ஜனசக்தி லைஃப், இரண்டாம் காலாண்டில் புதிய வியாபார வளர்ச்சியாக 61% ஐயும், இலாப வளர்ச்சியாக 70% ஐயும் பதிவுசெய்துள்ளது

ரவி லியனகே, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி.

ஜனசக்தி லைஃப், 2025 இரண்டாம் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் ஒன்று எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. முதல் காலாண்டில் நிறுவனம் பதிவு செய்திருந்த உறுதியான போக்கினை மேலும் தொடர்ந்து, வளர்ச்சிப் பாதையில் செயலாற்றி, இலாபகரத்தன்மை மற்றும் வியாபார விரிவாக்கம் ஆகியவற்றில் தொழிற்துறையின் நியமங்களை கடந்திருந்தது.

தனது தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையை பேணி, ஜனசக்தி லைஃப்பின் முதல் வருட கட்டுப்பணங்கள், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61% எனும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. அதனூடாக நிறுவனத்தின் வலிமை மாத்திரமன்றி, சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில் சிறந்த நிலையையும் வெளிப்படுத்தியிருந்தது. JXG (ஜனசக்தி குழுமம்) குழுமத்தின் முன்னணி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதிப் பெறுபேறுகளை அறிவித்திருந்தது. அதில் நிறுவனத்தின் வலிமை, மூலோபாய தெளிவுத்தன்மை மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.

வழமையான நீண்ட கால வியாபாரங்கள் வருடாந்த அடிப்படையில் 32% இனால் வளர்ச்சியடைந்திருந்ததுடன், நீண்ட கால வாடிக்கையாளர் பெறுமதியை மேம்படுத்தும் நிறுவனத்தின் ஆற்றலை உறுதி செய்திருந்ததுடன், நிலையான வருமான மூலங்களையும் உறுதி செய்திருந்தது. தேறிய கட்டுப்பண செலுத்தல்கள் (GWP), ரூ. 3,769 மில்லியனை எய்தி, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. பரந்த சந்தை அழுத்தங்களுக்கு மத்தியில், இப்பிரிவில் சிறந்த செயற்பாட்டாளராக ஜனசக்தி லைஃப்பை அடையாளப்படுத்தியிருந்தது.

தேறிய இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 777 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 70% இனால் அதிகரித்து ரூ. 1,318 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த சொத்துக்களின் பெறுமதி 2025 ஜுன் மாத இறுதியில் ரூ. 39 பில்லியனாக அதிகரித்து, நிறுவனத்தின் உறுதியான நிதிசார் அடித்தளத்தையும், மேலும் வளர்ச்சியடைவதற்கான ஆற்றலையும் வெளிப்படுத்தியிருந்தது.

புத்தாக்கமான காப்புறுதித் திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் போன்றவற்றில் நிறுவனம் காண்பித்திருந்த அக்கறையுடனான செயற்பாடுகளினூடாக, சிறந்த பலன்கள் கிடைத்திருந்தன. புதிய வியாபார கட்டுப்பணங்கள் முதல் வருடத்திற்காக 73% இனால் அதிகரித்திருந்தது. இலங்கையின் குடும்பங்களின் வியாபித்துச் செல்லும் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, நிலைபேறான வகையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஜனசக்தி லைஃப்பின் மூலோபாய நோக்கத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பிட்ட சில ஆயுள் காப்புறுதி பிரிவுகளில் சந்தைப் பங்கை அதிகரித்திருந்தமையை இந்தப் பெறுபேறுகள் காண்பித்திருந்ததுடன், துறையின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவர் எனும் நிலையை மேலும் உறுதி செய்திருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், நிறுவனத்தினால் மொத்தமாக ரூ. 1,589 மில்லியன் உரிமைகோரல்கள் மற்றும் அனுகூலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதனூடாக, காப்புறுதிதாரர்களுக்கான தனது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையை வென்ற மற்றும் நம்பியிருக்கக்கூடிய காப்புறுதி பங்காளர் எனும் நிலை மீளுறுதி செய்யப்பட்டுள்ளது.

