரீதியிலான விற்பனை துணை நிறுவனங்கள், சீனாவில் 11 மசகு எண்ணெய், கிரீஸ் கலவை மற்றும் உற்பத்திக் கிளைகள், சிங்கப்பூரில் 1 கிளை நிறுவனம் ஆகியன உள்ளடங்குகின்றன. சினோபெக் நிறுவனம் கொண்டுள்ள உற்பத்தி, ஆராய்ச்சி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை, சேவை உள்ளிட்ட விடயங்கள் நிறுவனத்தை மசகு எண்ணெய்த் துறையில் நம்பகமான பங்காளியாக மாற்றுகிறது.

யாழ்ப்பாணத்துக்கான இந்த விரிவாக்கமானது, இலங்கையின் அனைத்து மூலைகளிலும் மற்றும் அதற்கு அப்பாலும் தரமான மசகு எண்ணெய் தீர்வுகளை வழங்குவது தொடர்பான Interocean Lubricants இன் பணிநோக்குடன் இணைந்ததாக காணப்படுகின்றது.

இதன் மூலம் நாட்டின் வட பகுதிக்கு, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை எளிதாக அணுக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, நிறுவனத்தின் விசேடத்துவத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, பிராந்தியத்தில் மசகு உற்பத்திகளின் முன்னணி விநியோகஸ்தராக சினோபெக் நிறுவனத்தின் நிலையை பலப்படுத்துகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *