நாடு முழுவதிலுமான தனது விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தும் நோக்கில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) நிறுவனம் அம்பலாங்கொடையில் ‘DPMC Workshop Express’ ஐ உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.
இலக்கம் 24, காலி வீதி, ஊரவத்தை, அம்பலாங்கொடை எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய Workshop Express, அப்பகுதியில் உள்ள பஜாஜ் (Bajaj) வாடிக்கையாளர்கள் மிக இலகுவாகவும் வசதியாகவும் அணுகக்கூடிய முக்கியமான ஓரிடத்தில் அமையப்பெற்றுள்ளது.
அம்பலாங்கொடை நகருக்கு மிக அருகாமையில் காலி வீதியில் அமைந்துள்ளது, இதன் மூலம் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் QUTE உள்ளிட்ட அனைத்து பஜாஜ் வாகனங்களுக்குமான முழுமையான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஏனைய சேவைகளை வழங்குகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் தேவைகள் மிகவும் துல்லியமாகவும் கவனமாகவும் கையாளப்படுவதை இக்கிளை உறுதிப்படுத்துகின்றது.


பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் மற்றும் பஜாஜ் ஜெனுயின் ஒயில் ஆகியவற்றை மாத்திரம் பிரத்தியேகமாக பயன்படுத்துவதன் மூலம் இக்கிளை மிக உயர்ந்த தரத்திலான சேவையை உறுதிப்படுத்துகின்றது. மேலும், இதே வளாகத்தில் அமைந்துள்ள DPMC உதிரிப்பாக விற்பனை நிலையத்தின் ஊடாக, வாடிக்கையாளர்கள் வாகனங்களின் ஜெனுயின் பாகங்கள் மற்றும் பஜாஜ் ஜெனுயின் ஒயில் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், DPMC–MRF (2W/3W), Atlas (4W), Orion (3W) போன்ற நம்பகமான டயர்களையும் கொள்வனவு செய்ய முடியும்.
இக்கிளையின் திறப்பு விழாவிற்கு இணையாக, அம்பலாங்கொடை, பலப்பிட்டிய, நியகம ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு, மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் செய்முறைப் பயிற்சியின் பொருட்டு மூன்று பஜாஜ் முச்சக்கர வண்டி இயந்திரங்களை DPMC நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இக்கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்கள் இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டதுடன், DPMC நிறுவனத்திற்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான வலுவான உறவை இது வெளிப்படுத்தியது.
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் DPMC தொடர்ச்சியாக வலுவான ஒத்துழைப்பைப் பேணி வருவதுடன், இதன் மூலம் மாணவர்கள் நடைமுறை ரீதியான தொழில்துறை பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து வாகனத் துறையில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகின்றது.

டேவிட் பீரிஸ் குழுமத்தின் வாகனப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பிரிவான DPMC Workshops ஏற்கனவே மடபாத்த (பிலியந்தலை), மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன.இந்த முதன்மையான DPMC Workshop களின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஹைட்பார்க் கோணர், நீர்கொழும்பு, குருணாகல், அநுராதபுரம், இரத்தினபுரி, காலி, பதுளை மற்றும் அம்பலாங்கொடை போன்ற முக்கிய நகரங்களில் இந்த Workshop Express தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
உற்பத்தியாளர்களினால் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க, தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக DPMC Workshops நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டுள்ளன. தரம், அக்கறை, வசதி ஆகியவற்றுக்கான நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, இத்துறையில் அது தொடர்ச்சியாக புதிய தரநிலைகளை நிலைநாட்ட வழிவகுத்துள்ளது.
மேலதிக விபரங்கள் மற்றும் சேவைகளுக்கான முன்பதிவுகளுக்கு அம்பலாங்கொடை DPMC Workshop Express ஐ 011 4700630 அல்லது 077 235 6695 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.