அன்னிகா சேனாநாயக்க, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைமை அதிகாரி

ஜனசக்தி லைஃப் முன்னெடுக்கும் மூலோபாய முன்னுரிமைச் செயற்பாடுகள், வினைத்திறனான செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை மனநிலை போன்றவற்றின் தெளிவான எடுத்துக்காட்டாக உறுதியான இரண்டாம் காலாண்டு வினைத்திறன் அமைந்துள்ளது. வியாபாரம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை மட்டுமன்றி, விநியோகம் மற்றும் தயாரிப்பு பன்முகத்தன்மை முதல் செயற்பாட்டு வலிமை மற்றும் நிதிசார் வருமதிகள் போன்ற ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைமை அதிகாரி அன்னிகா சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுத்து எய்தியுள்ள சிறந்த முன்னேற்றத்தை இந்தப் பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன. எமது இலாபம் மற்றும் வருமானத்தில் எய்தியுள்ள நிலைபேறான வளர்ச்சி என்பது, எமது மூலோபாய செயற்பாடுகள் மற்றும் அணியினரின் பலம் போன்றவற்றின் நேரடி வெளிப்பாடாக அமைந்துள்ளது. எமது பிரசன்னத்தை தொடர்ச்சியாக நாம் வளர்ச்சியடையச் செய்யும் நிலையில், நம்பிக்கையை வலிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, ஆழமான உறவுகளை மேலும் சீராக்குவதிலும், எதிர்காலத்துக்கு தயாரான வியாபாரங்களை கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட மூலோபாயத் திட்டங்களை வெளிப்படுத்துவதாக பெறுபேறுகள் அமைந்துள்ளதுடன், அவை சிறந்த முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தமையையும் குறிக்கிறது. குறிப்பாக, திட்டங்கள் மற்றும் விநியோகம் போன்றன தொடர்ச்சியாக அதிசிறந்த பெறுபேறுகளை எய்துவதில் சிறப்பாக பங்களிப்புச் செய்திருந்தன. இலாபகரத்தன்மை இதுவரையில் 70% வளர்ச்சியை எய்தி உறுதியான நிலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், இரண்டாம் காலாண்டில் மேலும் உறுதியான பங்களிப்பை வழங்குகின்றன. புதிய வியாபாரம் மற்றும் இலாபகரத் தன்மை போன்றவற்றில் வளர்ச்சியினூடாக வாடிக்கையாளர்களின் தேவைகளுடன் நாம் தொடர்புபட்டவர்களாக இருப்பதையும், அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்குவதையும் வெளிப்படுத்தியிருந்தன. நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தவும் நாட்டில் எமது பிரசன்னத்தை உறுதியாகவும் வலிமையாகவும் விரிவாக்கம் செய்வதிலும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.” என்றார்.

எதிர்காலத்தின் மீது உறுதியாக கவனம் செலுத்தும் ஜனசக்தி லைஃப், நிதியாண்டின் அடுத்த அரையாண்டிலும் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது. டிஜிட்டல் புத்தாக்கத்தை மேம்படுத்துவது, விநியோக வலையமைப்பை வலிமைப்படுத்துவது மற்றும் வாடிக்கையாளர்களுடன் நிலைத்திருக்கும் உறவுகளை கட்டியெழுப்பி – அனைத்து பங்காளர்களுக்கும் நீண்ட கால பெறுமதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

###.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்ஷூரன்ஸ் பி.எல்.சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றது. நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை ஜனசக்தி லைஃப் கொண்டுள்ளதுடன், பரந்த 75 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டு துறைகளில் இயங்கும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி திகழ்கின்றது.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பணிப்பாளர் சபையில் அன்னிகா சேனாநாயக்க, பிரகாஷ் ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, கலாநிதி. நிஷான் டி மெல், சிவகிருஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி. கெஹான் குணதிலக மற்றும் திலீப் டி எஸ். விஜேரட்ன ஆகியோர் அடங்கியுள்ளனர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *