அதிக நிலைபேறான சூரிய சக்தி உற்பத்திக்காக robotics ஐ பயன்படுத்தும் Adani Green

தற்போது செயற்பாட்டிலுள்ள மற்றும் எதிர்கால சூரிய மின் சக்தி திட்டங்களில் நீர் பயன்பாட்டை குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிறுவனம் மேலும் முதலீடு செய்யவுள்ளது

  • AGEL இன் சூரிய மின்சக்தி உற்பத்திகளில் 4,830 மெகா வாற்றுகள், robotic தூய்மைப்படுத்தல் மூலம் விரைவில் முழுமைப்படுத்தப்படும். இது வருடாந்தம் சுமார் 595 மில்லியன் லீற்றர் நீரை சேமிக்கும்.
  • நீர் நுகர்வு மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்து செயற்பாட்டு தொழிற்சாலைகளுக்கும் நீர் பாதுகாப்பு சாதகத்தன்மையை AGEL உறுதிபூண்டுள்ளது

சூரிய சக்தி என்பது புதுப்பிக்கத்தக்க வளமாகும். இது சூரியன் மறையும் வரை குறையாது. பசுமை வலுசக்தியை தயாரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சூரிய மின்கலத் தொகுதிகளை சுத்தம் செய்வதற்கான செயற்பாட்டில் நீர் அதிகம் தேவைப்படுகிறது. திறனான மின்னுற்பத்திக்கு சூரிய மின்கலத் தொகுதிகளை சுத்தம் செய்வது அவசியமாகும். பசுமை வலுசக்தி உற்பத்தியை நிலைபேறானதாக மாற்றுவதற்கான தனது முயற்சிகளில், Adani Green Energy Limited (AGEL) ஆனது மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் சூரிய மின் உற்பத்திகளில் நீர்ப் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.

சூரிய மின்கலத் தொகுதிகளின் பராமரிப்புக்காக நீர் நுகர்வைக் குறைக்க, நீர் பயன்பாடற்ற இயந்திரமனித தூய்மைப்படுத்தல் (robotic cleaning) தொகுதியை AGEL பயன்படுத்துகிறது. தனது செயற்பாட்டில் உள்ள சூரிய மின்கலத் தொகுதிகள், ஹைபிரிட் தளங்களில் (ஹைப்ரிட் சூரிய தொகுதி திறன்) மற்றும் அதன் எதிர்கால திட்டங்களில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க நீர் ஆதாரங்கள் குறைவாக காணப்படும் உலர் மற்றும் வறண்ட பகுதிகளில் இதை செயற்படுத்த AGEL திட்டமிட்டுள்ளது. இது சூரிய மின்கலத் தொகுதிகளின் பராமரிப்புக்கான நீர்ப் பயன்பாட்டை பூச்சியமாகக் குறைக்கும்.

தற்போது, AGEL இன் செயல்பாட்டிலுள்ள சூரிய மற்றும் ஹைபிரிட் ஆலைகளில் சுமார் 30%, அதாவது 7,043 மெகா வாற்றில் 2,070 மெகா வாற்று தொகுதிகளில் (சூரிய மின்கலம் + ஹைபிரிட் ஆலைகளின் மின்கல கூறு) robotic சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றது. இது வருடத்திற்கு  சுமார் 283 மில்லியன் லீற்றர் நீரை சேமிக்கின்றது. அதாவது வருடாந்தம் சுமார் 2.7 மில்லியன் குடும்பங்களுக்கு அவசியமான நீர்த் தேவைக்கு சமமாகும்.

தமது சூரிய சக்தி கலங்கள் மற்றும் தொகுதிகளில் தூசி படிவதை தடுக்க, பல வருடங்களாக ரோபோக்களை AGEL பயன்படுத்தி வருகின்றதுது. இந்த ரோபோக்கள் நீர்ப் பயன்பாடற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அவை சூழலுக்கு உகந்த மற்றும் சூரிய மின்கலத் தொகுதிகளின் வலுசக்தி வெளியீட்டு செயற்றிறனை மேம்படுத்துகின்றன. நன்னீர் வளங்களின் பற்றாக்குறை தொடர்பில் அதிகரித்து வரும் கவலைகளை மனதில் கொண்டு, AGEL ஆனது நீரின் நிலைபேறான முகாமைத்துவம் தொடர்பான, ஐ.நாவின் நிலைபேறான வளர்ச்சி இலக்குகள் (SDG) 6 உடன் இணைந்த பல்வேறு நீர் பொறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Adani Green Energy நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) அமித் சிங் இது பற்றி தெரிவிக்கையில், “நாம் முன்னோக்கிப் பயணிக்கும் போது, எமது தொழிற்சாலைகள் முழுவதும் நீர்ப் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்க robotic தூய்மைப்படுத்தலை பயன்படுத்துவதை நாம் எமது தெரிவாக கொண்டுள்ளோம். AGEL ஆகிய நாம், காலநிலை மாற்ற அபாயங்களைக் குறைப்பதில் எமது பங்கின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளோம். எமது பங்குதாரர்களுக்கு வருமானத்தை பகிர்வதைத் தாண்டி, எமது எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான பூகோளத்தை உருவாக்குவது எமக்கு ஒரு தார்மீக கடமையாகும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

AGEL அதன் அனைத்து செயற்பாட்டு ஆலைகளிலும் அதன் நீர் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கின்ற அதே வேளையில், அதன் எதிர்காலத் திட்டங்களிலும் நீர்ப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிகளையும் ஆராய்கிறது. 2023ஆம் ஆண்டில், ஒரு சுயாதீனமான உலகளாவிய உத்தரவாத நிறுவனமான DNV இலிருந்து நீர்-சாதகத்தன்மைக்கான சான்றிதழை (200MW இற்கும் அதிகமான ஆலைகளுக்கு) AGEL பெற்றுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளிலும், நீர் நுகர்வைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிறுவனம் மேலும் முதலீடு செய்யும்.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *