உற்பத்தி மற்றும் வளர்ச்சியை விரிவுபடுத்தும் Pelwatte: எதிர்பாராத காலங்களிலும் விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் தொடர்ந்து ஆதரவு

உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, 2021 உடன் ஒப்பிடும்போது காலாண்டிற்கான பால் சேகரிப்பு வளர்ச்சியை 24% ஆக பதிவு செய்துள்ளது. இந் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது நாடு முழுவதும் அதன் பால் சேகரிப்பு வலையமைப்பில் ஒட்டுமொத்தமாக 41% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

“இந்த வளர்ச்சியானது நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பாலுற்பத்தியில் ஈடுபட்டுள்ள சமூகங்கள், தொடர்புடைய தொழிற்துறைகள் மற்றும் நுண் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் குறிக்கிறது. நாம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் பணிவுடன் உள்ளோம். இந்த தொற்றுநோயானது பல்வேறு நிச்சயமற்ற தன்மைகளை தோற்றுவித்துள்ளது. தொடர்ச்சியான ஆதரவிற்காக எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.

Pelwatte Dairy பல்வேறு பாற்பண்ணை வசதிகளை ஏற்படுத்தியதுடன், முகாமைத்துவத்தை நெறிப்படுத்தப்படுத்தியது மட்டுமன்றை கடந்த ஆண்டில் அதன் முக்கிய திறன்களை வலுப்படுத்தியது. இந் நிறுவனம் புதிய குளிரூட்டும் நிலையங்களை அமைத்ததுடன், பெற்றுக்கொண்ட SAPP வசதியை திறம்பட பயன்படுத்தியது. மேலும், தொற்றுநோய்க்கு மத்தியில் இரண்டு புதிய சுவைகளையும் அறிமுகப்படுத்தியது.

இந்த நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் வளங்களின் பயனுள்ள மற்றும் திறமையான பயன்பாட்டை உறுதிசெய்துள்ளதுடன், இதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்துள்ளன.

இந் நிறுவனம் புதிய குளிரூட்டும் நிலையங்களை அமைக்கவும், 1500 அலகுகள் பால் கேன்களுக்காகவும் ரூ. 35 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்தது. இவை பால் கறப்பதற்கும், சேமிப்பதற்கும் மற்றும் பாலைச் சேகரிக்கவும், போக்குவரத்து செய்யும் இடங்களாகவும் செயல்படுகின்றன. இது மாலையில் பால் கறப்பதில் விவசாயிகளை ஈடுபடுத்தியுள்ளதுடன், இது பாலின் தரத்தையும் அதிகரித்துள்ளது.

குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் கறவை கொட்டகைகளில் கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு வசதியான சூழலை வழங்க தேவையான அனைத்து உபகரணங்களும் பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இது பாலை சரியான நேரத்தில்  பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு வழங்க உதவியதன் மூலம் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரித்துள்ளது.

இந்நிறுவனம் ஊவா மாகாணத்தில் 89% வளர்ச்சியையும், மலை நாட்டில் 13% வளர்ச்சியையும், வட மத்திய பகுதியில் 39% வளர்ச்சியையும், வடமேற்kil 56% வளர்ச்சியையும், கிழக்கு மாகாணத்தில் 20% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இது உற்பத்தி மற்றும் செயல்பாடுகளின் வளர்ச்சிக்கு இது ஒரு சான்றாக உள்ளது.

Pelwatte Dairy நிறுவனம், சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக (SAPP – Smallholder Agribusiness Partnerships Programme) 463 மில்லியன் ரூபாவை சில மாதங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டதுடன், அன்றிலிருந்து முதல் கட்டமாக 1000 பாற்பண்ணையாளர்களிடையே இதனை பகிர்ந்தளித்து வருகின்றது. விவசாயிகள் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தொழில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. இந்த திட்ட வசதியானது 4P பெறுமதி சங்கிலி மாதிரியை அடிப்படையிலானதென்பதுடன், இது பொதுத்துறை, கிராமப்புற சிறு பாற்பண்ணையாளர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டு வருவதுடன், கிராமப்புற விவசாய சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூக தரங்களை மேம்படுத்தி பால் உற்பத்தியின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.

மேற்குறிப்பிட்ட மாகாணங்களை உள்ளடக்கிய 40 க்கும் மேற்பட்ட பால் சேகரிப்பு மையங்களைக் கொண்ட 12,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பாற்பண்ணையாளர்களை உள்ளடக்கிய தளத்துடன், நாளொன்றுக்கு 200,000 லீற்றருக்கும் மேற்பட்ட பாலை சேகரிக்கின்றது.  இந்த திட்ட வசதியின் பயனாளியாக Pelwatte Dairy இனால், தற்போதுள்ள தினசரி பால் உற்பத்தியை இப்போதிருந்து மூன்றாம் ஆண்டில் இரட்டிப்பாக்க முடியும் என நம்புகின்றது.  இந்த திட்டம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதேநேரத்தில், பெண்கள் வலுவூட்டலையும், தொழில்துறையில் இளைஞர்களின் பங்களிப்பையும் மேம்படுத்துகிறது. இந்த முயற்சியானது பல வழிகாட்டிகளின் மேற்பார்வையுடன் இளைஞர் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும்.  SAPP பயனாளிகளுக்கு காலநிலை மாற்றம் மற்றும் மீட்டெழுச்சியின் தாக்கங்கள் குறித்து விளக்கமளிக்கும். மேலும், இந்த திட்ட வசதியானது தீவனம் மற்றும் புல் வழங்குநர்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும். பாலின் தரத்தை மேம்படுத்தவும், கால்நடை நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த வசதி நிறுவனத்துக்கு உதவுகின்றது.

இதன் பயனாளியான பாற்பண்ணையாளர்கள் எளிய கட்டணத் திட்டங்களின் கீழ் மானிய வட்டி விகிதங்களுடன் கடன் வசதிகளைப் பெற முடிந்தது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *