ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழாவில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைக் கொண்டாடுகிறது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி எனவும் அறியப்பட்ட ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழா கொண்டாட்டங்களில் யாழ்ப்பாண மக்களுடன் கைகோர்த்திருந்தது. நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவது என்பது நிறுவனத்தின் நோக்காக அமைந்திராமல், பாரம்பரியத்துக்கு மதிப்பளிப்பது மற்றும் பரந்தளவு சமூகங்கள் மத்தியில் பந்தத்தை வலிமைப்படுத்துவது என்பன இந்த ஈடுபாட்டின் நோக்காக அமைந்திருந்தது.

2025 ஜுலை 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை நல்லூர் திருவிழா நடைபெற்றதுடன், இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்களை ஒன்று சேர்த்திருந்தது. ஜனசக்தி பினான்ஸ் நிறுவனத்துக்கு இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றமை என்பது, சமூகத்துடன் இணைந்திருப்பது, அதன் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பது மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டினூடாக அதன் தொடர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவது என்பதாக அமைந்திருந்தது.

இந்த பந்தத்தை மேலும் ஆழப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட வீடு-வீடாக செல்லும் செயற்திட்டத்தை ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்திருந்தது. அதனூடாக, தனது பரந்த சேவைகளை வட மாகாணத்தின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று வழங்கும் பணிகளை மேற்கொண்டிருந்தது. இந்த செயற்பாட்டினூடாக, தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேரடியாக தமக்கு பரீட்சியமான சூழலில் தொடர்புகளை பேணி, நிதித் தீர்வுகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை பெற்றுக் கொள்ள முடிந்ததுடன், தினசரி வாழ்வின் செயற்படுத்தும் ஒரு கருவியாக நிதி வசதிகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது பற்றி அறிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது.

இந்த நடவடிக்கையினூடாக, ஜனசக்தி பினான்ஸ் நிறுவனத்தின் நிதிச் சேவைகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தமை மட்டுமன்றி, நல்லூர் திருவிழாவுடன் பொருந்தும் வகையில் அணுகல், உள்ளடக்கம் மற்றும் நம்பிக்கை – கொள்கைகள் போன்றவற்றுடன் பொருந்துவதாகவும் அமைந்திருந்தது. கெப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சி (PEO TV Channel 124), Facebook மற்றும் YouTube Live போன்றவற்றினூடாக, சமூக ஈடுபாடு தொடர்பான தனது தகவலை பரவச் செய்திருந்ததுடன், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பக்தர்கள் மத்தியில் திருவிழா கொண்டாட்டத்தையும் அதன் தாக்கத்தையும் விரிவுபடுத்தியது.

இந்த கலாசார ஈடுபாடு தொடர்பில் ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி தலைமை செயல் அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “2025 நல்லூர் திருவிழாவில் எமது பிரசன்னத்தினூடாக, நிதி என்பது மக்கள், பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாக நாம் நம்புகிறோம். எம்மைப் பொறுத்தமட்டில் இது ஒரு நிகழ்வு மாத்திரமல்ல, சமூகங்களுடன் பயணிப்பது, அவர்களின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பது மற்றும் மக்களின்-முதன்மை நிதிசார் பங்காளர் எனும் வகையில் எமது நோக்கை மீள உறுதி செய்வது என்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. எமது மீள வர்த்தகநாமமிடும் பயணத்தின் மத்தியில் 44 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில், உள்ளடக்கமான, அணுகக்கூடிய மற்றும் பொருத்தமான நிதிசார் தீர்வுகளை ஒவ்வொரு இலங்கையருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்கிறோம்.” என்றார்.

தனது வருடபூர்த்தி மைல்கல், கலாசார ஈடுபாடு மற்றும் மீள் வர்த்தக நாமமிடல் பயணம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஜனசக்தி பினான்ஸ், பரிவர்த்தனைகளுக்கு அப்பாற்பட்ட மதிப்புகளைக் கொண்ட நம்பிக்கையை வென்ற நிதிச் சேவைகளை வழங்கும் பங்காளர் எனும் அடையாளத்தை மேலும் உறுதி செய்திருந்தது. இலங்கையின் செழுமையான கலாசார அம்சங்களை உறுதி செய்யும் மக்கள், பாரம்பரியங்கள் மற்றும் சமூகங்களுக்கு மதிப்பளிக்கிறது. நாடு முழுவதிலும் 37 கிளை வலையமைப்பைக் கொண்டு, அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையிலான நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்து, சமூகங்களுக்கு வலுவூட்டும் செயற்பாட்டாளர் எனும் தனது நிலையை தொடர்ந்தும் மேம்படுத்திய வண்ணமுள்ளது.

###

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித் தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவதும் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகும். LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

படம்

சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், தலைமை செயல் அதிகாரி, ஜனசக்தி பினான்ஸ்  பிஎல்சி

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *