சிங்கர் (ஸ்ரீலங்கா) என்ற புகழ்பூத்த நாமத்துடன் இணைந்த, சிங்கர் தையல் இயந்திரம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தையல் தொழிலின் மூலம் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுப்பதற்கு உதவி வந்துள்ளது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, சிங்கர் தனது தனித்துவமான வர்த்தக முத்திரையான தையல் இயந்திரங்களை இலங்கையில் உற்பத்தி செய்து வருகிறது. உலகின் முதல் ஸிக்-ஸாக் (zig-zag) இயந்திரம் மற்றும் முதல் இலத்திரனியல் தையல் இயந்திரம் உட்பட தையல் இயந்திர கண்டுபிடிப்புகளில் பலவற்றை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை சிங்கர் வர்த்தகநாமத்தையே சேரும்.
சிங்கர் (ஸ்ரீலங்கா) நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான சிங்கர் இண்டஸ்ட்ரீஸ் (Singer Industries) பாரம்பரிய, இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய வடிவம் கொண்ட மற்றும் டிஜிட்டல் தையல் இயந்திரங்களை முழுமையான வசதிகளைக் கொண்ட தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இது 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொழிற்சாலையில் நேரடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் 150 சேவை முகவர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களுக்கு இடமளித்துள்ளது. பாரம்பரிய தையல் இயந்திரங்கள் நேர் தையல் மற்றும் ஸிக்-ஸாக் (வளைவுகள் கொண்ட) தையல் இயந்திரங்கள் போன்ற இரண்டு வகைகளில் காணப்படுகின்றன. அதே நேரத்தில் இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய வடிவம் கொண்ட மற்றும் டிஜிட்டல் தையல் இயந்திரங்கள் நவீன வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. சிங்கர் இண்டஸ்ட்ரீஸ் தையல் இயந்திரங்கள் மற்றும் தையல் இயந்திரங்களுக்கான இராக்கைகளை உற்பத்தி செய்வதுடன், தையல் இயந்திரங்களுக்கான நிறுத்திகள் ஆகியவற்றையும் உற்பத்தி செய்து வருகிறது.
தையல் இயந்திர நிறுத்திகள் மற்றும் இராக்கைகள் உள்ளூர் வழங்குநர்களின் உதவியுடன் 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. உள்ளூர் வழங்குநர்களின் ஜீவனோபாயமும் தையல் இயந்திர உற்பத்தியை சார்ந்துள்ளது. சிங்கர் இண்டஸ்ட்ரீஸ் தையல் இயந்திரம் சார்ந்த புத்தாக்கங்களுக்கான வலுவான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவையும் கொண்டுள்ளது. சிங்கர் இண்டஸ்ட்ரீஸ் உற்பத்தி செய்யும் அனைத்து தையல் இயந்திரங்களும் அதன் தாய் நிறுவனமான சிங்கர் (ஸ்ரீலங்கா) ஊடாக அதன் 431 விநியோக மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. தற்போது, சிங்கர் 85% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு தையல் இயந்திரத் துறையின் சந்தை முன்னிலையாளராக தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கர் இண்டஸ்ட்ரீஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வசதிகளில், தையல் இயந்திரங்கள் தொடர்பான தொழில்நுட்ப உதவி மற்றும் உதவி சேவைக்காக நாடளாவிய ரீதியில் சேவை மையங்களில் விசேட சேவை தொழில்நுட்ப வல்லுனர்களை நியமித்துள்ளது. அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மேலும் உதவ, அதன் யூடியுப் அலைவரிசை 130 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவி வீடியோக்களைக் கொண்டுள்ளது.
“சிங்கர்” என்ற நாமம் தையலுடன் நெருங்கிய தொடர்புடையது. உள்ளூர் தையல் தொழில் துறையில் அதன் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று சிங்கர் ஃபெஷன் அக்கடமி ஆகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த அக்கடமி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தையல் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், தொழில்முயற்சியாளராக மாறவும் உதவியுள்ளது. இந்த ஃபெஷன் அக்கடமி தையல் கற்கை நெறிகள் மற்றும் டிப்ளோமா பாடநெறிகளை நடத்தி வருகின்ற அதே நேரத்தில் மாணவர்களுக்கு மேலும் ஆதரவளிக்க பட்டப் படிப்பு வழிமுறையொன்று விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பட்டய வடிவமைப்பாளர் சங்கத்திடமிருந்து (Chartered Society of Designers (CSD)) பாடநெறி அந்தஸ்திற்கான அங்கீகாரத்தை இலங்கையில் இருந்து பெற்றுக்கொள்கின்ற முதலாவது மற்றும் ஒரேயொரு நிறுவனமாக இந்த அக்கடமி மாறும்.
தற்போதைய நிலையில், இந்த அக்கடமி நாடு முழுவதும் 54 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 22 தையல் கற்கைநெறிகள், 2 டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான திவி சவிய திட்டத்தின் ஒரு பகுதியாக 10 பாட நெறிகளை வழங்குகிறது. வருடாந்தம், 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிங்கர் ஃபெஷன் அக்கடமியின் பாடநெறிகளுக்கு தம்மைப் பதிவு செய்துகொள்கின்றனர். தற்போது 4,000 க்கும் அதிகமான மாணவர்கள் பாடநெறிகளை முன்னெடுத்து வருகின்றனர். நேரடி வகுப்புகளுக்கு மேலதிகமாக, நிகழ்நிலை (ஒன்லைன்) கற்கை வழிமுறைகளையும் இந்த அக்கடமி நடத்துவதுடன், மாணவர்களுக்கு மேலும் சௌகரியத்திற்காக பாட நெறிகளின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பதிப்பையும் வழங்குகிறது. கடந்த தசாப்தத்தில், 60,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஃபெஷன் அக்கடமியின் கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். மேலும், இந்த மாணவர்களில் சிலர் ஏற்கனவே சொந்தமாக தையல் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இந்த ஃபெஷன் அக்கடமி இலங்கை மக்களிடையே தையல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு உதவியதால், தையல் கலை பலர் மத்தியில் பொழுதுபோக்காக மாறியுள்ளது.
தையல் என்பது ஒரு நல்ல வருமானத்தை ஈட்டித்தர வாய்ப்புள்ள சுயதொழில் வாய்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படலாம். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சொந்த வணிகத்தைக் கொண்டுள்ள ஒருவருக்கு அது தற்போது மிகவும் கைகொடுக்கின்றது. புதிதாகத் தையல் தொழிலைத் தொடங்கிய பெருமளவானோர் தங்கள் வணிகங்களை அதிக இலாபம் ஈட்டக்கூடியவையாக வளர்த்துள்ளனர். சிங்கர் ஃபெஷன் அக்கடமி தையல் திறன்களை மேம்படுத்துவதற்கு அனைத்து வளங்களையும் தயார் நிலையில் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்காக இத்துறையில் தொழில் திறமைமிக்க தொழிற்படையை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.
முற்றும்.