இலங்கையின் வர்த்தக வாகனச் சந்தையானது, வலிமையான ஒரு புதுவரவை ஏற்றுள்ளது. Euro Motors மற்றும் Dongfeng Motor Corporation இடையிலான மூலோபாயக் கூட்டணியின் ஊடாக Dongfeng Trucks வாகனங்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிமுக நிகழ்வு பெப்ரவரி 17ஆம் திகதி Waters Edge இல் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு வணிகத் துறைகளுக்கு தேவையான அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் இந்த அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியதாக ஆறு கண்டங்களில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் Dongfeng வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதுவரை உலகளாவிய ரீதியில் 15 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக வாகனங்களை Dongfeng விற்பனை செய்துள்ளமையானது, அதன் உலகளாவிய அங்கீகாரத்திற்கு ஒரு சான்றாகும். மேம்பட்ட பொறியியல் அம்சங்கள், நீண்ட ஆயுள், சிக்கனமான பராமரிப்புச் செலவு ஆகியவற்றிற்கு பெயர்பெற்ற Dongfeng, செலவுக்கேற்ற சிறந்த மதிப்பை வழங்குவதில் முன்னணியில் திகழ்கின்றது.





Euro Motors மற்றும் Dongfeng இடையிலான இந்தப் கூட்டணியானது, ஆழமான அனுபவத்தைக் கொண்டது. வாகன வணிகத்தில் 40 ஆண்டுகால அனுபவமும், இலங்கையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக வாகனங்களின் சர்வதேச வர்த்தகநாமங்களை நிர்வகித்த நிபுணத்துவத்தையும் கொண்ட Euro Motors நிறுவனம், சிறந்த சந்தை நுண்ணறிவு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைத் திறனை இந்த பங்காளித்துவத்திற்கு வழங்குகிறது. இந்திய மற்றும் ஜப்பானிய வர்த்தகநாமங்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கைச் சந்தையில், Dongfeng ஒரு நம்பிக்கையான மற்றும் தரமான மாற்றீடாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Euro Motors அறிமுகப்படுத்தியுள்ள Dongfeng ட்ரக் வாகனங்கள் பல்வேறு வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இதில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் முதல் பாரிய நிறுவனங்கள் வரை, பொருட்கள் கையாளுகை (Logistics), ஆடைத் தொழிற்சாலை, கட்டுமானம், விவசாயம், உற்பத்தி மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளுக்கு அவசியமான பல ட்ரக் ரத மாதிரிகள் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் வணிகங்கள் தங்களது தேவைக்கேற்ப, உரிய சுமையைத் தாங்கும் திறன் கொண்ட ட்ரக் வாகனங்களை தெரிவு செய்ய முடியும்.



Dongfeng வாகனங்களின் சிறப்பம்சம் அவற்றின் தரம் மற்றும் விலை ஆகும். ஒவ்வொன்றும் உயர் குதிரைவலு (HP), முறுக்குவிசை (Torque), சுமை தாங்கும் திறன் கொண்ட மேம்பட்ட எஞ்சின் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய வர்த்தக வாகனங்களுக்கு நிகரான, வசதியான ஆசனங்கள், நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாகனம் செலுத்துவதில் சிறந்த அனுபவம் ஆகியவற்றை மிகவும் கட்டுப்படியான விலையில் வழங்குகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை மற்றும மனநிம்மதியை அளிக்கும் வகையில், Euro Motors நாடளாவிய ரீதியிலான சேவை மையங்கள் மற்றும் அசல் உதிரிப்பாகங்களின் கையிருப்பை உறுதி செய்துள்ளன. தங்களது விநியோகச் செலவு குறைந்திருப்பதாகவும் வணிக உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதாகவும், ஏற்கனவே Dongfeng வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து, Euro Motors நிறுவனத்தின் பிரதான செயல்பாட்டு அதிகாரி ரவீந்திர சேனாரத்ன தெரிவிக்கையில், “Dongfeng வர்த்தகநாமத்தின் உலகளாவிய பாரம்பரிய இருப்பும், Euro Motors நிறுவனத்தின் பல வருடகால உள்ளூர் அனுபவமும் இணைந்து, இலங்கையிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு மிகவும் ஸ்மார்ட்டான, வினைத்திறன் கொண்ட போக்குவரத்துத் தீர்வை வழங்கும்” என்றார்.
Dongfeng Truck அறிமுகத்தின் ஊடா, இலங்கையின் போக்குவரத்தை மையப்படுத்திய பொருளாதாரத்தில் சிறந்த பெறுமதி, நம்பகத்தன்மை மற்றும் வணிக நம்பிக்கை மிக்க ஒரு வர்த்தகநாமமாக அதனை நிலைநிறுத்த Euro Motors நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.