அண்மையில் இடம்பெற்ற National Occupational Safety and Health Excellence விருது நிழ்வில், Best Critical Risk Management Strategy இற்கான விசேடத்துவ விருதை DIMO நிறுவனம் பெற்றுக் கொண்டது. இலங்கையின் மிகப்பெரிய Grid Substation திட்டத்தை, DIMO நிறுவனம் அதன் முக்கிய பங்காளியான Siemens உடன் இணைந்து இலங்கை மின்சார சபைக்காக (CEB) முன்னெடுத்திருந்தது. ஹபரண Grid Substation திட்டத்தின் நிர்மாணத்தின் போது, குறித்த பணியிடத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதன் மூலம் திட்டத்தில் பணிபுரியும் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் DIMO முன்னெடுத்த நடவடிக்கைகள், இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளன.
Photo Captions
Image : விருதுடன் DIMO குழுவினர்