இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக திகழும் DIMO நிறுவனம், தென்கிழக்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய விநியோகஸ்தர்களை தாண்டி இந்த விருதை வென்றுள்ளது.
85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தின் மீதான அதிகாரத்துடன் அடையப்பட்ட இந்த சாதனையானது, Mercedes-Benz AG நிறுவனம் வகுத்துள்ள சர்வதேச தரநிலைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதில் DIMO கொண்டுள்ள அர்ப்பணிப்பே இந்த வெற்றியின் பின்னணி ஆகும். இந்த விருது, DIMO நிறுவனம் விற்பனைக்குப் பின்னர் வழங்கும் சேவையின் விசேடத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்நிகழ்வில், DIMO நிறுவனத்தின் Mercedes-Benz இன் விற்பனைக்குப் பிந்தைய சேவையின் பிரதிநிதியான அபிலாஷ் ஸ்ரீயங்கரன், ‘Top Service Adviser – Sri Lanka’ எனும் விருதைப் பெற்றார்.
Mercedes-Benz AG நிறுவனத்தின் துல்லிய சேவை கண்காணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி கருத்துக்கணிப்புகள் மூலம் DIMO வழங்கும் சேவையின் தரம் உறுதி செய்யப்படுகிறது.
DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில்: “இந்த விருது மீண்டும் கிடைத்திருப்பது, இலங்கையில் சர்வதேச தரத்திலான Mercedes-Benz விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கும் எமது உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதும், வருடாந்த சேவை கண்காணிப்புகளை மேற்கொள்வதும், வாடிக்கையாளர் பின்னூட்டங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் Mercedes-Benz AG நிறுவனம் வகுத்துள்ள சர்வதேச தரங்களுக்கேற்ப நாம் செயற்படுகிறோம். Mercedes-Benz AG அங்கீகரித்துள்ள பழுதுபார்த்து திருத்தும் வழிகாட்டல்கள், செயன்முறைகள், விசேட கருவிகள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களிடையிலான நம்பிக்கையை DIMO மேலும் வலுப்படுத்தியுள்ளது. உயர்தர உதிரிப் பாகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ உபகரணங்களின் உபயோகத்தின் மூலமே இது சாத்தியமாகிறது. Mercedes-Benz AG வழங்கும் சர்வதேச தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் மூலம் DIMO நிறுவன ஊழியர்களின் திறமை உறுதி செய்யப்படுகின்றன.” என்றார்.
வாகன இறக்குமதிகள் இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் கூட, DIMO தனது விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியமையானது, Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதன் நோக்கமாகும். விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் பழுதுபார்ப்புகளில் கவனம் செலுத்தும் பிரத்தியேக பொதிகளை DIMO அறிமுகப்படுத்தியுள்ளதோடு, வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நெருங்கிய அணுகுமுறையுடனான Mercedes-Benz Flying Doctor போன்ற சர்வதேச சேவைகள் மூலம் நவீன நுட்பங்களைச் சேர்த்து வாடிக்கையாளர் மையப்படுத்திய வசதிக்கு முன்னுரிமை வழங்கி சேவைகளை உறுதி செய்கின்றது. அத்துடன் தவறுகளை கண்டறியும் தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்துள்ளதோடு, இதன் மூலம் தவறுகளற்ற பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் உறுதி செய்யப்படுகின்றன.
24 மணி நேர வீதியிலான உதவிச் சேவையானது, அனைத்து சேவைகளுக்குமான வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதோடு, Mercedes-Benz உரிமையாளர்களுக்கு சொகுசான மற்றும் சீரான நம்பிக்கைக்குரிய அனுபவத்தை வழங்குகிறது.
Mercedes-Benz இன் இல்லமான DIMO நிறுவனம், வாகன தொழிற்துறையின் மேம்பாட்டுடன் அதிசொகுசு வாகன சேவைகளுக்கான உன்னத தரநிலைகளை ஏற்படுத்துவதற்கு தயாராகுவதோடு, ஒவ்வொரு Mercedes-Benz வாடிக்கையாளருக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கான உறுதியை கொண்டுள்ளது.