டெல்மெஜ் குழுமம் (Delmege Group), கொழும்பு 09 இல் அமைந்துள்ள வேலுவன கல்லூரியில் 2025 உலக சிறுவர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது. இங்கு தரம் 01 முதல் 13 வரையான சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இங்கு Delmege குழுமத்தின் தாய் நிறுவனமான Vallibel One முகாமைத்துவப் பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன் தலைமையிலான, நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொண்ட டெல்மெஜ் பிரதிநிதிகள் குழுவினரை, கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் கெடட் குழுவினர் வரவேற்றனர். இந்த வண்ணமயமான நிகழ்வு, பாடசாலை மற்றும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் மாணவர்களால் பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நன்றி நவிலல் செய்திகள், ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆசிரியர்கள் தமது வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக தமது பல்வேறு திறமையான விடயங்களை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் டெல்மேஜ் நிறுவனத்தினால் பிரபல நகைச்சுவைக் கலைஞரின் பங்குபற்றுதலுடன் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வின் மூலம், உண்மையிலேயே சிறுவர்களுக்கு மறக்க முடியாத தினமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இக்கொண்டாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக, மாணவர்களுக்கு அத்தியாவசியமான பாடசாலை உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சிற்றுண்டிகளை டெல்மெஜ் நிறுவனம் வழங்கியது. அத்துடன், Delmege Healthcare இன் Alcon Surgical Division பிரிவானது, Vision Care உடன் இணைந்து ஒரு விசேட கண் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இது இந்த நிகழ்வின் மதிப்பை மேலும் அதிகரித்திருந்தது. இந்த அர்த்தமுள்ள முயற்சியானது, கல்வி, சமூக நலன் மற்றும் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றில் Delmege நிறுவனத்தின் ஆழமான அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. இது மாணவர்களுக்கு நடைமுறை ரீதியான ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வேலுவன கல்லூரி மாணவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Caption – Vallibel One (Delmege குழுமத்தின் தாய் நிறுவனம்) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன், கொழும்பு 09, வேலுவன கல்லூரியில் இடம்பெற்ற அர்த்தமுள்ள உலக சிறுவர்தின கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற போது…