மிக விரும்பப்படும் மதிப்புமிக்க தேசிய விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட Link Natural

  • ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2022/23, NCE வருடாந்த ஏற்றுமதி விருதுகள் 2023, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விசேடத்துவ விருதுகள் 2022 ஆகியவற்றில் மகுடம்

CIC Holdings இன் துணை நிறுவனமும், மூலிகைகள் அடங்கிய தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளருமான Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், 2023 ஆம் ஆண்டை மிக சிறப்பாக நிறைவுசெய்யும் வகையில், தேசிய அரங்கில் 3 முக்கிய மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் நிறுவனம் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது. Link Natural ஆனது, ஆயுர்வேத மருந்துகளுக்கு மேலதிகமாக, மூலிகை சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) அடிப்படையிலான முன்னணி உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமாகும்.

Link Natural Products நிறுவனமானது, 1982ஆம் ஆண்டு ஏற்றுமதி சந்தைக்கான வாசனைத் திரவிய அத்தியாவசிய எண்ணெய்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்ததன் மூலம் செயற்படத் தொடங்கியது. அது ஆரம்பத்திலிருந்தே இவ்வணிகத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக, தரத்தை பேணி வருகின்றது. அதன் ஆரம்பத்தை தொடர்ந்து, சில வருடங்களுக்குப் பின்னர், ஆயுர்வேத மருந்துகள், மூலிகை சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பில் நிறுவனம் களமிறங்கியது. அதன் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்கள் இவ்வணிகத்திற்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியது. நிறுவனம் ஆயுர்வேதத்தின் பொக்கிஷங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வகையில், தற்கால நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய, பாதுகாப்பான, பயனுள்ள, தரமான சுகாதார பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளை கொண்டு வர முயற்சி செய்கிறது.

Link Natural நிறுவனத்திற்கு 2022/23 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Best Exporter Herbal and Ayurveda (மூலிகை மற்றும் ஆயுர்வேத சிறந்த ஏற்றுமதியாளர்) விருது வழங்கப்பட்டமையானது, அனைவரையும் ஈர்க்கும் வகையிலான மற்றும் சிறப்பான சாதனையாக அமைகின்றது. இது இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும் என்பதோடு, இது ஏற்றுமதி செயற்றிறனில் சிறந்து விளங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். Link Natural Products அதன் ஒப்பற்ற ஏற்றுமதி வருமானம், ஏற்றுமதிக்கான மதிப்புச் சேர்த்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், சந்தை பல்வகைமை, ஏற்றுமதி வருமான வளர்ச்சி ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள், வருடாந்தம் நாட்டின் ஏற்றுமதித் துறை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய ஏற்றுமதியாளர்களை அங்கீகரித்து அவர்களுக்கு கௌரவமளிப்பதற்காக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாகும்.

அந்த வகையில், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தினால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட 31ஆவது வருடாந்த ஏற்றுமதி விருதுகள் 2023 இல், மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத மற்றும் மூலிகைப் பொருட்கள் துறை உள்ளிட்ட மருந்துப் பொருட்களுக்கான தங்க விருதையும் (Large category) Link Natural வென்றது.

நமது Link Natural Products, பல்வேறு மூலிகை சுகாதார பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் மூலம் உள்ளூர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. நிறுவனத்தின் ஏற்றுமதியில் விரைவான வளர்ச்சியானது, உலகளாவிய ரீதியில் அதற்கு காணப்படும் வாய்ப்புகளுக்கான ஒரு அத்தாட்சியாகும். ஒழுங்குமுறை தொடர்பான அனுமதிகளைப் பெறுவது எமது நிறுவனத்தின் தயாரிப்பு பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தின் தேவைகளுக்கு அதன் வலுவான இணக்கத்தை குறிக்கிறது.

அதன் முதன்மை வர்த்தகநாமமான லிங்க் சமஹன் (Link Samahan) ஆனது, தற்போது அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா, செக் குடியரசு, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. லிங்க் சமஹன் ஆனது, 100% இயற்கையான அசல் மூலிகை பானமாகும், இது 14 நம்பகமான ஆயுர்வேத மூலிகை பொருட்களுடன் தயாரிக்கப்படுகின்றது. இம்மூலிகைகள் பல நூற்றாண்டுகளாக, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை மேம்படுத்தவும், தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் சமஹனில் காணப்படும் நன்மைகள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலும் கிடைப்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் தொழில் மற்றும் பாதுகாப்புத் தரங்களை அங்கீகரித்து, 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விசேடத்துவ விருதுகளில் (National Occupational Safety & Health Excellence Awards 2022), நிறுவனத்திற்கு Merit விருதும் வழங்கப்பட்டது. பணியிடங்களில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் காயங்களைத் தடுப்பதில் நிறுவனம் வலுவான பதிவுகளைக் கொண்டுள்ளதோடு, பல வெற்றிகரமான பாதுகாப்பு முயற்சிகளையும் அது செயற்படுத்தியுள்ளது.

இந்த மதிப்புமிக்க வெற்றிகள் தொடர்பில் Link Natural நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷானி ஜயசுந்தர மொராயஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதிலும், உலகின் பண்டைய மூலிகை மற்றும் ஆயுர்வேத மரபை எடுத்துச் செல்வதிலும் கவனம் செலுத்தும் அதே வேளையில், அதன் தயாரிப்புகளின் உயர் தரத்தை அடைவதற்காக Link Natural நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த விருதுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இந்த விருதுகள் நிலையான கண்டுபிடிப்புகளுடன் மற்றும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயற்பட உத்வேகம் அளிக்கின்றன.” என்றார்.

Link Natural ஆனது, பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் தரம் மிக்க புத்தாக்கமான மூலிகை சுகாதார பராமரிப்பு தயாரிப்புகளில் நிபுணத்துவம் கொண்டதாகும். இது நுகர்வோரின் பல்வேறு சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நிறுவனம் தனது FDA கணக்காய்வு இணக்க வசதியில், வணிக உற்பத்திக்கான ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்படுத்துதல் மற்றும் உயர் தரத்தை அமைப்பதற்கான, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை கொண்டிருப்பதனையிட்டு பெருமையடைகிறது. அதே நேரத்தில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சந்தையை அடையும் அதன் தயாரிப்புகள், நிறுவனத்திலிருந்து வெளியேறும் முன் கடுமையான தரம் மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளை பேணுவதற்கு உட்படுகிறது. ஜப்பானில் உள்ள கொஸ்ட்கோ வலையமைப்பில் சமஹனுக்கான அனுமதி மற்றும் பட்டியலிடலை நிறுவனம் பெற்றமை, உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் பிரபல மொடலின் பரிந்துரை மற்றும் ஒரு ரியாலிட்டி நிகழ்வின் போது பிரபல சிரேஷ்ட பொலிவுட் நடிகரின் சமஹன் தொடர்பான பரிந்துரை ஆகியன, சமஹனின் செயல்திறன், தரம் மற்றும் Link Natural மூலம் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் ஏனைய தயாரிப்புகள் கொண்டுள்ள உயர்தர பாதுகாப்புக்கான புதிய சான்றுகளாகும்.

Link Natural மூலிகை சுகாதார பராமரிப்பு தயாரிப்புகள், ஆயுர்வேத மருந்துகள் ஆகியன, ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் அவர்களது நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், வாடிக்கையாளர்களை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தங்களைத் தாங்களே மகிழ்விக்க ஊக்குவிக்கிறது. சந்தையில் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக, Earth Essence, மூலிகை தனிநபர் பராமரிப்பு உற்பத்திகளின் முழுமையான தயாரிப்புகள் காணப்படுகின்றன. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் உடன் கூட்டு சேர்ந்து, ‘Earth Essence’ தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளை விமான நிலையத்தின் வரிச் சலுகை பொருட்களாக Link Natural அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இவ்வர்த்தகநாமத்தின் பெருமளவிலான அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், நிறுவனத்தின் முதலாவது நவீன அனுபவ மையமானது, “Swastha by Link Natural”, இல 06, மைட்லண்ட் கிரசென்ட், கொழும்பு 07 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பல்லாண்டு காலமாக, சர்வதேச அளவில் நம்பகமான மற்றும் உயர் தர தயாரிப்புகளான Samahan, Sudantha, Swastha Amurtha, Swastha Triphala, Musclegard, SP Balm, Kesha போன்றவற்றின் இல்லமாக Link Natural திகழ்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *