கானகத்தை நோக்கிய பயணம்: Shangri-La – யானைக் குட்டியான El-la ஐ தத்தெடுத்து இலங்கையின் வனஜீவராசிகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது

Shangri-La கொழும்பு மற்றும் Shangri-La ஹம்பாந்தோட்டை ஆகியன, நிலைபேறாண்மை, உயிரியல் பரம்பல் மற்றும் அர்த்தமுள்ள உள்நாட்டு பங்காண்மைகளுக்கான தமது நீண்ட கால அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளன. இலங்கையின், உடவளவையிலுள்ள யானைகள் சரணாலயத்துடன் (ETH) கைகோர்த்து, யானைக் குட்டியான El-la வை (‘El’ என்பது யானை மற்றும் ‘La’ என்பது Shangri-La என்பதையும் குறிக்கிறது) தத்தெடுத்து இந்த அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் சுமார் 4000 யானைகள் வசிக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த எண்ணிக்கை 12,000 க்கு அதிகமானதாக காணப்பட்ட நிலையில், யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இந்த விலங்கினத்தின் சஞ்சாரம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 388 க்கும் அதிகமான யானைகள் இறந்திருந்தன. 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 44 க்கும் அதிகமான யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளன. மனித-யானைகள் முரண்பாட்டு நிலையின் விளைவாக இந்த நிலை எழுந்துள்ளதுடன், யானைகளின் வசிப்பிடங்கள் அருகி வருவதுடன், பாரம்பரியமாக யானைகளின் வசிப்பிடங்களாக அமைந்துள்ள பகுதிகளில் மனித அத்துமீறல்களும் அதிகரித்த வண்ணமுள்ளன.

இந்த புள்ளி விவரங்களுக்கு அப்பால், தாய் யானைகள் கொல்லப்பட்டதும் மற்றும் கூட்டத்திலிருந்து காணாமல் போன நிலையில் யானைக் குட்டிகள் கைவிடப்படும் துயர நிலை எழுகின்றன. அவ்வாறான ஒரு கதையாக El-la வின் நிலையும் அமைந்துள்ளது.

இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் வனாந்தரப் பகுதியில் பிறந்த El-la, தனது யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்து, விவசாய கிணறில் விழுந்திருந்தது. தனித்த நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் இந்தக் குட்டி காப்பாற்றப்பட்டு, உடவளவையிலுள்ள யானைகள் சரணாலயத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

1995 ஆம் ஆண்டு முதல் யானைகள் சரணாலயம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இயங்குவதுடன், யானைகள் மீட்பு மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளின் முன்னோடியாக அமைந்துள்ளது. உடவளவ தேசிய பூங்காவின் எல்லையில் அமைந்துள்ள இந்த சரணாலயம், 300 க்கும் அதிகமான அநாதரவான யானைகளை காப்பாற்றியுள்ளது. அதில் 198க்கும் அதிகமானவை காட்டினுள் மீண்டும் வெற்றிகரமான விடுவிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சரணாலயங்களைப் போலன்றி, இந்த சரணாலயத்தில் குறைந்தளவு மனித ஈடுபாடு பேணப்படுவதுடன், யானைகளுக்கு முற்றிலும் சுயாதீனமான வாழ்க்கையை தமது இயற்கையான சூழலில் முன்னெடுக்க வழிகோலுகின்றது.

Shangri-La கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகியன இணைந்து El-la இன் பராமரிப்பு, புனர்வாழ்வு மற்றும் வனாந்தரத்தில் மீள விடுவிப்பதற்கு தயார்ப்படுத்தலுக்காக அடுத்த நான்கு வருடங்களில் 10,000 க்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை செலவிட தம்மை அர்ப்பணித்துள்ளன. ஒரு உயிரை பாதுகாப்பதனூடாக, இலங்கையின் வனாந்தர எதிர்காலத்தை பேணுவதற்கு முன்வந்துள்ளது.

ஐந்து வருட கால தத்தெடுப்பு உடன்படிக்கையின் பிரகாரம், Shangri-Laவினால், El-la இன் பராமரிப்பு, போஷாக்கு, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மீள-வனாந்தரத்தினுள் விடும் செயன்முறை போன்றவற்றுக்கு நிதிவசதிகள் வழங்கப்படும். அநாதரவான யானைக்குட்டி எனும் நிலையிலிருந்து வலிமையான, சுதந்திரமாக நடமாடக்கூடிய யானையாக மாற்றமடையும் பயணத்தில் அங்கம் பெறவுள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக, Shangri-La ஒரு தங்குமிடம் எனும் உறுதிமொழிக்கு அப்பால், பாதுகாப்பளிக்கும் செயற்பாடாக அமைந்திருப்பதுடன், எம்மைச் சூழவுள்ள உயிரினங்களை பாதுகாக்கபதில் எமது நீண்ட கால வசிப்பிட பாரம்பரியம் பேணப்படுகிறது. வர்த்தக நாமத்தின் உள்ளம்சங்களில் ஆழமாக ஊடுருவியுள்ள நிலைபேறாண்மை, உயிரியல் பரம்பல், மனமார்ந்த விருந்தோம்பல் மற்றும் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சமூகம் போன்றவற்றுக்கு ஆழமான மதிப்பளிப்பு போன்றவற்றுடன் பொருந்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

Shangri-Laவின் சர்வதேச உயிரியல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், El-la இன் கதையும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பெறுமதி வாய்ந்தவற்றை பாதுகாத்தல், இயற்கையுடன் ஒன்றித்து வாழ்தல், நோக்கத்தினால் வழிநடத்தப்படும் விருந்தினர் பயணங்களை உருவாக்கல் மற்றும் தங்கியிருத்தல் என்பதற்கு அப்பாலான உணர்வுபூர்வமான பந்தங்களை கட்டியெழுப்பல் போன்றவற்றை நிவர்த்தி செய்கிறது.

Shangri-La ஹம்பாந்தோட்டையின் பொது முகாமையாளர் ரிஃபான் ரசீன் கருத்துத் தெரிவிக்கையில், “El-la ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்கு அப்பாலானது. நிலம், மக்கள் மற்றும் இந்த நாட்டின் பாரம்பரியம் ஆகியவற்றில் நாம் காண்பிக்கும் ஆழமான பொறுப்பை El-la பிரதிபலிக்கின்றது. இலங்கையின் இயற்கை அம்சங்கள் சூழ்ந்ததாக எமது ரிசோர்ட் அமைந்திருப்பதுடன் – அதனை பாதுகாப்பதற்கான எமது கடமையின் வெளிப்பாடாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.” என்றார்.

Shangri-La கொழும்பின் பொது முகாமையாளர், Hervé Duboscq கருத்துத் தெரிவிக்கையில்: “Shangri-La இல், உண்மையான விருந்தோம்பல் என்பது சேவைக்கு அப்பாற்பட்டது, வழிநடத்தலை பின்பற்றியது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். El-la’இன் பயணத்துக்கு ஆதரவளிப்பது, அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்துள்ளதுடன், கானகத்தின் மீதான அரவணைப்பு என்பது, எமது எதிர்காலத்துக்கான அரவணைப்பு என்பதை நினைவூட்டுவதாக உள்ளது.

Shangri-La இன் ஹோட்டல்களைச் சேர்ந்த விருந்தினர்கள், El-la இன் வளர்ச்சியை பின்தொடர அழைக்கப்படுவர். ஒழுங்கமைக்கப்பட்ட அனுபவங்கள், பாதுகாப்பான கதைகூரல்கள் மற்றும் சூழலில்-அக்கறையான வர்த்தகநாமமிடப்பட்ட தெரிவுகளினூடாக அவை முன்னெடுக்கப்படும்.

இயற்கையின் சமநிலை ஆட்டம் கண்டு வரும் உலகில், Shangri-La தொடர்ந்தும் பெறுமதியானதன் காவலனாக உறுதியாக தனது பங்களிப்பை மேற்கொள்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *