இலங்கையில் கால்பதிக்கும் Fracspace நிறுவனம்: கொழும்பில் பிரம்மாண்டமாக அறிமுகமாகும் ‘Altaira’ சொகுசு குடியிருப்புத் திட்டம்

Fracspace நிறுவனம் தனது மைல்கல் திட்டமான ‘Altaira’ எனும், மலைப்பகுதியில் அமைந்த, அதிசொகுசு குடியிருப்புத் திட்டத்தை 2026 பெப்ரவரி 14ஆம் திகதி, கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. வணிகம், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, Fracspace நிறுவனம் இலங்கைச் சந்தையில் உத்தியோகபூர்வமாக கால் பதிக்கும் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக அமைந்தது.

இயற்கையையும் கட்டடக்கலை மற்றும் அனுபவபூர்வமான வாழ்க்கையை ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான சொகுசு தலமான ‘Altaira’ அறிமுகமானது, அந்த மாலைப் பொழுதை சிறப்பித்தது. முழுமையாக நிர்வகிக்கப்பட்ட ஒரு உல்லாசப் பயண விடுதி தொகுதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், 40 தனிப்பட்ட கொண்டோமினியம் வில்லாக்கள் (Condominium villas) மற்றும் 24 சொகுசு Ridge Suites ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நுணுக்கமான இரசனையுடைய கொள்வனவாளர்களுக்கு தனியுரிமை, சிறந்த வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் நீண்டகால உரிமையாளர் மதிப்பை வழங்குகிறது. அறிமுக நிகழ்வின் போது, Ridge Suites 180,000 அமெரிக்க டொலர் இலிருந்தும், சொகுசு வில்லாக்கள் 480,000 அமெரிக்க டொலர் இலிருந்தும் ஆரம்பமாகின்ற, அறிமுகத்திற்கு முன்னரான விசேட முதலீட்டு விலைகளை Fracspace நிறுவனம் அறிவித்தது. இது அங்கிருந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் விடுமுறைக்கால இல்லம் தேடுபவர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

எல்லைகளைத் தாண்டி விரிவடையும் Fracspace

Altaira திட்டத்தின் மூலம், Fracspace தனது வளர்ந்து வரும் சர்வதேச நற்பெயரை மேலும் விரிவுபடுத்துவதுடன், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறையில் தனது நிபுணத்துவத்தை இலங்கைக்குக் கொண்டு வருகிறது. நீண்டகால வாழ்க்கை முறை உரிமையையும், தடையற்ற முகாமைத்துவம், தனியுரிமை மற்றும் முதலீட்டுத் திறனையும் கொண்ட ‘அனுபவம் சார்ந்த இரண்டாம் இல்லங்களை’ உருவாக்கும் இந்நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் பிரதிபலிக்கிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய Fracspace நிறுவனத்தின் ஸ்தாபகர் உன்னத் ரெட்டி (Unnath Reddy), இலங்கையில் அதிகரித்து வரும் உலகளாவிய சுற்றுலா ஈர்ப்பு, இயற்கை பன்முகத்தன்மை மற்றும் மூலோபாய இருப்பிடம் ஆகியவை அடுத்த தலைமுறை சொகுசுமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு இலங்கையை ஒரு சிறந்த இடமாக மாற்றுகின்றன என்பதை வலியுறுத்தினார்.

Altaira திட்டமானது இப்பிராந்தியத்தில் Fracspace இன் நீண்டகால அர்ப்பணிப்பின் தொடக்கமாகும். இது தனது உலகளாவிய விரிவாக்க மூலோபாயத்தில் இலங்கையை ஒரு முக்கிய மையமாக நிலைநிறுத்துகிறது.

அறிமுக நிகழ்வின் போது, Fracspace Ceylon Pvt Ltd. நிறுவனத்தின் பணிப்பாளர் தனுன திலகரத்ன, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தின் அபூர்வமான இயற்கைச் சூழல் குறித்து விளக்கினார். மூடுபனி மூடிய மலைகள் மற்றும் யாரும் தீண்டாத இயற்கை அழகால் சூழப்பட்ட இந்த இடம், ஆரோக்கியமான வாழ்வு மற்றும் சொகுசு வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஒரு சிறந்த சூழலை வழங்குகிறது.

‘The Inside Project’ நிறுவனத்தின் முதன்மை கட்டடக்கலை நிபுணர் ரங்க பெனாண்டோ உரையாற்றுகையில், நிலத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், இலங்கையின் சூழலியல் செழுமையையும் கலாசார சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கான முதற்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதனை இந்நிகழ்வின் போது அறிவித்து நிகழ்வை சிறப்பித்ததுடன், Altaira பணிகளுக்கான தயார் நிலையையும் உறுதிப்படுத்தினார்.

இறுதியாக, “Altaira என்பது வெறும் ஒரு அபிவிருத்தித் திட்டம் மட்டுமல்ல. அது உயரம், அமைதி, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறைக்கான தலம்” என Fracspace வலியுறுத்தியது. இந்த இடத்தின் தனித்துவத்தையும், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மலைப் பின்புல சின்னமாக மாறுவதற்கான திறனையும் பிரதிபலிக்கிறது.

முதலீட்டாளர்களின் பெரும் வரவேற்புடன், வலுவான முதலீட்டாளர் ஈடுபாடு மற்றும் ஆரம்பகால ஆர்வ வெளிப்பாடுகளுடன் நிறைவடைந்த இந்த அறிமுக நிகழ்வு, Altaira அதன் அடுத்த கட்டத்திற்கு முன்னதான நம்பிக்கைக்குரிய உத்வேகத்தைக் குறிக்கிறது. மேகங்களுக்கு மேல் அமைந்த ஒரு சொகுசுத் தலமாக Altaira, எதிர்கால பயணத்திற்கு வலுவான அடித்தளமிட்டுள்ளது.

அதன் வரையறுக்கப்பட்ட பொருட்கள், உயர்ந்த கட்டமைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் சர்வதேச கண்ணோட்டத்துடன், Fracspace இன் பயணத்தில் ஒரு சுட்டிக்காட்டப்படக் கூடிய படியை Altaira பிரதிபலிக்கிறது. முதலீடு, விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை மேகங்களுக்கு அப்பால் ஒரு தனித்துவமான இலக்காக கொண்டு செல்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *