பேபி செரமி: இலங்கையின் நம்பர் 1 குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம் 60 வருட நிறைவை கொண்டாடுகிறது

Hemas Manufacturing இனது முதன்மையான வர்த்தக நாமமும் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமுமான பேபி செரமி (Baby Cheramy), எமது தேசத்தின் சமூகங்கள் முழுவதிலும் உள்ள குழந்தைகளை தலைமுறை தலைமுறையாக பேணிப் பாதுகாத்து, அதன் 60 வருட நிறைவைக் கொண்டாடுகிறது. வர்த்தகநாமத்தின் ஆறு தசாப்த காலப் பயணத்தில், ஈவ் டி கொலோன் (Eau de cologne) உற்பத்தியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து பரந்துபட்ட குழந்தை பராமரிப்பு உற்பத்திகளை தயாரித்து வழங்கும் ஒரு முழுமையான உள்ளூர் வர்த்தகநாமமாக அது வளர்ந்துள்ளமை பிரமிப்பளிக்கிறது  . இன்று, பேபி செரமி இலங்கையின் குழந்தை பராமரிப்பு தொடர்பான உற்பத்திச் சந்தையில் நம்பர் 1 குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமாக சந்தையில் முன்னணியில் இருந்து வருகிறது. அதன் தயாரிப்புகள் மற்றும் இதர உற்பத்திப் பொருட்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதும், மிருதுவானதும், மென்மையானதுமான பராமரிப்பை வழங்கும் பொருட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தயாரிப்புகள் இலங்கையில் உள்ள அனைத்து மூலை முடுக்கெங்கும், அனைத்து சமூகங்களிடையேயுமான குடும்பங்களைச் சென்றடைவதோடு, மாலைதீவு, கனடா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு பிரபல அடையாளச் சின்னமான பேபி செரமி ஈவ் டி கொலோன்  1962 இல் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள் சந்தையில் இல்லாத ஒரு காலப்பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வர்த்தகநாமத்தின் முக்கிய பெறுமானங்களாக காணப்படும் மென்மை, அன்பான கவனிப்பு, நம்பகமான தரம் ஆகியவற்றைப் இது பிரதிபலிப்பதன் காரணமாக, பெரும்பாலான இலங்கைப் பெற்றோருக்கு தற்போதும் விருப்பமான குழந்தைகளுக்கான வாசனைத் திரவியமாக இது இருந்து வருகின்றது. இன்று, குழந்தை சவர்க்காரங்கள், கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட் ஏனைய குழந்தைகளுக்கான குளியல் உற்பத்திகள் மற்றும் இதர உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை இவ்வர்த்தகநாமம் உற்பத்தி செய்வதோடு அவற்றின் பல பிரிவுகளில் முன்னிலை வகிக்கின்றது. உணர்திறன் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அதன் தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அற்றவை என்பதோடு, பாதுகாப்பானவையுமாகும். பேபி சோப், பேபி லோஷன், பேபி கொலோன் ஆகியவற்றைக் கொண்ட பேபி செரமியின் சமீபத்திய மூலிகை  நலன் கொண்ட மீள்-அறிமுக தயாரிப்புகள், சந்தையில் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான ‘இயற்கை மூலப்பொருட்களை’ உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளன.

Hemas Holdings நிறுவனத்தின் தற்போதைய தலைவரான Husein Esufally, 1982 ஆம் ஆண்டில் இவ்வணிக நிறுவனத்துடன் இணைந்தார். அவர் வர்த்தகநாமம் மற்றும் தயாரிப்பு தொடர்பில் அதிக திறனை வெளிப்படுத்தினார். அத்துடன் உலகத் தரம் வாய்ந்த தரமான பொருட்களுடன் நம்பகமான குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கிய இடத்தை உருவாக்க ஆரம்பித்தார். இவரது குடும்பத்தின் 4ஆவது தலைமுறையைச் சேர்ந்த Sabrina Esufally, Hemas Manufacturing இனது பதில் முகாமைத்துவ பணிப்பாளராக தலைமைத்துவம் வழங்கி வருவதோடு, இன்றைய நுகர்வோருக்கு அர்த்தமுள்ள தயாரிப்புகளை உருவாக்குவதற்காக, தயாரிப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உந்து சக்தியாகவும் விளங்குகிறார்.

பேபி செரமி வர்த்தகநாமத்தின் பாரம்பரியம் தொடர்பில் Hemas Holdings நிறுவனத்தின் தலைவர் Husein Esufally கருத்துத் வெளியிடுகையில், “அன்பு மற்றும் நம்பிக்கையுடன் கட்டமைக்கப்பட்ட பேபி செரமி கடந்து வந்த 60 ஆண்டுகளை நாம் கொண்டாடும் இத்தருணமானது, எமக்கு பெருமையான தருணமாக உள்ளது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை, குறிப்பாக குழந்தைப் பருவத்தில் கவனித்துக் கொள்ளவும், ஆறுதல்படுத்தவும் உதவும் தொலைநோக்குப் பார்வையுடன் எமது பயணம் ஆரம்பித்தது. இப்பயணத்தை நாம் திரும்பிப் பார்க்கும்போது, இந்த நோக்கத்திற்காக, வர்த்தகநாமம் உண்மையாக இருந்து செயற்பட்டு வருவதில் நான் பெருமையடைகிறேன். அது அவர்களுக்கு உயர்தர தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் மாத்திரமன்றி, இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கு சந்ததி சந்ததியாக, ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை கற்பிப்பதிலான எமது பங்களிப்பினூடாகவும் இதனை மேற்கொண்டு வந்துள்ளோம். பல ஆண்டுகளாக, தாய்மார்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெறுவதற்காக, தொடர்ச்சியான புத்தாக்கங்களினால் எமது தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தி  வருகின்றோம்.” என்றார்.

Hemas Manufacturing இன் பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி Sabrina Esufally இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “Baby Cheramy வர்த்தக நாமமானது, தலைமுறை தலைமுறையாக இலங்கையர்களுக்கு பெற்றோரின் அன்பின் சக்தியை பிரதிபலித்து வருகிறது. நுகர்வோரின் தேவையை பூர்த்திசெய்வதால் எமது உற்பத்திகள் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளன. எமது தயாரிப்புகள் மிகவும் விரும்பப்படுபவையாக இருப்பதற்கான காரணம், அவை குழந்தைகளுக்கு சிறந்தவையாக தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அத்துடன் அவற்றின் சிறந்த தரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களில் நாம் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுப்பதில்லை. அற்புதமான புத்தாக்க கண்டுபிடிப்பு வெளியீடுகள் மூலம் வர்த்தகநாமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி காலடி வைப்பதில் நாம் இப்போது கவனம் செலுத்தி வருவதோடு, எமது நாடளாவிய ரீதியான முயற்சிகள் மூலம் நாம் ஏற்படுத்தும் சமூக மட்டத்திலான தாக்கம் தொடர்பிலும் கவனத்தை செலுத்தி வருகிறோம்.” என்றார்.

‘நம்பர் 1’ எனும் தனது இடத்தை உறுதி செய்யும் வகையில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான வர்த்தநாமங்களின் பதிப்பான LMD சஞ்சிகையில், முன்னணி வர்த்தக நாம மதிப்பீடு மற்றும் மூலோபாய நிறுவனமான Brand Finance Lanka வெளியிட்டுள்ள, வர்த்தகநாம வருடாந்த தரப்படுத்தலில் பேபி செரமி ஆனது, குழந்தை பராமரிப்புத் துறையில் தொடர்ச்சியாக 2 வருடங்களாக மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமம் (Most Loved Brand) எனும் பெயரைப் பெற்றுள்ளது.

ஒரு பொறுப்பான பெருநிறுவனம் எனும் வகையில், ஒவ்வொரு குடும்பமும், ஒரு சிறப்பான எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள் என்று ஹேமாஸ் ஆகிய நாம் நம்புவதால், ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க நாம் உறுதிபூண்டுள்ளோம். தாய் சேய் மருத்துவிச்சிகள், ECCD அதிகாரிகள் (ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாடு), சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு, மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் போன்ற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக 300 தாய் சேய் கிளினிக்குகளை பேபி செரமி நடத்தியுள்ளது. இந்த ஒவ்வொரு நிகழ்விலும் 450 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்துகொண்டிருந்தனர். சமூக மாற்றத்தைத் தூண்டும் வகையில், தற்போது பெற்றோர்களாகவுள்ள இருவருக்கும் பெற்றோர் பயிற்சிப் பட்டறைகளையும் பேபி செரமி நடத்துகிறது. இதில் பெற்றோர்கள் இருவரும், விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை உருவாக்கும், தாய் தந்தை எனும் உண்மையான கடமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

வர்த்தகநாமத்தின் முக்கிய வாக்குறுதியான நம்பிக்கை மற்றும் தூய்மையான அன்பு, குழந்தைகளுக்கான மிருதுவான மற்றும் மென்மையான பராமரிப்பு, அதன் பாதுகாப்பான மற்றும் உயர் தரமான தயாரிப்புகளுடன், அனைத்து பங்குதாரர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான மதிப்பின் உறுதிமொழியை பரவலடையச் செய்வதை பேபி செரமி உறுதி செய்கிறது. பேபி செரமி 60 வருட பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில், சில அற்புதமான திட்டங்களுடன் அதன் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் காலடி எடுத்து வைக்க இலட்சியத்துடன் காத்திருக்கிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *