யாழ்ப்பாணத்திலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவமானது, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன், ஆலய மணிகளின் ஓசை, பக்திப் பாடல்கள் என பக்திப் பரவசத்துடன் இனிதாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது, ஒரு மதநிகழ்வென்பதற்கு அப்பால், ஒரு கலாசாரத்தினதும், சமூகத்தினதும் உயிரோட்டமான வெளிப்பாடாகும். நம்பிக்கை, அழகு மற்றும் பாரம்பரியம் ஆகியன ஒருங்கிணையும் ஒரு புள்ளியாகும்.
Hemas Consumer Brands (HCB) நிறுவனத்தின், இலங்கையின் மிகவும் நம்பகமான கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான குமாரிகா, இவ்வருடம் இந்நிகழ்வுகளுக்கு சிறந்த அர்த்தத்தை கொண்டு சேர்த்தது. இதில் “இயற்கை அழகு” எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற குமாரிகாவின் தனித்துவமான களச் செயற்பாடானது, ஒரு கொண்டாட்டத்திற்கு அப்பால், யாழ்ப்பாண தமிழ் மக்களுடனான இணைப்பு, ஊக்குவிப்பு, பராமரிப்பு ஆகியவற்றின் உண்மையான வெளிப்பாடாக அமைந்தது.
விழாவின் ஆரம்பம் முதலே நல்லூரில் அமைக்கப்பட்ட குமாரிகா அரங்கில் உற்சாகம் நிரம்பியிருந்தது. 1,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, அழகை ஆராதிக்கும் வகையிலான நிகழ்வுகளில் பங்கேற்றனர். மல்லிகைப் பூச்சரங்களுடனான இலவச கூந்தல் அலங்காரம், ஒவ்வெருவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் ஆய்வு அமர்வுகள் இடம்பெற்றதுடன் சேலைகள், மற்றும் ஏனைய அணிகலன்கள், குடைகள் மற்றும் குமாரிகா அன்பளிப்புப் பொதிகள் போன்ற கலாசாரத்தை மையப்படுத்திய பரிசுகளும் இங்கு வழங்கப்பட்டன. இந்த ஒவ்வொரு பரிசும் இப்பிராந்தியத்திற்கு ஏற்றவாறான, கலாசாரத்தையும், பாச பிணைப்பையும் காண்பிக்கும் வகையில் மிகக் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
குமாரிகா நிபுணர் தலைமையிலான கூந்தல் ஆய்வு அமர்வானது, கலந்து கொண்டோர் தங்களது கூந்தல் மற்றும் உச்சந்தலையின் நிலை குறித்த முழுமையான புரிதலை வழங்கியது. இது இந்த முயற்சியின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தது. 100% இயற்கை சாறுகளால் செறிவூட்டப்பட்ட ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் ஹெயார் ஒயில் ஆகியவற்றின் விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்பட்ட கலவையான குமாரிகாவின் முழுமையான கூந்தல் பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்தி, வரண்ட, சேதமடைந்த அல்லது நுனி உடைதல் போன்ற கூந்தல் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில், தகுதிவாய்ந்த கூந்தல் பராமரிப்பு நிபுணர்களால், முழுமையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்கினர். கூந்தலின் வேர் முதல் நுனி வரை சிறந்த போசணையை வழங்குதல், சேதத்தை சரிசெய்தல், கூந்தல் இழைகளை வலுப்படுத்துதல் மற்றும் அன்றாட பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதன் மூலம், ஆரோக்கியமான, வலுவான மற்றும் பிரகாசமான கூந்தலை பெற இந்நடைமுறை உறுதி செய்கிறது.
இந்நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்றதோடு, இது ஒரு வர்த்தகநாம அனுபவத்தையும் கடந்து, பிரதேசத்தின் அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக அமைந்திருந்தது. இந்த முயற்சியின் மூலம், கூந்தலை சீரமைத்தல், அதற்கு பாதுகாப்பு மற்றும் போஷணை அளித்தல் எனும் வாக்குறுதியை தழுவிக்கொள்ளுமாறு குமாரிகா பெண்களை ஊக்குவித்தது. நிபுணத்துவ பராமரிப்பு மற்றும் விஞ்ஞான ரீதியாக உருவாக்கப்பட்ட தீர்வுகள் மூலம் இயற்கையான அழகுக்கு ஆதரவளிக்க முடியும் என்பதை காண்பித்தது.
நாள் முழுவதும் பங்குபற்றியோரின் ஈடுபாடு மிக அற்புதமாக இருந்தது. குறிப்பாக 1,000 இற்கும் மேற்பட்ட கூந்தல் பகுப்பாய்வு நடவடிக்கைகள், 400 மல்லிகைப் பூச்சர அலங்காரங்கள் மற்றும் 500 இற்கும் மேற்பட்ட கூந்தல் அலங்காரங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தச் செயற்பாடுகளின் போது 300 இற்கும் மேற்பட்ட பெண்கள் முழுமையான குமாரிகா கூந்தல் பராமரிப்பு தொகுதியை கொள்வனவு செய்தனர். அத்துடன் 150 இற்கும் மேற்பட்ட டிஜிட்டல் பங்கேற்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வானது இப்பிராந்தியத்தில் உள்ளவர்களின் உற்சாகத்தையும், வர்த்தகநாமத்துடனான வலுவான தொடர்பையும் வெளிப்படுத்தியது.
இந்நிகழ்வின் வெற்றி குறித்து Hemas Consumer Brands நிறுவனத்தின் கூந்தல் பராமரிப்புப் பிரிவின் தலைவி ஹிருஷி பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “குமாரிகா ஆகிய நாம், இயற்கையும் நிபுணத்துவ பராமரிப்பும் இணையும்போது உண்மையான அழகு வெளிப்படுகிறது என நம்புகிறோம். ‘இயற்கை அழகு’ நிகழ்வின் மூலம் புனித நல்லூர் கந்தசஷ்டி விழாவில் இப்பிராந்தியத்தில் எமது நிலையான இருப்பு, பாரம்பரியத்தின் கொண்டாட்டம் மட்டுமல்லாமல், முழுமையான கூந்தல் பராமரிப்பின் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கான எமது அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த வெளிப்பாடும் காண்பிக்கப்பட்டது. கூந்தலை சீரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் அம்சங்களில், வேர் முதல் நுனி வரையிலான நடைமுறையை ஒரு நிபுணராக குமாரிகா தொடர்ச்சியாக ஆதரிக்கிறது. இது கூந்தலை வலுப்படுத்தி, போஷாக்களித்து, பாதுகாக்கிறது. விஞ்ஞான ரீதியாக ஆதரவளிக்கப்படும் எமது கூந்தல் பராமரிப்பு உற்பத்திகளின் மூலம் பெண்களுக்கு வழிகாட்டுவதன் மூலம், நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களுக்கே உரித்தான இயற்கையான அழகை தழுவிக் கொள்ள உதவுவது தொடர்பிலும் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இயற்கையான அழகு, நம்பிக்கை, வலுவூட்டல் ஆகியவற்றுடன் தொடர்புடைய குமாரிகா, இயற்கையின் சக்தியால் பலத்தையும் பொலிவையும் தழுவ, பல தலைமுறை இலங்கைப் பெண்களை வலுவூட்டியுள்ளது. இவ்வருட கந்த சஷ்டி உற்சவத்தில் அதன் வெளிப்பாடானது, பாரம்பரியம், சமூகம் மற்றும் இலங்கை பெண்களின் கூந்தல் குறித்த நிபுணத்துவ பராமரிப்பு ஆகியவற்றில் வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பு மேலும் எடுத்துக் காட்டப்பட்டது.
செயற்கைத் தீர்வுகள் பெருகிவரும் தற்கால உலகில், காலத்தால் அழியாத ஒரு செய்தியை குமாரிகா தொடர்ச்சியாக நிலைநிறுத்தி வருகிறது. அதுவே, “இயற்கையான அழகு வெறுமனே ஒரு வெளிப்பாடு அல்ல, அது உணரப்படுகிறது, பேணப்படுகிறது, வாழப்படுகிறது” என்பதாகும். நிபுணர்களால் ஆதரிக்கப்படும் கூந்தல் பராமரிப்புத் தீர்வுகள் மற்றும் ‘இயற்கை அழகு’ போன்ற திட்டங்கள் மூலம், இயற்கையாகவும் நம்பிக்கையுடனும் பெண்கள் தமது கூந்தலின் வலிமை, ஆரோக்கியம் மற்றும் பொலிவையும் கொண்டாட அதிகாரம் பெறுகிறார்கள்.
Hemas Consumer பற்றி
கடந்த 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு உற்பத்திகளை முன்னெடுக்கும் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த எதிர்காலத்தை அனுபவிப்பதனை வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவுகின்றது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயற்படும் Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.
END