அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கான டிஜிட்டல் நோக்கத்தை செயற்படுத்தும் HUTCH

மீளெழுச்சி பெறும் இலங்கைக்கு, 2024 இலும் அதற்குப் பின்னரும் அதன் முழுத் திறனையும் அடைவதற்காக, விரைவான டிஜிட்டல் மாற்றம் அவசியமாகின்றது. டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தழுவுவது இதற்கான ஒரு தெரிவு மாத்திரமல்லாது, ஒரு தேவையுமாகும். உரிய தொலைபேசி இணைப்பு வசதி மற்றும் தரவுச் சேவைகள் மூலம் எமது மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட உலகத்திற்கான பாதையை திறப்பதற்கான திறவுகோல் இதுவாகும். இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் கைடயக்கத் தொலைபேசி புரோட்பேண்ட் வலையமைப்பு எனும் வகையில், மேம்பட்ட 4G மற்றும் 5G தயார் நிலை வலையமைப்பை HUTCH Sri Lanka கொண்டுள்ளது. இது இலங்கையை டிஜிட்டல் ரீதியில் செழிப்படையச் செய்யும் பொருளாதார இலக்கை நோக்கி கொண்டு செல்ல உதவும்.

தனது பரந்து விரிந்த வலையமைப்பின் மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் எல்லையற்ற சாத்தியங்களை செயற்படுத்தும் டிஜிட்டல் ஊக்கி எனும் வகையில், HUTCH Sri Lanka அதன் புதிய மற்றும் புத்தாக்கமான பிரசாரத்தை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மற்றும் உலகளாவிய ரீதியில் பாராட்டப்படும் பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவும் இந்த பகிரப்பட்ட நோக்கத்திற்கான பயணத்தில் வர்த்தகநாம பங்குதாரராக இணைந்துள்ளார்.

HUTCH இன் பயணம் குறித்து கருத்துத் தெரிவித்த HUTCH Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா, “டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி HUTCH வலையமைப்பை கொண்டு செல்வதானது, இலங்கையின் உள்ளீர்க்கப்பட்ட வளர்ச்சிக்கான எமது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. சமூகங்களை மேம்படுத்தவும், வளமான அனுபவங்களைக் கொண்ட உலகத்திற்கான பாதையை திறக்கவும் நாம் அயராது பாடுபட்டு வருகிறோம். புதிய சாத்தியங்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறந்த தெரிவு HUTCH யிடம் எப்போதும் காணப்படுகின்றது.

Fortune Global 500 நிறுவனமான CK Hutchison Holdings Limited எனும் பன்னாட்டு நிறுவனத்தின் உறுப்பினராக HUTCH Sri Lanka விளங்குகின்றது. CK Hutchison Holdings இன் தொலைத்தொடர்பு பிரிவானது, ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகள் முழுவதும் 175 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் உலகளாவிய மாபெரும் நிறுவனமாக உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், இக்குழுமமானது ஏற்கனவே 7 நாடுகளில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *